Published:Updated:

திருவெம்பாவை - 15: கரம் குவித்து எதையும் வணங்காத பெருமைக்கு உரியது சிவம் மட்டுமே... இதுதான் பக்தி!

திருவெம்பாவை
News
திருவெம்பாவை

நான்முகன், திருமால், இந்திரன், கணபதி, முருகன், சக்தி, திருமகள், கலைவாணி, ரிஷிகள், தேவர்கள், அஷ்டதிக் பாலகர்கள், நவகிரங்கள், மானிடர், அசுரர், பறவைகள், விலங்குகள் என சகல கணங்களும் ஈசனை வணங்கியதாக புராணங்கள் உண்டு.

"ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே

நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்

சித்தம் களிகூர நீரொருகால் ஓவா

நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து

அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்

பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்

ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்

வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி

ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்!"

எம்பாவாய்
எம்பாவாய்

எம்பெருமானே என்று ஈசனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள் என் தோழி. ஓயாமல் நம் ஈசனின் பெருமைகளை நிறுத்தாமல் பேசுவாள். அவள் மனம் கனிந்து ஈசனின் கருணையைப் பேசும்போது உருகிப்போய் கண்களில் நீர் தாரை தாரையாக பெருகும். அந்த பக்திப் பரவசத்தில் இருந்து அவளால் மீளவே முடியாத நிலை ஏற்படும். விண்ணில் இருந்து வரும் வேறு எவரையும் இவள் வணங்கமாட்டாள். ஈசன் மட்டுமே தனது கடவுள் என்ற நிலையில் காதலோடு நிற்பாள். இங்கனம் என் தோழியைப் போலவே நம்மையும் ஆட்கொள்ளவிருக்கும் வித்தகனான ஈசனின் தாள் பணிந்து பாடுவோம். வா தோழி!மலர்கள் நிறைந்த ஏர் வடிவிலான தடாகத்தில் பாய்ந்து நீராடுவோம், வா என் பெண்ணே!

எல்லா கடவுள்களையும் மதி; ஆனால் ஒரே ஒரு கடவுளை, நம் சதாசிவனை மட்டுமே வணங்கு என்பதுதான் சைவத்தின் நிலைப்பாடு. சகலத்திலும் சிவமே உறைந்துள்ளது என்ற நிலையில் அனைத்தையுமே சிவமாக பாவித்து அன்பு கொள்ளுதலே சைவத்தின் அடிப்படை. எங்கும் எதிலும் சிவம் என்ற நிலையை உணரும்போது, இங்கு ஏற்றத்தாழ்வுகள் என்பதோ, பெரியது சிறியது என்ற பேதமே உண்டாவதில்லை. சைவத்தின் அடிப்படையே பேதமில்லாத நிலைதான். எல்லாம் பிறக்கும், எல்லாம் இறக்கும் என்றால் இங்கு எது பெரியது, எது தாழ்ந்தது சொல்லுங்கள். சிவத்தைத் தவிர இங்கு எதுவுமே பெரியதில்லை, நிரந்தரமில்லை என்பதை புரிந்து கொண்டால் மாயைகளில் சிக்கிக் கொள்ளாத நிலை உருவாகும். மாயை விலகியது என்றால் பிறகு ஏது பிறப்பும், வாழ்வும், இறப்பும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நான்முகன், திருமால், இந்திரன், கணபதி, முருகன், சக்தி, திருமகள், கலைவாணி, ரிஷிகள், தேவர்கள், அஷ்டதிக் பாலகர்கள், நவகிரங்கள், மானிடர், அசுரர், பறவைகள், விலங்குகள் என சகல கணங்களும் ஈசனை வணங்கியதாக புராணங்கள் உண்டு. ஆலயங்களும் உண்டு. ஆனால் கரம் குவித்து எதையும் வணங்காத பெருமைக்கு உரியது சிவம் மட்டுமே. அதுவே எல்லாமுமாக இருக்கும்போது சிவம் எதை வணங்கும், ஏன் வணங்கும். எனவே அநாதியான தேவர் தேவனைத் தவிர வேறெதையும் வணங்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. இதையே திருவாசகம்...

'புற்றில்வாழ் அரவும் அஞ்சேன் பொய்யர்தம்

மெய்யும் அஞ்சேன் கற்றைவார் சடைஎம் அண்ணல்

கண்ணுதல் பாதம் நண்ணி மற்றும்ஓர் தெய்வந் தன்னை

உண்டென நினைந்தெம் பெம்மாற்கு அற்றிலா தவரைக்

கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே'

தான்தோன்றி ஈசன்
தான்தோன்றி ஈசன்
DIXITH

ஈசனைத் துதித்தவர் வேறு எதையும் துதிப்பாரோ, ஈசனே உறவென்று இருப்பவர் வேறெதையும் மதிப்பாரோ! அப்படி சிவமே முழு முதல் எனக் கொண்டு வாழ்ந்தவர் விசாரசர்மர். பண்டீசனைப் பணிந்த நம் தொண்டீசர்களுள் சண்டீசனுக்கு இணையானவர் யாரும் இல்லை என சைவம் சொல்லும். சோழநாட்டின் சேய்ஞலூர் எனும் ஊரில் எச்சத்தன், பவித்திரை தம்பதிகளின் மகனாக பிறந்தார் விசாரசருமர். பிறந்தது முதலே ஈசனை முழுமுதற் கடவுள் என்று உணர்ந்து இவர் வழிபட்டு வந்தார். அந்த ஊரின் பசுக்களை மேய்த்துவந்த அவர், பசுக்களின் பாலால் மண்ணால் தான் உருவாக்கிய சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் கோபம் கொண்ட தந்தை, பாலை வீணாக்குவதாக எண்ணி அவரைக் கண்டித்தார். அவர் மாறாது இருக்கவே ஒருமுறை கோபத்தில் ஈசனுக்கான அபிசேக பால் குடத்தை எட்டி உதைத்தார். சிவ அபராதம் செய்த தந்தையின் கால்களை வெட்டி வீசிவிட்டு, விசாரசர்மர் சிவபூஜை செய்யத் தொடங்கினார். தெய்வ நிந்தனை யார் செய்தாலும் அது தண்டனைக்கு உரியதே என்று நிரூபித்த விசாரசர்மர் முன்பு ஈசன் உமையோடு தோன்றினார். அவரை தன்னுடைய கணங்களின் தலைவராக்கினார். சண்டீசன் எனும் ஈஸ்வரப் பட்டம் அளித்து ஆடைக்கும், பூசை பொருட்களுக்கும் உரியவராக நியமித்தார். மேலும் 'தாமுண்ட அமுதும் பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக' என்று அவருக்கு தான் சூடியிருந்த கொன்றை மாலையைச் சூட்டி, கோமுகக் காவலாக நியமித்தார்.

ஈசன்
ஈசன்

இதுதான் பக்தி! ஒழுக்கத்தில் கட்டுப்பாடு இருப்பதைப்போல பக்தியிலும் கட்டுப்பாடும், ஒரே தெய்வம் என்ற கற்பு நிலையும் வேண்டும். அதையே சைவம் போதிக்கிறது. போற்றுதற்குரிய இந்த மார்கழி நன்னாளில் அதிகாலையில் ஈசனைப் பணிந்து நீராடி ஆலயம் சென்று சென்று போற்றுவோம் வா தோழி. கருணையே வடிவமான நம் ஈசன், காலம்தோறும் நம்மை காவல் காக்கக் கூடியவன். அவனை காத்திருக்கச் செய்யாது, போற்றிப்புகழ விரைந்து வா தோழி.

'தேவ தேவன்மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன்

மூவ ராலும் அறியொணாமுத லாய ஆனந்த மூர்த்தியான்

யாவ ராயினும் அன்பரன்றி அறியொ ணாமலர்ச் சோதியான்

தூயமாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிச் சுடருமே.'