Published:Updated:

மகாஸ்கந்த ஹோமம்: மங்கல காரியங்கள் யாவும் விரைந்து நடைபெற வைக்கும் ஹோமம்! நீங்களும் சங்கல்பியுங்கள்!

பிரம்மரந்தீஸ்வரர் கோயில்

இத்தனை சிறப்புமிக்க இந்த ஹோமத்தை இந்த ஆண்டு வைகாசி விசாக நாளான ஜூன் -12 ம் தேதி (2022) ஞாயிற்றுக் கிழமை அன்று (வளர்பிறை, விசாக நட்சத்திரம்) மாலை 6- 8 மணி வரை, நம் வாசகர்கள் நலம் பெற, நடத்த உள்ளோம். அதுவும் எங்கு தெரியுமா?

மகாஸ்கந்த ஹோமம்: மங்கல காரியங்கள் யாவும் விரைந்து நடைபெற வைக்கும் ஹோமம்! நீங்களும் சங்கல்பியுங்கள்!

இத்தனை சிறப்புமிக்க இந்த ஹோமத்தை இந்த ஆண்டு வைகாசி விசாக நாளான ஜூன் -12 ம் தேதி (2022) ஞாயிற்றுக் கிழமை அன்று (வளர்பிறை, விசாக நட்சத்திரம்) மாலை 6- 8 மணி வரை, நம் வாசகர்கள் நலம் பெற, நடத்த உள்ளோம். அதுவும் எங்கு தெரியுமா?

Published:Updated:
பிரம்மரந்தீஸ்வரர் கோயில்

இத்தனை சிறப்புமிக்க இந்த ஹோமத்தை இந்த ஆண்டு வைகாசி விசாக நாளான ஜூன் -12 ம் தேதி (2022) ஞாயிற்றுக் கிழமை அன்று (வளர்பிறை, விசாக நட்சத்திரம்) மாலை 6- 8 மணி வரை, நம் வாசகர்கள் நலம் பெற, நடத்த உள்ளோம்.

பிரம்மரந்தீஸ்வரர் கோயில்
பிரம்மரந்தீஸ்வரர் கோயில்

தேவர்களின் சேனாதிபதி முருகப்பெருமான், அவனை வணங்க நவகிரகங்கள் யாவும் நலமே அருளும். கந்தனை வணங்க மும்மூர்த்திகளின் அருளும் கிட்டும். அதனால் கந்தனை வணங்கினால் காலமும் நம்மை ஆசிர்வதிக்கும். கந்தனை வழிபடும் எந்த முறைகளும் நன்மையை அளிப்பன என்கிறது வேதம். அதிலும் மகா ஸ்கந்த ஹோமம் என்பது ஹோமங்களில் முதன்மையானது என்கிறது புராணங்கள். தீய அசுர சக்திகளின் சங்கடங்கள் நீங்க, தேவாதி தேவர்கள் யாவரும் கூடிச் செய்த மகா ஹோமம் இது. இதன் பலனாகவே அசுர சக்திகள் நீங்கி, மங்கலங்கள் யாவும் இந்த மண்ணில் கூடின; எண்ணிய விருப்பங்கள் யாவையும் நிறைவேற்றும் இந்த மகா ஸ்கந்த ஹோமம், அரிதினும் அரிதாக நடைபெறக் கூடியது.

அதிலும் முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக நாளில் இந்த ஹோமத்தை நடத்தினால், சகல தடைகளும் விலகி நன்மைகள் கைகூடும் என்கின்றன புராணங்கள். காரணம் இதே நாளில்தான் தேவர்களும் இந்த ஹோமம் நடத்தி முருகப்பெருமானுக்கு வெற்றியைத் தேடி தந்தார்கள் என்கின்றன புராணங்கள். மேலும் முருகப்பெருமான் நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி. தைரியம், வீரம், வீடு மனை, வாகனப் ப்ராப்தம், ரத்தம் சம்பந்தமான உறவுகள், விரயமற்ற செல்வம், தீய பழக்கங்கள் போன்ற பல விஷயங்களுக்கு செவ்வாயே காரணம் என்கின்றன ஜோதிட நூல்கள். இந்த செவ்வாயைக் கட்டுப்படுத்தி நலம் பெறச் செய்ய இந்த ஹோமம் உதவி செய்யும். தோஷங்களை நீக்கி மாங்கல்ய வரம் அருளவும் இந்த ஹோமம் உதவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரம்மரந்தீஸ்வரர்
பிரம்மரந்தீஸ்வரர்

இத்தனை சிறப்புமிக்க இந்த ஹோமத்தை இந்த ஆண்டு வைகாசி விசாக நாளான ஜூன் -12 ம் தேதி (2022) ஞாயிற்றுக் கிழமை அன்று (வளர்பிறை, விசாக நட்சத்திரம்) மாலை 6- 8 மணி வரை, நம் வாசகர்கள் நலம் பெற, நடத்த உள்ளோம். அதுவும் எங்கு தெரியுமா?

திருவாரூர் மாவட்டம், வடபாதி மங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த உச்சுவாடி கிராமத்தில் உள்ள பிரம்மரந்தீஸ்வரர் கோயிலில் தான். இங்குதான் அர்ஜுனன் பாசுபத ஆயுதம் பெற்றான் என்கிறது தலவரலாறு. இங்கு அர்ஜுனனும் சகாதேவனும் வழிபட்ட ஈசன், பிரம்மரந்தீஸ்வரர் என்ற பெயரில் தலையில் வடுவோடு காட்சி தருகிறார். இங்குள்ள முருகப்பெருமான் யோக வடிவாக ஞான குருவாக அருளுகிறார் என்பதும் விசேஷம். வெண்ணாற்றங்கரையில் உள்ள இந்த திருத்தலம் யோக-சித்த மார்க்கத்தில் அற்புதமான ஊராகவும் போற்றப்படுகிறது. யோகக்கலையில் பிரம்மரந்திரம் என்றால் சகஸ்ராரம், அதற்கு மேல் துவாதசந்தம் ஆகிய பகுதிகளைக் குறிக்கும். இங்குள்ள ஈசன் தலையில் வடுவுடன் யோகக்கலைகளை ஸித்திக்கும் ஆதிகுருவாக அமர்ந்துள்ளார். அவருக்குத் துணையாக அம்பிகை பிரம்மகுந்தளாம்பிகையாக எழுந்தருளி இருக்கிறாள். இங்கு வந்து வழிபட்டால் ஞானமும் வித்தைகளில் தேர்ச்சியும் பெறலாம். எடுத்த காரியத்தில் வெற்றி பெற இங்கு வந்து வழிபடுவது மிகுந்த பயனைத்தரும் என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்!

பிரம்மகுந்தளாம்பிகை
பிரம்மகுந்தளாம்பிகை

பழைமையும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க இந்த ஆலயத்தில் எழுந்தருளி உள்ள பைரவர், சண்டிகேஸ்வரர் என அனைத்து மூர்த்தங்களும் சிறப்பான அமைப்பைக் கொண்டவர்கள். இன்றும் சித்தர்களும் ரிஷிகளும் அரூபமாக வந்து வழிபடும் இந்த ஆலயத்தில் நடைபெறும் இந்த மகாஸ்கந்த ஹோமம் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றக்கூடியது எனலாம்.

ஸ்ரீமுருகப்பெருமான்
ஸ்ரீமுருகப்பெருமான்

இதே ஆலயத்தில் இங்கு எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமுருகப்பெருமான், மிகப் பழைமையான திருமேனியராக, சித்தர்கள் ஸ்தாபித்த பாஷாண மூர்த்தியாக எழுந்தருளி இருக்கிறார். இந்த தலத்தில் ஈசனிடம் சீடராக இருந்து முருகப்பெருமான், யோகக்கலை, வர்ம முறைகளைக் கற்றுக் கொண்டார் என்கிறது தலவரலாறு. இதனால் இந்த ஆலயம் யோகம், மருத்துவம், வர்மம், வீரக்கலைகள் பயில்பவருக்கு முக்கியமாக உள்ளன. இங்குள்ள ஏழு கிணறுகள் எக்காலத்திலும் வற்றுவதில்லை. இதுவே இங்கு தல தீர்த்தமாக உள்ளன. இது ஏழு ஆதார சக்திகளின் வடிவாக உள்ளன. மேலும் இங்கு சூட்சுமமான பல அதிசயங்கள் தென்படுகின்றன. தலையில் வடுவோடும் சுழியோடும் அதிசயமாகக் காணப்படும் ஈசன், நம் தலை எழுத்தை மாற்றக்கூடியவன் என்றும் போற்றப்படுகிறார். இத்தனை அற்புதங்களும் மகிமைகளும் கொண்ட தலத்தில்தான் வைகாசி விசாகத்தை நாம் கொண்டாடப்போகிறோம்.

இந்த ஆண்டு வைகாசி விசாக நாளான ஜூன் -12 ம் தேதி (2022) ஞாயிற்றுக் கிழமை அன்று (வளர்பிறை, விசாக நட்சத்திரம்) மாலை 6- 8 மணி வரை, நம் வாசகர்கள் நலம் பெற, ஸ்ரீமஹாஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தை பிரம்மரந்தீஸ்வரர் கோயில் நிர்வாகமும் உங்கள் சக்தி விகடனும் இணைந்து நடத்த உள்ளோம். மேலும் வைகாசி விசாக நாள் முழுவதும் பால் குட ஊர்வலம், மூலவர் – உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு யாகங்கள், அர்ச்சனைகள் போன்ற வைபவங்கள் நடைபெற உள்ளன.

பிரம்மரந்தீஸ்வரர் கோயில்
பிரம்மரந்தீஸ்வரர் கோயில்

இந்த ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் மங்கல காரியங்கள் யாவும் விரைந்து நடைபெறும். ஆயுள் ஆரோக்கியம் கூடும். நீடித்த புகழ் கூடும். நிலைத்த மங்கல வாழ்வு, விரும்பிய எண்ணங்கள் கைகூடும். வேலை வாய்ப்பு, வியாபார விருத்தி, செல்வவளம் யாவும் பெருகும். அச்சமற்ற நிலை, விரயமற்ற செல்வம், பிள்ளைகளின் தீய பழக்க வழக்கங்கள் மாறும். நிம்மதியான வாழ்வு, உறவுப் பிரச்னைகள் அற்ற சூழல், திருஷ்டி-எதிரிகளின் பிரச்னைகள் நீங்கும். சொத்து தொடர்பான தொல்லைகள் நீங்கும் என்கிறார்கள் பெரியோர்கள். மேலும் அதிகாரம் மிக்க பதவிகளை அடையவும், அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருகவும் இந்த சிறப்பு மிக்க ஹோமம் நிச்சயம் வழி வகுக்கும் என்கிறார்கள்.

மஹாஸ்கந்த ஹோமம்
மஹாஸ்கந்த ஹோமம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம்+ரட்சை) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism