Published:Updated:

திருப்பள்ளியெழுச்சி - 3: நீங்கள் விரும்பியதற்கு எதிராக எது நடந்தாலும் உடனே இறைவனைப் பழிக்காதீர்கள்!

சிவபெருமான்
News
சிவபெருமான்

நம்முடைய பணி இறைவனை எண்ணிப் போற்றியபடியே இருப்பதுவே. அதை முழுமையாகச் செய்தால் நிச்சயம் ஈசனின் திருவருளை அடைந்து மோட்சம் பெறலாம் என்பதே உண்மை.

உதயத்தில் கூவும் புள்ளினங்கள் நம்மை விழிப்படையச் சொல்கிறது; மலரும் தாமரை உள்ளிட்ட மலர்கள் நம், ஆன்மாவின் மலர்ச்சியைக் குறிக்கிறது; சங்க நாதம் இருப்பை ஒலிக்கிறது; சூரியனில் கரைந்து போகும் நட்சத்திர ஒளி, பதி பசு இணைவதைக் காட்டுகிறது. ஈசனில் விருப்பம் கொள்ளும் ஆன்மா, அவனது திருவடியை அடையும். அங்கே இணையில்லாத பேரின்பத்தைக் காணும் என்பதே இந்த பாடலின் அர்த்தம்.

"கூவின பூங்குயில் கூவின கோழி

குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்

ஓவின தாரகைகளி ஒளி உதயத்து

ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்

தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!

யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!"

சிவபெருமான்
சிவபெருமான்

திருப்பெருந்துறையில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானே! கதிரவன் எழுந்து உலகம் விடிந்துவிட்டதை குயில்களும், கோழிகளும் கூவி அறிவிக்கின்றன. குருகுகளும் அவ்வாறே ஒலியெழுப்பி கூவுகின்றன. சங்க நாதம் எங்கும் ஒலித்து மெய்சிலிர்க்க வைக்கிறது. இரவெல்லாம் கண் விழித்து ஒளிர்ந்திருந்த நட்சத்திரங்கள், காலைக் கதிரவன் ஒளியில் கலந்து அதனுடன் ஒளியாகவே கலந்துவிட்டது. அதைப்போல நானும் உம்மை சிந்தையில் இடைவிடாது வைத்திருந்து உன்னுடனே கலந்து விடவே விரும்பி வந்துள்ளேன். என் விருப்பத்தை நிறைவேற்ற தேவதேவன் நீ உன் திருவடியை எனக்குக் காட்டு. அந்த திருவடிகளின் மகிமையால் நான் எவராலும் எட்ட முடியாத ஞானத்தை அடைந்து விடுவேன். தேவர்களாலும் வேறெந்த கணத்தாராலும் அறிய முடியாத பெரும்பொருளே! எனக்கு மட்டும் எளிமையாகக் காட்சி தருபவனே! சிந்தை முழுக்க நிறைந்திருக்கும் எம்பெருமானே! எம் பொருட்டு உறக்கம் நீங்கி எழுந்தருளுவாயே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சரணாகதி ஒன்றே ஆணடவனை அடையும் வழி என்று இந்த பாடல் ஆணித்தரமாகக் கூறுகின்றது. பக்தி என்பது ஆலயம் செல்வதோ, வழிபாடு செய்வதோ மட்டும் இல்லை. அந்த வழியாகச் சென்று ஆணடவனைப் பிடித்துக் கொள்வது. என் கையில் ஒன்றுமில்லை, உனக்கே ஆளானேன், என்ன நீ பார்த்துக்கொள்! என்ற சரணாகதியை ஆன்மிகத்தின் உச்சம். சூரியனில் தாரகையின் ஒளி கலந்து போவது போல, நிலம் தொட்ட மழைத்துளி அந்த நிலத்தின் வண்ணத்தைப் பெற்றுக் கொள்வது போல இறைவனது தன்மையாக நாமும் மாற வேண்டும். அன்பு, கருணை, பொறுமை இவை எல்லாம் தானே சிவத்தின் அடையாளம். அதைப்போலவே நாமும் மாறினால் இறைவனிடம் தஞ்சம் புகலாம் என்கிறார் மாணிக்கவாசகர்.

இறைவன்
இறைவன்

"வாழ்க்கையே துன்பமாக உள்ளது! நம்பியவர் எல்லாம் கைவிட்டு விட்டார்கள். எண்ணியது எதுவும் நடக்கவில்லை. தெய்வம் கூட என்னிடம் கருணை கொள்ளவில்லை." என்று எண்ணுபவரா நீங்கள். உங்கள் எண்ணம் முழுக்கத் தவறுதான். வாழ்க்கை கசந்திருக்கலாம், தோல்வியும் துன்பமும் வரலாம், வாய்ப்புகள் கைநழுவிப் போகலாம். ஆனாலும் இறைவன் கைவிட்டு விட்டான் என்று மட்டும் ஒருபோதும் கூறாதீர்கள். கருணையே உருவான கடவுள் உங்களை புறந்தள்ளி இருந்தால் உங்களால் நடமாடக் கூட முடியாது என்பதை நீங்கள் உணரவில்லையா! உங்கள் குடும்பம், உற்றார், உறவினர் உங்களைக் கைவிடலாம். இறைவனின் அருள் இல்லை என்று உங்களுக்குத் தோன்றலாம். நீங்கள் விரும்பியதற்கு எதிராக எது நடந்தாலும் உடனே இறைவனைப் பழிக்காதீர்கள். எது கொடுக்க வேண்டும், எப்போது கொடுக்க வேண்டும், அதைக் கொடுத்தால் நீங்கள் அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா! என்றெல்லாம் இறைவன் தீர்மானிப்பான். நீங்கள் அமைதியாக இருங்கள். நிச்சயம் இறைவன் அருளால் ஊழ்வினையின் ஒவ்வொரு எதிர்ப்பையும் வென்று, இறைவனின் திருவடியை அடைந்து சிவலோகம் அடைய முடியும் என்பதை உறுதியாக நம்புங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம்முடைய பணி இறைவனை எண்ணிப் போற்றியபடியே இருப்பதுவே. அதை முழுமையாகச் செய்தால் நிச்சயம் ஈசனின் திருவருளை அடைந்து மோட்சம் பெறலாம் என்பதே உண்மை. உதயத்தில் கூவும் புள்ளினங்கள் நம்மை விழிப்படையச் சொல்கிறது; மலரும் தாமரை உள்ளிட்ட மலர்கள் நம், ஆன்மாவின் மலர்ச்சியைக் குறிக்கிறது; சங்க நாதம் இருப்பை ஒலிக்கிறது; சூரியனில் கரைந்து போகும் நட்சத்திர ஒளி, பதி பசு இணைவதைக் காட்டுகிறது. ஈசனில் விருப்பம் கொள்ளும் ஆன்மா, அவனது திருவடியை அடையும். அங்கே இணையில்லாத பேரின்பத்தைக் காணும் என்பதே இந்த பாடலின் அர்த்தம்.

சிவன்
சிவன்

"ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்

உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே

மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு

விழுமிய தளித்ததோர் அன்பே

செப்புதற் கரிய செழுந்சுடர் மூர்த்தீ

செல்வமே சிவபெருமானே

எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவ தினியே!"