Published:Updated:

ராஜராஜனுக்கு மணிமகுடம்!

மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

காஞ்சி மகா பெரியவரின் அனுக்ரஹம் - சி.ராமு, கோவை ஓவியம்: ம.செ.

ராஜராஜனுக்கு மணிமகுடம்!

காஞ்சி மகா பெரியவரின் அனுக்ரஹம் - சி.ராமு, கோவை ஓவியம்: ம.செ.

Published:Updated:
மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

மகாபெரியவா பீடாரோஹணம் செய்த மணி விழாவைக் கொண்டாடும் வகையில், மணிகள் பொருந்திய தங்கத்தாலான மகுடத்தை அவருக்குச் சூட்டவேண்டும் என்பது, ஆந்திர பக்தர்கள் சிலரின் விருப்பம். மணிமகுடம் மட்டுமன்றி, இரண்டு லட்சம் ரூபாய் நிதியும் திரட்டி, காஞ்சி மடத்துக்குக் கொடுக்க தீர்மானித்தனர். பணமும் வசூல் செய்தனர்.

ராஜராஜனுக்கு மணிமகுடம்!

விஷயம் தெரிந்ததும் மகாபெரியவா அதை தடுத்தார். இதையடுத்து அந்தக் குழுவினர், மணி மகுடம் செய்து வைத்திருப்பதைச் சொல்லி, அதை மட்டுமேனும் தட்டாமல் ஏற்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களின் மனசை அறியாதவரா, பெரியவா. தனக்கே உரிய வாஞ்சையுடன் தலையசைத்துச் சம்மதித்தார். ஆனாலும் துறவியாக இருப்பவர், நேராகப் பொன் மகுடம் தரிக்கலாகாது எனக் கருதி, பிரதோஷத்தின்போது பூஜை வேளையில் தான் அணிகிற ருத்திராட்ச கிரீடத்தின் மேலேயே அந்தப் புதிய கிரீடத்தை வைக்கச் சொன்னார்.

15 நாள் கழித்து, வசூல் செய்து வைத்திருந்த 60,000 ரூபாயை குருக்ஷேத்திரத்தில் கீதோபதேசக் காட்சியும், கீதாபாஷ்யம் செய்த ஆச்சார்யருக்கு சலவைக் கல்லில் பிம்பம் செய்யும் நற்பணிக்குமாக அனுப்பிவைக்கும்படி, பெரியவா உத்தரவிட்டார். பக்தர்களும் அப்படியே செய்தனர்.

அப்படியெனில், பொற்கிரீடத்தை ஏற்றுக் கொண்டு விட்டாரா மகாபெரியவா? இல்லை!

பிரகதீஸ்வரருக்குத் தஞ்சைத் தரணியில் கோயில் எழுப்பியவனும், தேவாரத் திருமறைகளைக் கண்டறிய பாடுபட்டு, அவற்றைத் தினமும் ஓதுவதற்கு வழிசெய்தவனுமான மாமன்னன் ராஜராஜ சோழனிடம் மகா பெரியவாளுக்கு அளவற்ற அபிமானம் உண்டு. மன்னனின் ஆயிரமாவது ஆண்டு விழா 1984-ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது மகா பெரியவா, ராஜராஜ சோழனுக்கு அணிவிக்க, தங்கக் கிரீடத்தில் சற்றே மாறுதல் செய்து அனுப்பி வைத்தார். இதை, அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி, ராஜ ராஜ சோழனுக்குச் சூட்டி மகிழ்ந்தார்.

சந்திரசேகரரான மகா பெரியவா, சிவபாத சேகரனுக்கு மகுடம் சூட்டிப் பெருமைப்படுத்திய அதிசயம் இது!