Published:Updated:

திருப்பள்ளியெழுச்சி - 5: போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே! எமைக் காத்தருள வேண்டும் சிவனே!

ஈசன்
News
ஈசன்

என்றும் நிரந்தரமான சிவம், நிர்குணன் என்றே போற்றப்படுகிறார். குணமில்லாததால் அவர் போக்கும் வரவும் இல்லாது நிலைத்திருக்கிறார். பிறப்பும் மறைவும் இல்லாத தன்மையால் அவரே பரசிவம் என்றும் போற்றப்படுகிறார்.

பரசிவம் எனும் அகண்ட வடிவம் நம் ஆன்மா எனும் சிறு குமிழுக்குள் அடங்கி இருக்கிறது. சிவத்தின் சிறிய வடிவம் நாம் என்பதால் அதன் தன்மையையும் கொண்டு இருக்கிறோம்.

"பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக்கண்டறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!"

சிவன்
சிவன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வளமை மிகுந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் அருளும் எம் மன்னனாகிய சிவமே! எக்கணத்தவரின் சிந்தனைக்கும் எட்டாத அகண்ட ரூபனே! பிரபஞ்சத்தின் மூலமான காற்று, ஆகாயம், நீர், நிலம், நெருப்பு என்ற ஐந்து பூதங்களிலும் கலந்து நிற்கும் தேவனே! போவதும் இல்லாமல், வருவதும் இல்லாமல் நிலைத்து நிற்கும் தெய்வமே! மொழியில் வல்லமை கொண்ட புலவர்கள் இவ்வாறு உன் சிறப்பியல்புகளைப் பாடல்களாகப் பாடுகிறார்கள், உன் அடியார்களோ இந்தப் பெருமைகளை எல்லாம் சொல்லி ஆடுகிறார்கள். இப்படி பாடி ஆடுபவர்கள் கூட உன்னை நேரில் கண்டதில்லை. உன் முழுத் திருக்காட்சியைக் கண்டவர்கள் எந்த லோகத்திலும் இல்லை. சிந்திப்பதற்கும் காண்பதற்கும் இயலாத பெருவெளியே, நீ எளியோராகிய எங்கள் முன்பு தரிசனம் தந்து எங்கள் பாவங்களை எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும். அண்டமெங்கும் நிறைந்த மகாதேவனே எங்களைப் பொறுத்து ஆட்கொள்ள வேண்டும் ஐயனே. அதனால் கருணை மிக்க தெய்வமே துயில் நீங்கி எழுந்தருள வேண்டும் ஐயனே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

என்றும் நிரந்தரமான சிவம், நிர்குணன் என்றே போற்றப்படுகிறார். குணமில்லாததால் அவர் போக்கும் வரவும் இல்லாது நிலைத்திருக்கிறார். பிறப்பும் மறைவும் இல்லாத தன்மையால் அவரே பரசிவம் என்றும் போற்றப்படுகிறார். அகண்ட வடிவம் கொண்ட எங்கள் சிவன், அன்பு கொண்டு அவன் தாளைப் பற்றி கொண்டால் எளிய வடிவாகி எழுந்தருளி ஆட்கொண்டு விடுவார் என்பது இந்த பாடலின் விளக்கம். பரப்பிரம்மம் எனும் ஈசன் என்னிலும் உன்னிலும் நிறைந்து இருப்பதால் அது எங்கும் நிறைந்து எல்லாமுமாக உள்ளது. அதை உணர்ந்து கொண்டால் ஆன்மா சிவத்தை அறிந்து கொள்ளும். பரசிவம் எனும் அகண்ட வடிவம் நம் ஆன்மா எனும் சிறு குமிழுக்குள் அடங்கி இருக்கிறது. சிவத்தின் சிறிய வடிவம் நாம் என்பதால் அதன் தன்மையையும் கொண்டு இருக்கிறோம்.

பரசிவம்
பரசிவம்

இதனால் நம் ஆன்மாவும் நிலைத்திருக்கும். அது பரசிவத்தின் அமரத்துவ வடிவின் நெஞ்சத்தில் நிலையான அழிக்கமுடியா உணர்வுநிலையாக உள்ளது. மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்தாலும் ஏதேனும் ஒரு பிறவியில் சிவத்தை உணர்ந்து கொண்டால் அது சிவத்தோடு கலந்து விடுகிறது. எவருமே அறிய முடியாத அவன் பேருருவை கண்டறிவது கடினம். ஆனால் கருணை கொண்ட அந்த தேவனின் இருப்பை உணர்ந்து கொண்டால் போதும். அவன் நம்மை ஆட்கொண்டு தம்முள் இணைத்துக் கொண்டு சிவலோகத்தில் நம்மைச் சேர்த்துக் கொள்வான் என்கிறார் மாணிக்கவாசகர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்போதும் நம்மை ஆண்டருளும் சிவனின் திருக்கழல்களைத் தவிர வேறு எதுவும் மோட்ச கதியை அளிக்காத நிலையில் மனமும் ஆன்மாவும் விழித்து அவன் திருவடியைப் பற்றிக் கொள்ள ஏங்க வேண்டும். பஞ்ச பூதங்களின் மூலமாகவும் தலைவனாகவும் விளங்கும் ஈசனே சகல தொழில்களின் தலைவனாகவும் இருக்கிறான். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்ற ஐந்து தொழில்களின் வழியே இந்த அகிலத்தை இயக்கி வருகிறான். அவன் ஆட்டுவிக்கிறான் ஆடுகிறோம்! அவன் கூட்டுவிக்கிறான் கூறுகிறோம். இதில் நமது என்று ஒரு செயலும் இல்லை என்று உணர்ந்தால் மனம் அமைதி கொள்ளும். ஆன்மா விழித்துக் கொள்ளும். எனவே இந்த இனிய மார்கழி அதிகாலை வேளையில் எம்மைக் காக்கும் பொருட்டு எழுந்தருள வேண்டும் என்று இறைஞ்சுகிறார் மாணிக்கவாசகர். அதற்கு ஈசனின் தன்மைகளாக இந்த பாடலில் அளவிட்டும் காட்டுகிறார். ஞானத்தின் வடிவான மாணிக்கவாசகர் ஈசனைப் பற்றி ஒன்றும் அறியேன் என்று அறிவித்தும் இப்படி பல பாடல்களில் எவருமே சொல்ல முடியாத வர்ணனைகளைக் கொண்டும் ஈசனைக் கொண்டாடுகிறார்.

திருப்பள்ளியெழுச்சி
திருப்பள்ளியெழுச்சி

"அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே!"