Published:Updated:

திருப்பள்ளியெழுச்சி - 4: இறைவனை அடைய எளிய வழி எது? மாணிக்கவாசகர் காட்டும் 2 வழிகள்!

திருப்பள்ளியெழுச்சி
News
திருப்பள்ளியெழுச்சி

திருப்பெருந்துறை மேவும் செல்வமே, சிவபெருமானே! மார்கழியின் சிறப்பான அதிகாலைப் பொழுதில் வீணையை வாசித்தபடியும், யாழை வாசித்தபடியும் அன்பர்கள் உன் பக்தியில் லயித்து இன்பம் பருகுகிறார்கள்.

ஈசனால் ஆட்கொள்ளப்பட்டு, அவரே குருவாக அமைந்தும் மாணிக்கவாசகர் கொஞ்சமும் ஆணவத்தைக் கொள்ளவில்லை. ஞானம் அடைந்த ஆன்மா எப்படி ஆணவத்தைக் கொள்ளும். பல பாடல்களில் தன்னை நாயேன் என்றே விளித்துக்கொள்ளும் மாணிக்கவாசகர் அடியார்களில் தலைமையானவர் என்றே சொல்லலாம்.
ஈசன்
ஈசன்

"இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!"

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

திருப்பெருந்துறை மேவும் செல்வமே, சிவபெருமானே! மார்கழியின் சிறப்பான அதிகாலைப் பொழுதில் வீணையை வாசித்தபடியும், யாழை வாசித்தபடியும் அன்பர்கள் உன் பக்தியில் லயித்து இன்பம் பருகுகிறார்கள். உன்னைப் போற்றுவதற்காகவே உருவான ரிக் உள்ளிட்ட வேதங்களால் வணங்குவோரும் இங்கு கூடி உள்ளார்கள். அழகுத் தமிழில் உன்னைப் போற்றி பாடுவோர் ஒருபுறமும் குழுமி உள்ளார்கள். உயர்ந்த மந்திரமான 'நமசிவாய' நாமத்தை நெக்குருகி ஜபித்து கையில் மலர் மாலைகள் தாங்கி நிற்பவர்களும் இங்கு உண்டு. எலும்பு உருகும் வண்ணம் உன்னை தரிசித்து கண்ணீர் மல்க பிரார்த்திப்போரும், உன் அழகிய திருவடிவைக் கண்ட கணமே மயங்கியவர்களும் இங்கு கூடி இருக்கிறார்கள். ஐயனே நீயே சரணாகதி! என்று தலை மேல் கைகூப்பி கதறுவோரும் இங்கு காத்திருக்கிறார்கள். மெய்யடியாராகிய இந்த தெய்வீக அடியார்களின் பக்தியின் முன்பு என்னுடைய பக்தி மிக மிக சாதாரணம். எளியவனான என்னையும் ஏற்றுக் கொண்டும் வழி நடத்தும் என் தேவனே! எப்போதும் இந்த சிறியோனை ஆட்கொள்ள, நீ பள்ளி எழுந்து அருள வேண்டும்.

சிவன்
சிவன்

பள்ளி என்றால் உறங்கும் இடம் மட்டும் இல்லை. பள்ளி என்றால் உண்மையில், விழித்துக் கொள்ளும் இடமும் கூட. புத்தி விழித்துக்கொள்ளும் இடம் பள்ளிக்கூடம். வயிற்றுப் பசியை ஆற்றும் இடம் மடப்பள்ளி. எப்போதும் உறங்காமல் இடைவிடாது இயங்கி வரும் ஈசன், இரவில் பள்ளி கொள்ளச் செல்வது நம்மை ஆற்றுப்படுத்தத்தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இறைவனை பள்ளி எழச் சொல்வது, நம்மை நாமே எழுப்பிக் கொள்ளத்தான். ஈசனை எப்போதும் நினைத்துக் கொண்டு, அவனோடு மானசீகமாக பேசிக்கொண்டு இருப்பவர்கள் அநேகம். அவனைக் கொஞ்சுவதும் அன்பால் குலாவுவதும் அடியார்களின் வழக்கம். அவனுக்காக மாலைத் தொடுப்பது, உழவாரப் பணிகள் செய்வது, பூஜைகள் செய்வது எல்லாம் அவர்களுக்கு விருப்பமான செயல். ஈசனோடு எப்போதும் தொடர்பில் இருக்கும் அவர்கள் மிக மிக உயர்ந்த ஆன்மாக்கள். அவர்களை எந்த துன்பங்களும் அணுகுவதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஈசன் இருக்கையில் எங்களுக்கு யாரோடும் தொடர்பு தேவை இல்லை என்பதுவே மெய்யடியார்களின் நிலைப்பாடு. உண்மை இப்படி இருக்க எளியேன் நானும் ஏதும் அறியாமல் உன்னை வழிபட்டு, என்னை ஆட்கொள் என்று ஏங்கி நிற்கிறேனே, இறைவா இது விந்தை. உண்மையான அந்த அடியவர்களை ஏற்றுக் கொண்டதைப் போல என்னையும் ஆட்கொள்ள வேண்டும் என்கிறார் மாணிக்கவாசகர்.

"நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நான்நடுவே

வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்

ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்

ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே!" என்று திருச்சதகத்துள் வேண்டுவதைப் போல மாணிக்கவாசகர் இங்கும் இறைவனை வேண்டுகிறார்.

ஈசன்
ஈசன்

எளிமையும் அடக்கமுமே இறைவனை அடைய எளிய வழி. அந்த வகையில் அடக்கத்துக்கு உதாரணமானவர் மாணிக்கவாசகர் எனலாம். ஈசனால் ஆட்கொள்ளப்பட்டு, அவரே குருவாக அமைந்தும் மாணிக்கவாசகர் கொஞ்சமும் ஆணவத்தைக் கொள்ளவில்லை. ஞானம் அடைந்த ஆன்மா எப்படி ஆணவத்தைக் கொள்ளும். பல பாடல்களில் தன்னை நாயேன் என்றே விளித்துக்கொள்ளும் மாணிக்கவாசகர் அடியார்களில் தலைமையானவர் என்றே சொல்லலாம். ஆயினும் அவர் தன்னை பொய்யடியார் என்றே அடையாளப்படுத்திக் கொண்டு ஈசனை சரண் அடைகிறார். அதை இந்த பாடலிலும் நாம் உணரலாம்.

"பாட வேண்டும்நான் போற்றி நின்னையே

பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்

காட வேண்டும்நான் போற்றி அம்பலத்

தாடு நின்கழற் போது நாயினேன்

கூட வேண்டும்நான் போற்றி இப்புழுக்

கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம்

வீட வேண்டும்நான் போற்றி வீடுதந்

தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே!"