Published:Updated:

திருப்பள்ளியெழுச்சி - 10: அயனுக்கும் மாலுக்கும் அரியவனான நீ, எங்களுக்கு மட்டும் ஏன் எளியவன் ஆனாய்!

திருப்பள்ளியெழுச்சி
News
திருப்பள்ளியெழுச்சி

திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல்களை மனமுருகி பாடும் எந்த ஆன்மாவும் நிச்சயம் ஈசனை உணர்ந்து கொள்ளும் என்பது சைவத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை.

படைக்கும், காக்கும் தேவர்கள் கூட இந்த மார்கழி அதிகாலையில் ஈசனை தாங்கள் தரிசிக்க முடியவில்லையே. இந்த மானிடர்கள் அந்த பாக்கியத்தைப் பெற்றுள்ளார்களே என்று வியக்கிறார்கள்.

"புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்
நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!"

சிவபெருமான்
சிவபெருமான்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிறவிக்கடலை எளிதாகக் கடக்க உதவும் முதன்மை துறையாம், திருப்பெருந்துறையில் உறையும் எம்பெருமானே, உன்னை வணங்குகிறேன். இந்த புவியில் தோன்றி, விழிப்புணர்வு கொண்ட ஆன்மாக்கள் எல்லாம் சிவனருளால் அடியார்களாக மாறி ஈசனால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். சிவகிருபையால் அவனது அனுபவங்களில் திளைத்து மனிதர்கள் எல்லோரும் மகிழ்கிறார்கள். ஆனால் பூமியில் மனிதனாகப் பிறக்காத காரணத்தால், சிவனால் ஆட்கொள்ளப்படாமல் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது நாபித் தாமரையில் மலர்ந்த நான்முகனும் வருந்துகின்றனர். அடியார்களுக்கு மட்டுமே அருள் புரியும் நீ அவர்களுக்கும் தயவு கொள். கருணையுடன் இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொண்டு அருளும் நீ எவருக்கும் கிட்டாத அருள் செல்வம், எங்களுக்கு மட்டுமே கிடைத்த அமுதம். எண்ணும்போதே நெகிழ வைக்கும் அருள் வள்ளலே, சிவபெருமானே எங்கள் பொருட்டு இங்கு நீ எழுந்தருள வேண்டும் ஐயனே!

சிவபெருமான்
சிவபெருமான்

"வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்ட
முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி
என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும்
அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும்
உன்றன் விருப்பன்றே!"

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எல்லாம் அறிந்த ஈசனே, எனக்கு என்ன வேண்டும் என்பதைக் கூட நீ மட்டுமே அறிவாய், அதனால் அதையும் நீயே அளிப்பாய் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அயனுக்கும் மாலுக்கும் கூட அரியவனான நீ, எங்களுக்கு எளியவனாக இன்னமுதம் தருபவனாக விளங்கி வருகிறாய். எவருக்கும் கிடைக்காத நீ, என்னை வேண்டி பணி செய்ய ஏற்றுக்கொண்டது வேடிக்கை. நீ என்ன கொடுத்தாலும் எது செய்தாலும் அதை நாங்களும் ஏற்போம். நீயே எங்கள் தலைவன். உன் அருளை கனவிலும் மறவோம். உன் விருப்பம் எதையும் மகிழ்வோடு ஏற்போம். எங்களுக்கு என்று எந்த விருப்பமும் இல்லை. ஒருவேளை எங்களுக்கு என்று ஒரு விருப்பம் உண்டாயின் அதுவும் உந்தன் விருப்பமாகவே இருக்கும். உன்னைத் தவிர இந்த உலகில் நாங்கள் விரும்புவது ஒன்றுமில்லை. ஏனெனில் உங்களைத் தவிர வேறு எதுவும் உங்களுக்குத் தெரியாது என்கிறார் மாணிக்கவாசகர். இதுவே சரணாகதி நிலை. தான், தன்னுடையது, தன்னால் ஆனது எனும்போதுதான் துக்கம், தோல்வி எல்லாம். ஈசனை உணர்ந்தவர் தம்மால் ஆனது ஒன்றுமில்லை என்று உணர்ந்து கொள்வார்கள். அந்த சரணாகதி நிலையைத்தான் இந்த பாடல் உணர்த்துகிறது.

சிவபெருமான்
சிவபெருமான்

படைக்கும் காக்கும் தேவர்கள் கூட இந்த மார்கழி அதிகாலையில் ஈசனை தாங்கள் தரிசிக்க முடியவில்லையே. இந்த மானிடர்கள் அந்த பாக்கியத்தைப் பெற்றுள்ளார்களே என்று வியக்கிறார்கள். ஆனால் பெரும் கருணை கொண்ட எங்கள் சிவபிரானே, நீயோ எங்களைத் தேடி வீதியில் வருகிறாய். இந்த புண்ணியம் கிடைக்க நாங்கள் இன்னும் வழிவழியாக உங்கள் அடியாராக இருக்க விரும்புகிறோம். எங்களுக்காக திருப்பள்ளி எழுந்து எங்களைக் காக்கும் சிவமே உம்மை என்றென்றும் போற்றுகிறோம் என்கிறார் மாணிக்கவாசகர். உறங்கவே உறங்காத ஆதிசிவத்துக்கு கற்பனையாக திருப்பள்ளி எழுச்சி பாடி, அதன்வழியே நமது ஆன்மாவையும் எழுப்பி ஈசனோடு ஒன்றை வைக்கும் இந்தப் பாடல்கள் மகத்துவம் மிக்கவை.

திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல்களை மனமுருகி பாடும் எந்த ஆன்மாவும் நிச்சயம் ஈசனை உணர்ந்து கொள்ளும் என்பது சைவத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை.

"இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவ போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி அமுதே போற்றி
விரை சேர் சரண விகிர்தா போற்றி
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதி சேர் செஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி!"

திருச்சிற்றம்பலம்!