Published:Updated:

மார்கழி முதல் நாள், திருவெம்பாவை - 1: ஆன்மாவின் விருப்பம் என்ன? அதை அடைய மார்கழி என்ன செய்யும்?

திருவெம்பாவை - 1
News
திருவெம்பாவை - 1

வைர மோதிரம் தொலைந்துவிட்டது. தொலைத்தவர் பதறிப் போவார். எப்போது அது மீண்டும் கிடைக்குமோ என்று தவித்துப் போவார். ஆனால் மோதிரம் உரியவரை எண்ணி அலட்டிக் கொள்ளாது. அது கிடக்கிற இடத்திலேயே கிடக்கும். ஜடப்பொருளின் தன்மை அதுவே.

விண்ணையும் மண்ணையும் அளக்க ஒரு வாமனனால் கூட முடியும். பரந்து விரிந்த பாற்கடலை அடக்க அகத்தியனும் உண்டு! எப்போதும் எவராலும் விரித்து விளக்கிச் சொல்ல முடியாத பெருமை கொண்டது திருவாசகம். அதில் திருவெம்பாவையும் திருப்பள்ளி எழுச்சியும் தேன் கலந்த தீங்கனி சுவை கொண்டது என்பர். அதை ஓரளவுக்கு எடுத்துச் சொல்ல விழைகிறது மனம். பிழை இருப்பின் பெரியவர்கள் பொறுத்து அருள்க.

16-12-21 அன்று மார்கழி முதல் நாள்!

திருவெம்பாவை
திருவெம்பாவை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்."

நான்முகனும் நாராயணனும் தேடியும் காண முடியாத, ஆதி அந்தமில்லா அருள் பெரும் ஜோதியின் கருணையை எண்ணி, இவ்வேளையில் யாம் பாடுவது உனக்கு கேட்கவில்லையா தோழி! வாள் போன்ற கண்களைக் கொண்ட பெண்ணே, ஈசனைக் கொண்டாடும் இந்த பாடல்களைக் கேட்டு உணராத உன் செவி என்ன செயல் இழந்து விட்டதோ! பிறவிதோறும் பாடி ஆடித் தொழுதாலும் பேசவே முடியாத பெருமை கொண்டவை நம் மாகாதேவரின் சிலம்பணிந்த திருப்பாதங்கள். அந்த பெருமை கொண்ட குஞ்சித பாதத்தை சரண் அடைவது குறித்து நாங்கள் பாடியபோது, வீதியில் சென்ற ஏதுமறியாத சிறு பெண் ஒருத்தி, விம்மி விம்மி அழுதாள். ஈசனை மறந்து வாழ்ந்த சிறுமை எண்ணிப் புலம்பி தரையில் விழுந்து மூர்ச்சையானாள். பெருமைகள் பல கொண்ட தோழியே, நீயோ உறங்குகிறாய்! நேரம் கடந்து கொண்டே இருக்கிறது, இனியும் தாமதிக்காதே, சிவனைப் பாட எழுந்து வருவாய் என் பாவையே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
வைர மோதிரம் தொலைந்து விட்டது. தொலைத்தவர் பதறிப் போவார். எப்போது அது மீண்டும் கிடைக்குமோ என்று தவித்துப் போவார். ஆனால் மோதிரம் உரியவரை எண்ணி அலட்டிக் கொள்ளாது. அது கிடக்கிற இடத்திலேயே கிடக்கும். ஜடப்பொருளின் தன்மை அதுவே.
மார்கழிச் சிறப்பு
மார்கழிச் சிறப்பு

தொலைந்து போன வைர மோதிரம் நாம்தான். தொலைத்தவர் ஈசன். ஒவ்வொரு ஆன்மாவும் அவருடையதே. அவருடைய சாயலில் உருவாகி, மாயைக்கு அகப்பட்டு பூமிக்கு வந்தவையே. அதனால் எப்போதும் நம்மை ஆட்கொள்ள அவர் காத்திருக்கிறார். நாம் அவருடைய உடைமை. எத்தனைப் பிறப்பு எடுத்தாலும் இது புரிவதே இல்லை. மாயையில் சிக்கி வினைகளில் சிக்கி மீண்டும் மீண்டும் இங்கேயே உழண்டுக் கிடக்கிறோம். பக்கத்துக்கு பக்கம் கிளை தாவும் மந்தியைப் போல வாழ்கிறோம். மரத்தின் உச்சத்துக்குச் சென்றால் தான் வானத்தைப் பார்க்க முடியும். பக்தியின் உச்சமும் சரணாகதி தான். எங்கிருந்து வந்தோமோ அங்கு செல்ல வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கண்ணப்பர் அப்படித்தான் சென்றுவிட்டார். எந்த நூலும் படிக்காத, எந்த குருவிடமும் உபதேசம் கேட்காத ஒரு காட்டுச் சிறுவன், ஈசனைக் கண்டார். கண்டதுமே கசிந்துருகிப் பற்றிக் கொண்டார். பூசை செய்தார்; உணவு அளித்தார்; காட்டு மிருகங்கள் தாக்காமல் இருக்க, மகாதேவனுக்கே காவல் இருந்தார். எண்ணி ஆறே நாளில் ஈசனோடு கலந்து விட்டார். அப்படி இருக்க வேண்டும் அன்பு. அன்புக்கு ஒரு உதாரணம் என்றால் அது கண்ணப்பன் தான். 'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின், என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி...' எண்ணிப் பாருங்கள்! கண்ணப்பனை விட அறிவியலில் நாம் உயர்ந்து இருக்கலாம். அன்பில் அவரை மிஞ்ச முடியுமா? குலம், பிறப்பு, செல்வம், படிப்பு, தொழில், அதிகாரம், செல்வாக்கு, என அனைத்தையும் விட உயர்ந்தது இறையை அறிந்து கொள்ளும் ஆர்வம். அந்த ஆர்வத்தால் ஈசனை வரவைத்தவர் கண்ணப்பர்.

மார்கழி முதல் நாள்
மார்கழி முதல் நாள்

இத்தனைக்கும் தான் அன்பு கொண்டது ஈசன் என்றோ, அதை வணங்கினால் நல்லது நடக்கும் என்பதோ கூட கண்ணப்பனுக்குத் தெரியாது. நிபந்தனை அற்ற அன்பு அது. அதற்கே சிவம் ஆட்பட்டது. 'நில்லு கண்ணப்ப' என்று ஓடோடி வந்தது. சிவத்தையே பதற வைத்த அன்புக்கு உரியவர் கண்ணப்பர். இதை உணர்ந்து கொண்டால் ஈசனின் திருப்பாதம் ஒவ்வொருக்கும் கிட்டிவிடும். ஆம், ஈசனின் பாதத்துக்கு அருகே சென்று விட வேண்டும் என்பதே ஒவ்வொரு ஆன்மாவின் விருப்பமும்.

இனி பிறப்போ இறப்போ இல்லை என்கிற உன்னத நிலைக்குச் செல்ல வேண்டும். அதற்கு ஈசனின் திருப்பாதங்களே துணை செய்யும். அதைப்பற்றிக் கொள்ளாதவரை மாயையில் இருந்து தப்பவே முடியாது. கேவலம் ஒரு தூக்கத்தைக் கூட உதறிவிட முடியாது. நம் ஆன்மா ஜடமில்லை; அது நமக்கு சொந்தமும் இல்லை என்று புரிந்து கொள்ளுங்கள். அற்புதமான இந்த மார்கழி விடியலில் மகாதேவனைப் பற்றிக்கொள்ள வாருங்கள்!

'உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும், கள்ளப்படாத களிவந்த வான்கருணையை வியத்தலுமே' மார்கழிக்குச் சிறப்பு!