Published:Updated:

திருவெம்பாவை - 11: மார்கழி உத்சவம் - எது பக்தி, எது ஆன்மிகம்? திருவாசகம் சொல்லும் 5 காரணங்கள்!

திருவெம்பாவை
News
திருவெம்பாவை

ஒளி என்பது வெளிச்சம் என்பதல்ல, அது விழிப்பு நிலை. இருள் உறங்க வைக்கும் என்றால், ஒளி விழிக்க வைக்கும். புற விழிப்பு மட்டுமின்றி அக விழிப்பையும் ஒளி செய்ய வைக்கும் என்பதாலேயே விளக்கேற்றி இறைவனை வழிபடுகிறோம்.

"மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்!"

சிவபெருமான்
சிவபெருமான்

ஐயா, ஈசனே, எங்கள் நேசத்துக்கு உரிய தேவதேவனே! உம் அடியார்கள் கூடி, வண்டுகள் மொய்க்கும் மலர்கள் கொண்ட தடாகத்தில் சப்தம் எழக் குதித்து, நீரைக் குடைந்து நீந்தி, அந்த நீர் சப்தம் மறையும்விதமாக உன் கழல்களை எண்ணிப் பாடினோம். தொடர்ந்து இந்த பாவை நோன்பை நாங்கள் நோற்பதை ஈசனே, நீங்கள் அறிவீர்கள். சிவந்த தழலான எம் ஈசனே, வெண்ணீறு அணிந்த விமலனே, செல்வமே, சிவபெருமானே, குறுகிய இடையும், மையிட்ட விரிந்த விழிகளைக் கொண்ட உமையம்மையின் தலைவா, பெருமானே, ஐயனே, நீ ஆன்மாக்களை ஆட்கொள்ளும் விளையாட்டில் அவை எந்தவிதமான இன்பங்களை அடையுமோ, அப்படி அத்தனை விதமான இன்பங்களை இந்த நோன்பிலேயே நாங்கள் அடைந்துவிட்டோம். உள்ளம் கசிந்துருகும் இந்த பேரின்ப நிலை என்றும் எங்களுக்குள் நிலைத்திருக்க செய்வாய். அருளுவதில் எங்களை ஏய்த்துவிடாமல் எப்போதும் எம்மைக் காத்து வா இறைவா! அதற்கு உன்னை எப்போதும் நாங்கள் துதித்திருப்போம். எனவே நம் ஈசனைப் பாட விரைந்து எழுந்து வா என் பாவையே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விழித்துக் கொண்டே இருக்கும் ஆன்மாதான் இறைவனை உணர முடிகிறது. இந்திரியங்கள் கட்டுப்பாடோடு இயங்க, மனமும் கட்டுப்படும். கட்டுப்பாடான மனதால் ஒருமித்து இறைவனை தியானிக்கவும் முடியும். மனம் தியானிக்கும் நிலையில் உடலில் யோக சக்திகள் மேலெழும்பி ஆதார சக்கரங்களைத் தூண்டிவிட, ஆன்மா லயித்து இறை நிலையில் ஆனந்த நிலையை எட்டும். இதுவே பக்தி. இதுவே ஆன்மிக நிலை. உடல் உறக்கம் மட்டுமின்றி, உள்ள உறக்கமும் விழித்து, நாம் யார்! எதற்காக இங்கு வந்தோம்! நம்முடைய வேலை இங்கு என்ன! இறுதியில் என்ன நடக்கும்! என்ற ஆன்ம விசாரணையை இன்றே தொடங்குவோம். அதுதான் உண்மையான பக்தி. கோயிலுக்குச் செல்வதும், வழிபாடு செய்வதும் மட்டுமல்ல பக்தி. சரணாகதி அடைவதும், தன்னைத் தானே உள்முகப்பயணமாக சென்று அறிந்து கொள்வதுமே பக்தி. விழித்திரு, சரணாகதி கிடைக்கும், சரணாகதி அடை, உன்னைப் பற்றி அறிய வரும். உன்னைப் பற்றி அறிந்து கொண்டால் ஈசனை அறிந்து கொள்ளலாம், ஈசனை அறிந்து கொண்டால்...சகலமும் வேறுவேறு அல்ல என்று அறிந்து நீயே ஈசத்துவமும் அடையலாம். இந்த ஐந்துமே ஆன்மிகம்.

ஈசன்
ஈசன்

அப்படி உள்ளுக்குள் புகுந்து உள்ளுறையும் ஈசனைக் கண்டறிந்து பேறு பெற்றவர் நமிநந்தி அடிகள். அதனால் தான் அவர் 'தொண்டருக்குள் ஆணி' என்று போற்றப்படுகிறார். சோழ நாட்டு ஏமப்பேறூரில் மறையவர் குலத்தில் பிறந்த இந்த நாயன்மார், திருவாரூரில் பல திருத்தொண்டுகள் புரிந்து அரன் அடி சேர்ந்தவர். திருவாரூரில் விளக்கேற்றும் திருத்தொண்டை செய்த வந்தபோது, புற சமயத்தார் கூடி இவரை கேலி செய்தனர். 'உள்ளொளி இருக்க உன் ஈசனுக்கு புற ஒளியும் வேண்டுமோ' என்று ஏகடியம் பேசிய நபர்களுக்கு, ஈசனையேத் துணை என்று கொண்டு திருவாரூர் கமலாலய குளத்தில் இருந்து நீர் எடுத்து ஆலயம் எங்கும் தீபம் ஏற்றுக் காண்பித்தார். அது மட்டுமா, ஆரூர் மக்கள் எல்லோரையும் சிவசாரூபம் பெற்றவர்களாக தரிசனம் செய்த பெருமையும் கொண்டவர் நமிநந்தி அடிகள். திருநீற்றின் மகிமை உணர்ந்து அதையே மந்திரமாக ஒளஷதமாகக் கொண்டு பல அற்புதங்களையும் செய்தவர் இவர். இத்தனை பெருமைகளுக்கும் இவர் காரணமாகச் சொன்னது, 'விழித்திருந்த மனதால் ஈசனைக் கண்டுகொண்டேன்!' என்பதுதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒளி என்பது வெளிச்சம் என்பதல்ல, அது விழிப்பு நிலை. இருள் உறங்க வைக்கும் என்றால், ஒளி விழிக்க வைக்கும். புற விழிப்பு மட்டுமின்றி அக விழிப்பையும் ஒளி செய்ய வைக்கும் என்பதாலேயே விளக்கேற்றி இறைவனை வழிபடுகிறோம். நமிநந்தியடிகள் நீரால் விளக்கேற்றினார் என்பதும் உருவகம் தான். எந்த நிலையிலும் விழித்துக் கொள்ள முடியும். விளக்கேற்ற முடியும் என்பதுவே இந்த திருவிளையாடல் சொல்லும் தத்துவம். விளக்கை ஏற்றிவைத்து விட்டு, வாய் முணுமுணுத்துக்கொண்டு, கண்ணை மூடிக் கொண்டு இருந்தால் மட்டும் போதுமா! மனம் விழித்து இறைவனோடு ஒன்றை வேண்டாமா! அதுதானே இறையோடு கலக்கும் ஆனந்த நிலை. குடைந்து குடைந்து நீராடுதல் என்பது உள்ளத்தில் உற்சாகமாக ஈசனைத் தேடி தேடி களிப்பதுதானே!

திருவிளையாடல்
திருவிளையாடல்

எனவே அதிகாலையில் இந்த அற்புதமான மார்கழி நாளில் எழுந்து இறைவனைத் தேடும் முயற்சியில் இறங்குவோம். அன்பில் அகப்பட்டுக் கொள்ளும் அந்த அற்புத கற்பகத்தை நாம் சொந்தமாகிக் கொள்வோம் வா. உள்ளன்போடு ஈசனைக் காதலித்தால் அவன் என்றும் எப்போதும் நம்மை அருகிருந்து காப்பான். இது உறுதி. அவனுக்கு ஏய்க்கவே தெரியாது. சொன்ன சொல்லை உறுதியாகக் காக்கும் கருணை மிகுந்த தெய்வம் அவன் ஒருவன் தான் என்பதை நீயும் உணர்ந்து கொள்வாய் வா! ஈசன் நம்மை ஆட்கொள்ளும்போது எழும் ஆனந்தம் இருக்கிறதே அதை எந்த சொல்லாலும் சொல்லி விட முடியாது. அதை அனுபவித்தாலே புரியும். அழகிய விழிகளைக் கொண்ட தோழியே, நேரம் கடந்து கொண்டு இருக்கிறது. இன்னமும் காலம் கடத்தாது நம் தலைவனைப் பாடி இன்பம் கொள்ள சீக்கிரம் எழுந்து வா!

தான்தோன்றி ஈசன்
தான்தோன்றி ஈசன்
DIXITH

"அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே, சிவபெருமானே!"