Published:Updated:

மஹாஸ்கந்த ஹோமம்: 21 நாள்களில் எண்ணிய காரியம் நிறைவேறும்! சங்கல்பிப்பது எப்படி?

முருகப்பெருமான்

முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக நாளான ஜூன் 12-ம் தேதி (2022) ஞாயிற்றுக் கிழமை அன்று (வளர்பிறை, விசாக நட்சத்திரம்) மாலை 6 - 8 மணி வரை, நம் வாசகர்கள் நலம் பெற, ஸ்ரீமஹாஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது.

மஹாஸ்கந்த ஹோமம்: 21 நாள்களில் எண்ணிய காரியம் நிறைவேறும்! சங்கல்பிப்பது எப்படி?

முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக நாளான ஜூன் 12-ம் தேதி (2022) ஞாயிற்றுக் கிழமை அன்று (வளர்பிறை, விசாக நட்சத்திரம்) மாலை 6 - 8 மணி வரை, நம் வாசகர்கள் நலம் பெற, ஸ்ரீமஹாஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது.

Published:Updated:
முருகப்பெருமான்

வேலன், சேயோன், முருகன் என்றெல்லாம் போற்றப்படும் முருகப்பெருமான் தமிழ் நிலத்தின் ஆதிக்கடவுளரில் ஒருவன். தமிழும் தமிழரும் உலகெங்கும் பரவி வளர்ந்த காலத்தில் முருக வழிபாடும் உலங்கெங்கும் வளர்ந்தது. 'வியே துஓ' என்ற பெயரில் கந்தன் இன்றும் பல பழைமையான சீன கோயில்களில் புத்தரின் எதிரே சேனாதிபதியாக வீற்றிருக்கிறான். ஆதியில் புதையல்களின் காவலனாக முருகப்பெருமான் ஜப்பானில் வணங்கப்பட்டார். இன்றும் உலகெங்கும் அதிகமான தமிழர்களால் கொண்டாடப்படும் கடவுள் முருகனே.

மஹாஸ்கந்த ஹோமம்
மஹாஸ்கந்த ஹோமம்

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முருகா என்றாலே துன்பங்கள் ஓடிவிடும் என்பது நம்பிக்கை. அவனை ஒருகால் (ஒருவேளை) நினைக்கின் இருகாலும் தோன்றும், வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும். முருகனுக்கு உகந்த வழிபாடுகளில் மஹாஸ்கந்த ஹோமம் உன்னதமானது. அசுரர்களை அழிக்க தேவர்கள் ஒருங்கிணைந்து செய்த உன்னத வேள்வி இது. இந்த வேள்வியில் தோன்றிய குமரன், தீய சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டி நல்லவர்களைக் காப்பேன் என்று உறுதி கூறினார். எனவே இந்த மஹாஸ்கந்த ஹோமத்தில் கலந்து கொள்பவர்களின் தடைகளும் நீங்கி, தீமைகள் விலகி நன்மைகள் கூடும் என்பது வெள்ளிடை மலை. மேலும் 'மூடிய கருப்பையும் முருகனைக் கும்பிட திறக்கும்' என்பார்கள் ஆன்றோர்கள். இந்த ஹோமத்தில் கலந்து கொள்பவர்களுக்கு சந்தான பிராப்தமும் உண்டு என்கிறார்கள் பெரியோர்கள்.

முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக நாளான ஜூன் 12-ம் தேதி (2022) ஞாயிற்றுக் கிழமை அன்று (வளர்பிறை, விசாக நட்சத்திரம்) மாலை 6 - 8 மணி வரை, நம் வாசகர்கள் நலம் பெற, ஸ்ரீமஹாஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தை உச்சுவாடி பிரம்மரந்தீஸ்வரர் கோயில் நிர்வாகமும் உங்கள் சக்தி விகடனும் இணைந்து நடத்த உள்ளோம். மேலும் வைகாசி விசாக நாள் முழுவதும் பால் குட ஊர்வலம், மூலவர் – உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு யாகங்கள், அர்ச்சனைகள் போன்ற வைபவங்கள் நடைபெற உள்ளன.

உச்சுவாடி முருகப்பெருமான்
உச்சுவாடி முருகப்பெருமான்

திருவாரூர் மாவட்டம், வடபாதி மங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த உச்சுவாடி கிராமத்தில் உள்ள பிரம்மரந்தீஸ்வரர் கோயிலில் முருகப்பெருமான் ஈசனை வழிபட்டு, அவரிடம் இருந்து சித்த யோகக்கலைகளைக் கற்றார் என்கிறது இந்த ஊர் தலபுராணம். அதுமட்டுமா, இங்குள்ள ஈசன் பிரம்மரந்தீஸ்வரர் என்ற பெயரில் தலையில் வடுவோடு யோகமூர்த்தியாகக் காட்சி தருகிறார். இங்குள்ள முருகப்பெருமானும் யோக வடிவாக, ஞான குருவாக அருளுகிறார். மேலும் மிகப் பழைமையான திருமேனியராக, சித்தர்கள் ஸ்தாபித்த பாஷாண மூர்த்தியாக எழுந்தருளி இருக்கிறார் முருகன்.

வெண்ணாற்றங்கரையில் உள்ள இந்த திருத்தலம் யோக-சித்த கலைகளைப் பயில்பவருக்கு அற்புதமான ஊராகவும் போற்றப்படுகிறது. யோகக்கலையில் பிரம்மரந்திரம் என்றால் ஆதாரச் சக்கரங்களில் சகஸ்ராரம், அதற்கு மேல் துவாதசந்தம் ஆகிய பகுதிகளைக் குறிக்கும். இங்குள்ள ஈசன் தலையில் வடுவுடன் யோகக்கலைகளை ஸித்திக்கும் ஆதிகுருவாக அமர்ந்துள்ளார். அவருக்குத் துணையாக அம்பிகை பிரம்மகுந்தளாம்பிகையாக எழுந்தருளி இருக்கிறாள். இங்கு வந்து வழிபட்டால் ஞானமும் வித்தைகளில் தேர்ச்சியும் பெறலாம். எடுத்த காரியத்தில் வெற்றி பெறலாம் என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்! அதுமட்டுமா, இங்குதான் அர்ஜுனன் பாசுபத ஆயுதம் பெற்றான் என்கிறது தலவரலாறு. ஈசனிடம் ஆசி பெற, இங்கு வந்து சகாதேவன் வழிபாடு செய்து வரங்கள் பெற்றான் என்றும் சொல்லப்படுகிறது.

உச்சுவாடி பிரம்மரந்தீஸ்வரர்
உச்சுவாடி பிரம்மரந்தீஸ்வரர்

புராணச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட இந்த ஊரில் மகத்தான மகாஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது. அக்னி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, செவ்வாய் ஆகிய ஐவரின் அம்சத்தையும் தன்னுள் கொண்டவன் முருகப்பெருமான். இதனால் முருகனை வழிபட சகல தோஷங்களும் நீங்கும். செவ்வாய் உண்டாக்கும் சகல தடைகளும் விரயங்களும் நீங்கும். குருபார்வை பலமாகி மங்கல காரியங்கள் நடைபெறும். அதிகார பலமும் அளவற்ற செல்வ வளமும் சேரும். நல்ல உறவுகளை உருவாக்கித் தருபவன் முருகன், எனவே மகாஸ்கந்த ஹோமத்தில் கலந்து கொண்டு வழிபட்டால் உறவுச் சிக்கல்கள் நீங்கி உன்னத நிலையை அடையலாம்.

கடன் தொல்லைகள், தீராத நோய்கள், வியாபார - தொழில் மந்தம், யாவும் விலக இந்த ஹோமம் நிச்சயம் கைகொடுக்கும் எனலாம். இந்த ஹோமத்தில் கலந்து கொண்டவரின் பிரார்த்தனைகள் யாவும் நிச்சயம் 21 நாள்களில் நீங்கும் என்பதும் ஆன்றோர்கள் சொல்லும் நம்பிக்கை எனலாம். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர, திருமண தடை அகல, தீய பழக்கங்களில் இருந்து மீள, உறவுகள் பலப்பட, நிச்சயம் இந்த வழிபாடு உதவும் எனலாம்.

உச்சுவாடி  கோயில்
உச்சுவாடி கோயில்

அபிஷேகத்துக்குப் பழனி, அலங்காரத்துக்கு செந்தூர், அர்ச்சனைக்குப் பரங்குன்றம், தரிசனத்துக்கு சுவாமிமலை, விழாவுக்குத் திருத்தணி, ஏகாந்தத்துக்கு பழமுதிரும் சோலை என்பார்கள். உச்சுவாடி முருகப்பெருமானோ சகலத்துக்குமாய் இங்கே வீற்றிருக்கிறான். எனவே இவனை வணங்கி, இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு பலன் பெறுங்கள்!

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்)

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism