Published:Updated:

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்

Published:Updated:
வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

ஸ்ரீமந் நாராயணரும் சர்வேஸ்வரருமே மகாயோகி காலக்ஞானி வீரபிரம்மேந்திரர் மற்றும் சித்தேஸ்வரராக பூவுலகில் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டி அனைவருக்கும் அருள்பாலித்து வருகின்றனர் என்பது பக்தர்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

மகாயோகி காலக்ஞானி வீரபிரம்மேந்திரர்
மகாயோகி காலக்ஞானி வீரபிரம்மேந்திரர்


இன்றளவும் வீரபிரம்மேந்திரர் ஜீவசமாதி ஆலயத்தில் வருடம் தோறும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. அப்போது உலகெங்கிலும் உள்ள அவரின் பக்தர்கள், கண்டிமல்லயாபள்ளி கிராமத்துக்கு வருகை தந்து பூஜைகளும் அன்னதானமும் செய்து வழிபட்டுச் செல்கின்றனர்.

வருடம்தோறும் வைகாசி வளர்பிறை தசமியில் வீரபிரம்மேந்திர ஸ்வாமி ஜீவசமாதி நாள் - குருபூஜையும்; வளர்பிறை துவாதசியில் மகா பூஜையும் நடைபெறுகிறது. அதேபோல் ஐப்பசியில் தேவி நவராத்திரி உற்சவம், மார்கழியில் ஈஸ்வரம்மா தேவி ஆராதனை, மகா சிவராத்திரி உற்சவம், பிரம்மங்காரு-கோவிந்தம்மா திருக்கல்யாண உற்சவம், கோவிந்தம்மா ஆராதனை ஆகிய வைபவங்களும் மடத்தில் சிறப்புற நிகழ்கின்றன.

ஆந்திர மாநிலம் கடப்பாவுக்குச் சென்னையிலிருந்து பேருந்து, ரயில் மற்றும் விமானம் மூலம் பயணிக்கலாம். கடப்பாவில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ளது கண்டிமல்லையாபள்ளி கிராமம். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்தக் கிராமத்திலுள்ள பிரம்மங்காரு ஜீவசமாதியை தரிசித்த பிறகு, அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ள அவர் வாழ்ந்த இல்லத்தைத் தரிசிக்கலாம். பழைமை மாறாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது ஸ்வாமி வாழ்ந்த இல்லம். அருகிலேயே கிராம தேவதை பொலேரம்மாவையும் தரிசிக்க இயலும்.

பின்னர் இங்கிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்த முதுமூலா கிராமத்துக்குச் செல்லலாம். அங்கே ஸ்வாமியின் பரம பக்தரும் பிரதான சீடருமான சித்தய்யாவின் சமாதி அமைந்துள்ளது. இங்குதான் ஸ்வாமி வீரபிரம்மேந்திரர் பயன்படுத்திய பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஊரிலிருந்து 150 கி.மீ. தொலைவில் பனகானப் பள்ளி கிராமம் உள்ளது. வீரபிரம்மேந்திரருக்கு தமது இல்லத்தில் இடமும் உணவும் அளித்து உபசரித்த அச்சம்மாவின் இல்லம் உள்ளது. அவர் ஸ்வாமியின் மீதான பக்தியால் தனது இல்லத்தையே ஆலயமாக மாற்றிவிட்டார். இங்குள்ள மரத்தடியில் காலக்ஞானம் புனித நூலின் சில பாகங்கள், ஸ்வாமியால் மறைத்துவைக்கப்பட்டுள்ளனவாம். இவ்வூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில், ஸ்வாமி காலக்ஞானத்தை அமர்ந்து எழுதிய குகை உள்ளது.

இந்த அனைத்துத் தலங்களையும் தரிசிக்க இரண்டு நாள்களாவது தேவை. அன்பர்கள் வாய்ப்பு ஏற்படுத்திக்கொண்டு, ஒருமுறையேனும் குடும்பத்துடன் சென்று இந்தத் தலங்களை தரிசித்து ஸ்வாமி வீரபிரம்மேந்திரரின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று வரலாம்.

தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் அல்லிமா நகரத்தின் அருகில் வீரப்ப ஐயனார் கோயில் உள்ளது. இங்குதான் சுவாமிகள் பல ஆண்டு காலம் தவம் இருந்தார். ஐயனாராக ஊரையும் மக்களையும் காத்து வருவதால், வீரப்பையா சுவாமிகளை வீரப்ப ஐயனார் என்று அழைத்தனர் எனும் தகவல் உண்டு. அதேபோல், வீரபிரம்மேந்திர ஸ்வாமிகள் திருவரங்கம் கோயில் மற்றும்பல கேரளக் கோயில்களுக்குச் சென்று தரிசித்து வழிபட்டதாகவும் தகவல் உண்டு.

ஸ்வாமிகள், சென்னையில் சூளை எனும் இடத்துக்கும் வருகை தந்தார். அங்கே தன் சீடர்கள் பலருக்கும் நல்லுபதேசம் செய்தார். அவர்களில் ஒருவரான வீரசுப்பையா, மடம் ஒன்றை ஏற்படுத்தி மக்களுக்குச் சேவை செய்து அங்கேயே ஜீவசமாதி அடைந்தார். வீரசுப்பையா மடம் பெரம்பூர், பேரக்ஸ் சாலையில் மாணிக்கம் தெருவில் அமைந்துள்ளது. அன்பர்கள் இந்த இடங்களுக்கும் சென்று வழிபட்டு குருவருளைப் பெற்று வரலாம்.

வீரபிரம்மேந்திரர் ஜீவசமாதி அடையும் முன்னர், ஊர் மக்களும் கர்நூல் நவாபும் ஸ்வாமியிடம் அவரை பூஜித்து வழிபடுவதற்கான மந்திரத்தை தந்து அருளும்படி வேண்டிக்கொண்டனர்.

அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று, என்றென்றும் தன் பக்தர்களைக் காத்து ரட்சிக்கும் வண்ணம், `வீரபிரம்ம கவசம்’ என்ற ஸ்லோகத்தையும், `வீர நாமாவளி’ என்ற தன் நாமங்களையும் அருளினார். அனுதினமும் ஸ்வாமியை மனதார தியானித்து கவசம், மற்றும் நாமாவளி துதியைச் சொல்லி வழிபட்டு வந்தால், சகல செளபாக்கியங்களும் உண்டாகும். ஸ்வாமியின் திருவருள் நம்மையும் நம் சந்ததியையும் எப்போதும் காத்து நிற்கும். குருவைப் போற்றி வணங்குவோம் குருவருள் பெற்று மகிழ்வோம்!

வீர நாமவளி:

ஓம் வீராய நமஹ

ஓம் வீரானனாய நமஹ

ஓம் வீராதிவீராய நமஹ

ஓம் வீரபயங்கராய நமஹ

ஓம் வேதாந்த வேத்யாய நமஹ

ஓம் வேதவேத்யாய நமஹ

ஓம் வீராகமரகண்யாய நமஹ

ஓம் ஆதிமத்யாந்தரஹிதாய நமஹ

ஓம் சூரிய நாராயணாய நமஹ

ஓம் கபர்தினே நமஹ

ஓம் அனந்தாய நமஹ

ஓம் ஆச்ரிதபாரிஜாதாய நமஹ

ஓம் லக்ஷ்மீவல்லபாய நமஹ

ஓம் ஸ்ருஷ்டிஸ்திதிலயஹேது பூதாத்மகாய நமஹ

ஓம் சிவாய நமஹ

ஓம் மகேச்வராய நமஹ

ஓம் ஸர்வவியாபிநே நமஹ

ஓம் சம்பவே நமஹ

ஓம் சசிரேகாய நமஹ

ஓம் ஸர்வதீர்த்த கோசராய நமஹ

ஓம் சதுர்வித மோக்ஷபலப்ரதாய நமஹ

ஓம் பீதாம்பராய நமஹ

ஓம் வாஸுதேவாய நமஹ

ஓம் விரூபாக்ஷாய நமஹ

ஓம் அபேத்யாய நமஹ

ஓம் மஹாலக்ஷ்மீப்ரதாய நமஹ

ஓம் நீலலோஹிதாய நமஹ

ஓம் வீராசார்யாய நமஹ

ஓம் குரவே நமஹ

(நிறைவுற்றது)


துர்காதேவி சரணம்!

ராகுவின் அதி தேவதையான துர்கை. பொதுவாக வடக்கு நோக்கியே காட்சி தருவாள். கதிராமங்கலத்தில் மட்டும் அவள், கிழக்கு நோக்கி, லட்சுமியின் அம்சமாக தாமரைப் பூவில் எழுந்தருளி இருப்பது சிறப்பு.

கங்கை கொண்ட சோழபுரத்தின் வடக்கு வாயிலில் துர்கைக்கு தனியே சிறு கோயில் ஒன்று உள்ளது. இங்கு பதினெட்டு கரங்களுடன் தரிசனம் தருகிறாள் துர்கை. சிதம்பரம் கிழக்கு கோபுரத்தின் உட்புறம் வடக்கு கோஷ்டத்தில் உள்ள துர்கைக்கும் பதினெட்டுக் கரங்கள்.

ராமேஸ்வரம் கோயிலில் வெள்ளைக் கல்லாலான துர்கை உள்ளாள்.

திருநெல்வேலி- கங்கை கொண்டான் என்ற ஊருக்கு அருகிலுள்ள பராஞ்சேரி என்ற தலத்தில் பள்ளி கொண்ட துர்கை சந்நிதி உள்ளது.

செஞ்சிக்கும், வந்த வாசிக்கும் இடையில் உள்ளது தாதாபுரம். இங்குள்ள ரவிகுல மாணிக்கேஸ்வரர் கோயில் வடக்கு கோஷ்டத்தில் எட்டுக் கரங்களுடன் காட்சி தரும் துர்கையின் ஒரு கரத்தில் கிளி உள்ளது.

- கே.மீனாட்சி, விழுப்புரம்