Published:Updated:

விண்ணாம்பாறை மகாவிஷ்ணு!

மகாவிஷ்ணு!
பிரீமியம் ஸ்டோரி
News
மகாவிஷ்ணு!

சேதி சொல்லும் சிற்பம்!

திருச்சி பார்த்திபன்

விழுப்புரம் தொண்டூர் கிராமத்தின் வயல்வெளியில் உள்ள ஒரு பெரிய பாறையில் மகாவிஷ்ணுவின் சயனக்கோலச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிற்பம், மூன்றாம் தந்திவர்மப் பல்லவன் காலத்துச் சிற்பமாகக் கருதப்படுகிறது. சயனக்கோலத்தில் நீளம் அதிகமான கிரீடம், காதில் மகர குண்டலங்கள், கழுத்தில் பட்டையான ஆபரணங்கள், இடுப்பில் பட்டாடை துலங்க, மிக அழகுடன் திகழ்கிறது இந்தச் சிற்பம். பெருமாளின் சிரத்துக்கு மேல் ஐந்து தலை நாகம் படமெடுத்துத் திகழ்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சிலைக்கு அருகே தந்திவர்மப் பல்லவனின் கல்வெட்டும் ராஜராஜ சோழனின் சகோதரரான, `பாண்டியன் தலைகொண்ட’ ஆதித்த கரிகாலனின் கல்வெட்டும் உள்ளன. இக்கல்வெட்டு வாயிலாக இறைவன் பெயர் `கிடந்த பெருமாள்’ எனத் தெரியவருகிறது!

விண்ணாம்பாறை மகாவிஷ்ணு
விண்ணாம்பாறை மகாவிஷ்ணு

இந்தப் பெருமாளுக்குத் தினமும் விளக்கெரிக்க ஆடுகளைத் தானம் கொடுத்த விவரத்துடன், இந்த அறச்செயலைத் தவறாமல் கடைப் பிடிப்பவரின் பாதம் என் தலைமேலே என்றும் கூறுகிறார், மாபெரும் வீரரான ஆதித்த கரிகாலன்.

இயற்கையான சூழலில், மனத்துக்கு ரம்மியமான வயல்வெளியில் இச்சிற்பம் தன் பழைமை மாறாது இருப்பது சிறப்பு. எனினும், அவ்வப்போது உரிய மராமத்துப் பணியை செய்யாமல்விட்டதால், அடித்தளம் பாழ்பட்டு கிடந்தது. இதனால் விழும் நிலையிலிருந்த சிற்பத்தை சில தனியார் அமைப்புகள் அரும்பாடுபட்டு மீட்டெடுத்து வருகின்றன.