Published:Updated:

திருவெம்பாவை - 19: நீங்கள் விரும்பிய வரனை அடைய இந்த பாடலைப் பாடுங்கள்! ஈசன் அருளால் நல்லது நடக்கும்!

சிவன்
News
சிவன்

சோழர் குலத்தில் மணிமுடிச் சோழருக்குத் திருமகளாக மானி என்ற பெயரோடு பிறந்த இந்த திருமகள், சிறுவயது முதலே ஈசனின் மீது பக்தி கொண்டவள். நீறு அணியாமல், ஐந்தெழுத்து ஓதாமல் மானி இருந்ததே இல்லை என்கின்றன சைவ நூல்கள்.

"உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று

அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்

எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க

எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க

கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க

இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்

எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்!"

திருவெம்பாவை
திருவெம்பாவை

'உன் கையில் ஒப்படைக்கப்படும் என் மகள் இனி உனக்கு மட்டுமே உரிமை உள்ளவள்' என்று திருமணத்தின்போது பெண்ணின் தகப்பனார் மாப்பிள்ளையிடம் கூறும் வழக்கம் ஒன்று உள்ளது. அப்படி உனக்கு மட்டுமே உரிமையான நாங்கள், எங்களைத் திருமணம் செய்ய விரும்புபவர் எப்படி இருக்க வேண்டும் என்று வேண்டி விரும்பி உரிமையுடன் விண்ணப்பிக்கிறோம். உன் அடியாராகிய எங்களை மணம் முடித்துத் தழுவ வருபவர்கள் உன் அடியார்களாக மட்டுமே இருக்க வேண்டும். உன் அடியார்கள் மட்டுமே எங்களுக்கு இணையாக துணையாக எங்கள் தோள் சேர வரவேண்டும். எம் தலைவனான உனக்கு மட்டுமே பணி செய்வதற்கு அவர்கள் அனுமதிக்க வேண்டும். உனக்கானத் திருப்பணிகளைத் தவிர வேறு ஒன்றும் எங்களுக்குத் தெரிய வேண்டாம். இரவும் பகலும் கூட தெரியாமல் உன் பணியே செய்துவரும் வகையில் நாங்கள் கிடக்க வேண்டும். இப்படி ஒரு நிலையை எங்களுக்குப் பரிசாக நீ வழங்கினால் சூரியன் எங்கே உதித்தால் எங்களுக்கென்ன? அது உதிக்காமலேயே போனால்தான் என்ன? அழகிய பெண்ணே, ஈசனை மறவாது பாட எழுந்து நீ வா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எங்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வரவேண்டும் என்று கேட்கக் கூடிய அளவுக்கு உரிமை வழங்கிய எம் ஈசனே, இதுவே எமக்கு பெரிய அங்கீகாரம். இதனினும் சிறப்பான ஒரு வேண்டுகோள் ஒன்று உண்டு. அது உன்னடியார்களை மட்டுமே நாங்கள் சேர வேண்டும் என்பதே. யுகம் யுகம் நின்று நிலைக்கும் சிவமாகிய உன்னை, நாங்களும் தலைதலைமுறையாகத் தொடர்ந்து வழிபட வேண்டும். அதற்கு எங்களுக்கு உன் அடியார்களே மணவாளனாக வர வேண்டும். அடியார்கள் அல்லாத மற்றவர் எம்மை அடைந்தால், அது உன் பூஜைக்கு இடையூறு விளைவிக்கலாம். நல்ல கணவனை அடைவது என்பது தலைமுறையை சிறப்பாக அமைக்கும் ஒரு பணியே. தன் கணவன், தம் விருப்பப்படி அமையாமல் புற சமயத்தைச் சார்ந்து இருந்ததால் பெரிதும் துன்பப்பட்டவர் மங்கையர்க்கரசியார். குல வழியாய் தான் வணங்கி வந்த ஈசனை பலர் அறிய வணங்கக் கூட முடியாமல் அவதிப் பட்டவர் சோழர் குல வல்லியான மங்கையர்க்கரசியார். மதுரை மன்னனாம் கூன் பாண்டியனை மணந்து அவனை சைவத்தின் பால் திருப்பி 'நின்ற சீர் நெடுமாறன்' எனப் புகழ் பெற வைத்தவர் மங்கையற்கரசியாரே. அதனால்தான் சைவ உலகம் அவரைப் பலவாறாகப் போற்றி பணிகிறது.

சிவன்
சிவன்

சோழர் குலத்தில் மணிமுடிச் சோழருக்குத் திருமகளாக மானி என்ற பெயரோடு பிறந்த இந்த திருமகள், சிறுவயது முதலே ஈசனின் மீது பக்தி கொண்டவள். நீறு அணியாமல், ஐந்தெழுத்து ஓதாமல் மானி இருந்ததே இல்லை என்கின்றன சைவ நூல்கள். எனினும் அரசியல் நிர்பந்தங்களினால் அவள் மதுரை மன்னனை மணக்கிறாள். அங்கு புற சமயவாதிகளால் கட்டுப்படுத்தப்பட்டு சைவத்தை பின்பற்றவும் இயலாமல் வாடுகிறாள். அந்த நிலையில்தான் காழிப்பிள்ளையாம் சம்பந்த பெருமானின் பெருமைகள் அறிந்து, அவரை வரவைத்து புற சமயவாதிகளை தோற்கடித்து, பாண்டிய மன்னனின் வெப்பு நோயைத் தீர்க்க வைத்து, அவனை மீண்டும் சைவ சமயத்துக்கு மாற்ற வைக்கிறாள். இதன் வழியே மீண்டும் தென்னாட்டில் சைவம் தழைத்தோங்க வழியும் காண்கிறாள். அதனால் சைவ உலகம் இவரை 'மங்கையர்களுக்கு அரசி' என்று போற்றுகிறது. சம்பந்த பெருமானும் 'மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி...' என்றெல்லாம் பலவாறு போற்றினார்.

ஈசன்
ஈசன்

தெய்வச் சேக்கிழாரும் மங்கையற்கரசியை மீனாட்சிக்கு இணையாகப் போற்றி வணங்குகிறார்.

"மங்கையர்க்குத் தனி அரசி எங்கள் தெய்வம்

வளவர் திருக்குலக் கொழுந்து வளைக்கைமானி

செங்கமலத் திருமடந்தை கன்னிநாடாள் தென்னர்குலப்

பழிதீர்த்த தெய்வப் பாவை

எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே

இருந்தமிழ் நாடுற்ற இடர் நீக்கித் தங்கள்

பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரைப்

போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே!"

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நல்ல கணவரை அடைவது என்பது எங்களுக்கான விருப்பம் மட்டும் இல்லை. அது சைவத்தை காலம்தோறும் பரப்பிச் செல்ல எளிய வழி. எனவே எங்கும் நிறைந்திருக்கும் பரப்பிரம்மமே எங்களுக்கு உன் அடியார்களையே துணையாக அருள வேண்டும். அதற்காகவே இந்த மார்கழி நன்னாளில் அதிகாலைப் பொழுதில் நீராடி, பூச்சூடி, ஐந்தெழுத்தை ஓதியபடி உன்னை வணங்க வருகிறோம். எங்களின் இந்த எளிய வேண்டுதலை நிறைவேற்றினால் போதும். வேறு எதைப் பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை என்கிறது இந்த பாடல்.

மங்கையற்கரசி
மங்கையற்கரசி

"பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான்

கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார்

குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச்

சுற்றிய சுற்றத் தொடர் வறுப்பான் தொல்புகழே

பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான்

பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்!"