Published:Updated:

காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

காலக்ஞானி வீர பிரம்மேந்திரரின் சரிதம் - பாபா மாமி ரமா சுப்பிரமணியன்

காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

காலக்ஞானி வீர பிரம்மேந்திரரின் சரிதம் - பாபா மாமி ரமா சுப்பிரமணியன்

Published:Updated:
வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்
தங்களின் தந்தை ஸ்வாமி வீரபிரம்மேந் திரரின் பொருள்களை சித்தய்யா எடுத்துச் செல்வதை விரும்பாத ஸ்வாமியின் மைந்தர் கள், திருடர்கள் இருவரை நியமித்து அந்தப் பொருள்களைப் பறித்து வரும்படி ஏவினார்கள். அவர்களும் சித்தய்யாவைக் கண்டு, அவரைப் பின்புறத்திலிருந்து தாக்க முயன்றார்கள்.

அப்போது கொடூரமான புலி ஒன்று பாய்ந்து வந்தது. திருடர்கள் இருவரும் புலியைக் கண்டார்களோ இல்லையோ, கைகளில் இருந்த தடிகளைக் கீழே போட்டுவிட்டு ஓட்டம் எடுத்தனர். ஆனால் நடக்கும் நிகழ்வு களில் சிந்தையைச் செலுத்தாமல் நடந்து கொண்டிருந்தார் சித்தய்யா.

சட்டென்று தோன்றிய புலியும் அதன் உறுமலும் அவரின் கவனத்தைச் சிறிது ஈர்க்கவே, நின்று திரும்பிப் பார்த்தார். அங்கே தரையில் இரண்டு தடிகள் மட்டும் கிடந்தன. புலியும் மறுகணம் மாயமாய் மறைந்தது. சித்தய்யா நடந்ததை யூகித்துக்கொண்டார். எவரோ, எதன்பொருட்டோ தம்மைத் தாக்க வந்துள்ளார்கள். குருநாதரே புலியின் உருவில் வந்து காப்பாற்றியிருக்கிறார் என்பதை அறிந்து ஸ்வாமி வீரபிரம்மேந்திரருக்கு மனதார நன்றி கூறி, வணங்கிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்.

விரைவில் சித்தய்யா தன்னுடைய சொந்த கிராமமான முதுமூலாவை அடைந்தார். அவரைக் கண்டதும் பெற்றோர் மகிழ்ந்தனர். 12 வருடங்கள் கழித்து வந்த மகனை, அவரின் தாயார் மகிழ்வோடு தழுவிக்கொண்டார். காலம் நகர்ந்தது. சித்தய்யாவுக்குத் திருமணம் முடிந்தது.

இந்த நிலையில் கண்டிமல்லய்யாபள்ளி கிராமத்தில் ஸ்வாமியின் மடத்தில், வீரபிரம்மேந்திரரின் 2-வது புதல்வரான பொட்டுலூராசார்யர் தம் பரிவாரங்களுடன் அருகிலுள்ள கிராமத்துக்கு உபன்யாசம் செய்யச் சென்றார். ஆனால் அவ்வூர் மக்கள் இவரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

வீர பிரம்மேந்திரர்
வீர பிரம்மேந்திரர்


காரணம் கேட்டபோது `வீரபிரம்மேந்திரர் இறந்தபிறகு, அவரின் மனைவி எப்படி சுமங்கலி கோலத்தில் இருக்கலாம். அவர், இன்னமும் மங்கலப் பொருள்களை அணிந்திருப்பது ஏன்... இது மாபெரும் பாவம் ஆகும். அவர் சுமங்கலிக் கோலத்தைத் துறந்து வெள்ளைநிற ஆடையை ஏற்றுக்கொண்டால், நாங்கள் உங்களை அனுமதிக்கிறோம். இல்லாவிடில் உங்கள் கையால் நாங்கள் எப்படி தீர்த்தம் வாங்க இயலும்’’ என்று கேட்டார்கள் அந்த மக்கள்.

ஸ்வாமியின் மைந்தர் பானிபென்டி என்ற அந்தக் கிராமத்து மக்களின் இந்தச் செய்கையால் மனம் வேதனை அடைந்தார். அங்கிருந்து நகர்ந்து மனிமதுகு என்ற அடுத்த கிராமத்துக்குச் சென்றார். அங்கேயும் அவரை எல்லையிலேயே தடுத்துநிறுத்தினர்.

ஸ்வாமியின் மைந்தர், தன் அன்னையில் இந்தக் கோலத்துக்கு தந்தையாரின் கட்டளையே காரணம் என்றும் அவர் இன்றும் உயிரோடு சமாதியில் இருப்பதால், அன்னைக்கு விதவைக் கோலம் வேண்டாம் எனக் கூறிவிட்டார் என்றும் தெளிவாக எடுத்துரைத்தார்.

இதைக்கேட்ட மனிமதுகு கிராம மக்கள் ``ஸ்வாமி சமாதிக் குழியில் செல்லும் நேரத்தில் அவ்வாறு கூறியிருக்கலாம். இப்போது 10 மாதங்கள் ஓடிவிட்டன. இன்னமும் அவர் உயிரோடு இருக்க சாத்தியம் இல்லை. இதைப் புரிந்துகொள்ளும் ஞானம் ஏன் உங்களுக்கு இல்லை’’ என்று கேட்டனர்.

அவர்களின் இந்த வாதத்தைக் கேட்டுக் கோபம் கொண்ட புட்லூராசார்யர் மடத்துக்குத் திரும்பினார். முன்னதாக அவரின் உதவியாளர்கள் அன்னையிடம் சென்று, `தங்களின் புத்திரர் கோபத் துடன் வந்துகொண்டிருக்கிறார்’ என்று தகவல் சொன்னார்கள். ஆகவே அன்னையார் மிகுந்த வருத்தத்துடன் மடத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தார்.

மடத்தை அடைந்த புட்லூசார்யர் தன் அன்னையிடம் ``அன்னையே! சுற்றுவட்டாரத்து மக்கள் உங்களை மிகவும் பழித்துப் பேசுகிறார்கள். 10 மாதங்களுக்குப் பிறகும் தந்தையார் சமாதியில் எப்படி உயிரோடு இருக்க முடியும் எனக் கேட்கிறார்கள். எனக்கும் அவர்களின் கருத்து சரியென்றே தோன்றுகிறது. இன்று நான் பெரும் அவமானத்தைச் சந்தித்துவிட்டேன். இனியும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. நீங்கள் உடனடியாக சுமங்கலிக் கோலத்தைத் துறந்து விடுங்கள். இல்லையே நான் உயிரை மாய்த்துக்கொள்வேன்’’ என்றார் சீற்றத்துடன்.

கோவிந்தம்மா மனம் பதைபதைத்துப் போனார். ``மகனே! மற்றவர்களைப் போலவே நீயும் பேசலாமா. உன் தந்தையின் வாக்கே எனக்கு வேதவாக்கு என்பது உனக்குத் தெரியாதா? ஊர் மக்கள் என்ன கூறினாலும் சரி... நான் ஸ்வாமியின் வார்த்தையை மீறமாட்டேன்’’ என்று கூறியவர், திடுமென ஆவேசம் வந்தவராக... ``பானிபென்டி மற்றும் மனிமதுகு கிராமத்தில் எவர் உன்னிடம் தகாத வார்த்தைகள் கூறினாரோ, அவர்களின் குலம் நாசமடையும். இது நான் வழங்கும் சாபம் ’’ என்றார்.

அந்த அன்னையின் சாபம் பலித்தது. ஸ்வாமியின் மகனிடம் அவரின் அன்னையைக் குறித்து பழித்துப் பேசியவர்கள் அனைவரும் நோய்களால் பீடிக்கப்பட்டும், மக்களால் விரட்டியடிக்கப்பட்டும் துன்பத்தை அனுபவித்தார்கள்; வாழ்வை இழந்தார்கள்.

ஆனால் பொட்லூசார்யரின் மனம் அமைதி அடையவில்லை. தந்தையாரின் சமாதியை உடைத்து அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதை அறியலாமா என்று கூட யோசிக்கத் தொடங்கினார். அவ்வப்போது அன்னையிடம் சென்று சுமங்கலிக் கோலத்தைத் துறக்கும்படியும் வற்புறுத்தினார். ஆனால் கோவிந்தம்மா ``மகனே! உன் தந்தையின் வாக்கில் சந்தேகம் வேண்டாம். நீ சோதிக்க நினைத்தால் அவரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். நீ துன்பப்படுவாய்’’ என்று உறுதிபடக் கூறினார்.

வீரபிரம்மேந்திரர் அவருக்கும் அவரின் சகோதரர்களுக் கும் தந்தை. எனினும் இவர்கள் அவரைக் குருவாக ஏற்றுக்கொண்டார்கள். ஆக குருவின் வார்த்தைகளை நம்ப மறுப்பது பாவம். ஆனால் விதிப்பயன் பொட்லூராசார்யாவின் மனம் குருவாகிய தந்தையின் வாக்கில் நம்பிக்கை வைக்க மறுத்தது.

கோவிந்தம்மாவின் வருத்தம் அதிகரித்தது. அவர் ``மகனே! நீ முதுமூலா கிராமத்துக்குச் சென்று சித்தய்யாவிடம் கேட்டு உன் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்’’ என்று மகனுக்கு அறிவுரை சொன்னார். பொட்லூரய்யாவும் தாயின் கருத்தை ஏற்றுக்கொண்டு முதுமூலா கிராமத்துக்குப் புறப்பட்டார்.

அங்கே இவரை அன்புடன் வரவேற்றார் சித்தய்யா. பொட்லூரய்யாவின் சந்தேகத்தைக் கேட்டதும் ``தயைகூர்ந்து தவறான முடிவை மேற்கொள்ள வேண்டாம். ஸ்வாமியின் வார்த்தைகள் பொய்க்காது. ஸ்வாமி இறைவனின் அவதாரம்’’ என்றார் சித்தய்யா. மட்டுமன்றி ஸ்வாமியின் பெருமைகளையெல்லாம் எடுத்துரைத்தார்.

ஆனால் பொட்லூரய்யா ஆத்திரம் கொண்டார். ``சித்தய்யா! போதும் நிறுத்து. என் தந்தையைப் பற்றி நீ கூறி நான் தெரிந்துகொள்ளும் அவசியம் எனக்கு இல்லை’’ என்று கூறிவிட்டு மடத்துக்குத் திரும்பினார். தன் அன்னையிடம் சித்தய்யாவின் உபதேசத்தால் என் மனம் அமைதி அடைந்துவிட்டது’’ என்று பொய் உரைத்தார். கோவிந்தம்மாவின் மனம் நிம்மதி அடைந்தது.

அன்று இரவு உணவுக்குப் பிறகு அனைவரும் உறங்கச் சென்றனர். பொட்லூரய்யா மட்டும் உறங்கவில்லை. மெள்ள எழுந்து சமாதியின் அருகில் வந்தார். தாம் எடுத்து வந்த ஆயுதத்தால் சமாதியின் மேற்புறத்தைப் பெயர்த்தெடுகும் வேலையை ஆரம்பித்தார். விரைவில் அவரின் முயற்சி பலித்தது; சமாதியின் மேற் புறத்தைப் பெயர்த்து அகற்றினார். தொடர்ந்து, உள்ளே பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

சமாதிக் குழியில் இறங்கியபோது எந்த நிலையில் ஸ்வாமி இருந்தாரோ, அதே நிலையில் பத்மாசனத்தில் அமர்ந்து தியானித்துக் கொண்டிருந்தார். அவரின் திருமேனி சற்றும் பொலிவு குறையாமல் இருந்தது. அப்போதும் சந்தேகம் தீராத பொட்லூரய்யா `ஒருவேளை... உட்கார்ந்த நிலையிலேயே உயிர் துறந்திருக்கலாம். எதற்கும் உள்ளே இறங்கி சோதித்துப் பார்க்கலாம்’ என்று முடிவெடுத்தார்.

சமாதிக்குழிக்குள் இறங்கி ஸ்வாமியின் தொளைத் தொட்டு உலுக்கி, `தந்தையே!’ என்று அழைத் தார். ஸ்வாமி நிர்விகல்ப சமாதி நிலையை அடைந்து விட்டதால், ஏகாந்தமாக எவ்வித உணர்வுமின்றி தியானத்தில் திளைத்திருந்தார்.

ஆனால் இதைப்பற்றி அறியாத பொட்லூரய்யா தந்தையின் முகத்தைத் தன்பக்கம் திருப்ப முயற்சி செய்தார். அத்துடன் ``தந்தையே! தாங்கள் உயிருடன் தான் இருக்கிறீர்களா? என் சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள்’’ என்றும் அரற்றினார்.

அவரின் அறியாமையை என்னவென்பது. கர்மவினை மோசமாக இருந்தால், அவர் யோகியின் மைந்தனாகவே இருந்தாலும் வினைப் பயனிலிருந்து தப்ப முடியாது. இதற்கு பொட்லூரய்யாவே சாட்சி!

தொடர்ந்து அவருடைய செய்கைகளால் ஸ்வாமியின் தவம் கலைந்தது. கோபத்துடன் கண் விழித்தவர், ``யார் எனது நிர்விகல்ப சமாதி நிலையைக் கலைத்தது?’ என்று கர்ஜித்தார்.

பொட்லூரய்யா நடுநடுங்கிப் பொனார்!

- தரிசிப்போம்...

வேண்டியதைக் கொடுப்பார் இறைவன்!

தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்க வேண்டும் என்று நாள்தோறும் பிள்ளையாரை வழிபட்டு வந்தான் சிறுவன் ஒருவன். தேர்வு முடிவு வந்தது. அவன் விரும்பியது நடக்கவில்லை.

ஆகவே பிள்ளையாரிடம் சென்று குறைபட்டுக் கொண்டான். அப்போது பிள்ளையார் அவனிடம், ``தேர்வு தொடங்கிய முதல் நாள் ஒரு விபத்து நேர்ந்ததே... நினைவிருக்கிறதா?'' எனக் கேட்டார்.

``ஆம், பெரியவர் ஒருவர் என்னைப் பற்றி இழுத்து வாகன விபத்திலிருந்து காப்பாற்றினார்'' என்றான் சிறுவன்.

``அந்தப் பெரியவர் நான்தான். நீ என்னை வழிபட்டதால் உண்டான புண்ணிய பலனை உனக்குக் கொடுத்து, உன் உயிரைக் காப்பாற்றினேன். உனக்குப் பரீட்சை முக்கியமாக இருந்தது. எனக்கு உன் உயிர் முக்கியமாகத் தெரிந்தது. உன் பிரார்த்தனைக்கான பலனை எப்போது, எப்படி உனக்குத் தருவது என்பதை நான் அறிவேன்'' என்று கூறி மறைந்தார்.

விநாயகர்
விநாயகர்


பெரியவர் ஒருவர் சொன்ன கதை இது. ஆம்... இறைவன் நாம் வேண்டுவதைக் கொடுப்பதில்லை; நமக்கு வேண்டியதைக் கொடுக்கிறார்!

- க.பாலு, திருச்சி-4