Published:Updated:

திருவெம்பாவை - 7: ஈசனை அடைவதற்கு என்ன வழி? மாணிக்கவாசகர் தரும் எளிய விளக்கம்! - மார்கழி சிறப்புகள்

சிவபெருமான்
News
சிவபெருமான்

ஈசன் என்பவர் கடவுள் மட்டுமே கிடையாது. அவன் ஆடல் கலைஞன், பாடும் புலவன், சிறந்த யோகி, போர் வீரன், சித்த வைத்தியன், களரி-வர்மக் கலைஞன், இசையில் வித்தகன்... இப்படி சகல கலைகளிலும் முன் உதாரணமான ஒரு பூரணன்.

"அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்."

திருவெம்பாவை - 7
திருவெம்பாவை - 7

தாயைப் போன்ற பெண்ணே, இந்த தூக்கமும் உன் சிறப்புகளில் ஒன்றோ! வானவர்கள் எண்ணிப் பார்ப்பதற்கும் அரியவனான, பெரும் புகழைக் கொண்டவனான நம் ஈசனின் திருச்சின்னங்களான திருநீறு, ருத்ராட்சம் போன்றவற்றை அணிந்தவர்களைக் கண்டாலே சிவசிவ என்று அடி தொழுவாயே! ஈசனைப் போற்றி 'தென்னவனே எங்கள் தேனான அமுதீசனே!' என்று ஓலமிடும்போதே மெழுகாய் உருகி உணர்ச்சிவசப்படுவாயே! ஈசன் எனக்குரியவன்! என் அரசன்! எனக்கே உரிமையான இன்னமுதன் இப்போது புகழ்கிறோம். இப்போது உனக்கு என்ன ஆனது! இதையெல்லாம் கேட்டும் உறங்குகிறாயே, இப்படி உன் நெஞ்சம் இறுகிப்போகக்கூடாது. கருணையின் தலைவனான ஈசனைப் பற்றி இத்தனை சொல்லியும் எழாமல் இருக்கிறாயே, அந்த தூக்கத்தை ஒரு பரிசாக எண்ணுகிறாயா பெண்ணே! இது தவறு எழுந்து வா...ஈசனை அடையும் நேரம் வந்துவிட்டது வா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஈசன் என்பவர் கடவுள் மட்டுமே கிடையாது. அவன் ஆடல் கலைஞன், பாடும் புலவன், சிறந்த யோகி, போர் வீரன், சித்த வைத்தியன், களரி-வர்மக் கலைஞன், இசையில் வித்தகன்... இப்படி சகல கலைகளிலும் முன் உதாரணமான ஒரு பூரணன். வேதத்தின் பொருள் உரைத்த அந்தணன், வளையலும் ரத்தினங்களும் விற்ற வைசியன், சௌந்திர பாண்டியனாக ஆட்சி செய்த க்ஷத்ரியன், வலை வீசி மீன் பிடித்த மீனவன், வயலில் நின்று வேளாண்மை செய்த விவசாயி இப்படி சகல தொழில்களும் செய்த ஆனந்தக் கூத்தன் அவன். எந்த வர்ணத்திலும் எந்த குணத்திலும் சிக்கிக் கொள்ளாத நிர்குணன் சிவன். பிறப்போ-அவதாரமோ எடுக்காத அநாதியான சிவன் அனைத்துமானவன். வெறும் முத்திரைகளில் உபநிடதங்கள் அனைத்தையும் உலகறியச் செய்த உத்தமன். இப்படி சிவத்தை எந்த வடிவத்திலும் வைத்து வணங்க முடியும் என்பதே சிவத்தின் பெருமைகளில் முதன்மையானது. வேறு எந்த தெய்வத்தையும் இப்படி கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

சிவன்
சிவன்

எல்லாமுமாக இருக்கும் நம் ஆதிசிவனை விட்டு வேறெந்த தெய்வத்தை வணங்கினாலும் அது சிவத்தையே வணங்குவதாக அமையும். 'தென்னாட்டில் சிவன் என்றும் மற்ற எல்லா நாட்டிலும் வெவ்வேறு பெயர்களில் வணங்கப்படும் எங்கள் இறைவனான ஈசனே உன்னை எப்போதும் மறவேன்' என்று நம் சிந்தை உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். சிவத்தை சிந்திக்காத எல்லா நேரமும் வீணானதே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மார்கழி அதிகாலை வேளை மகத்துவம் நிறைந்த புண்ணிய காலம். அந்த பொழுதில் உறங்கவே கூடாது. அது ஈசனைத் தொழும் அற்புதமான வேளை. உடலையும் மனதையும் பக்குவப்படுத்திக் கொள்ளும் அந்த பொழுதில் ஆலயத்தில் இருப்பதும் ஈசனுக்கு அருகில் இருப்பதும் அவசியமானது. தியானம் செய்யவும், சிவபூசை செய்யவும் உகந்த வேளையிது. இந்த அதிகாலையில் ஈசனோடு ஒன்றி தவமிருப்பின் நல்ல குரு கிடைப்பார் என்கிறது சித்தர்களின் வாக்கு. ஏன். சிவமே நமக்கு குருவாகவும் கிடைக்கலாம் என்றும் சைவ உலகம் சொல்கிறது.

சிவபூசை
சிவபூசை
'சிவனே சிவஞானி யாதலாற் சுத்த
சிவனே யெனஅடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே.' என்கிறது திருமந்திரம்.

வைத்தியம், அறிவியல், வானவியல், யோகம், ஞானம் ஆகிய சாஸ்திரங்களை ஐயந்திரிபர அனைவருக்கும் அளிக்கவே மானிடப் பிறவி எடுத்தவர் கயிலை சிவயோகி. 18 சித்தர்களில் மூத்தவரான இவர், நந்தியெம்பெருமானின் முதன்மை சீடர். அகத்தியரின் விருப்பப்படி பொதிகை மலைக்கு எழுந்தருள வரும்போது, திருக்கேதாரம், பசுபதிநாத், அவிமுத்தம் எனும் காசி, விந்திய மலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி, தில்லை என இறை அனுபவம் பெற்றுக் கொண்டு திருவாவாடுதுறையை அடைந்தார். ஈசனின் திருவிளையாடலால் திருவாவடுதுறையை அடுத்த சாத்தனூரில் பசுக்கூட்டங்களை பாதுகாக்கும் விதமாக, இறந்து போன மேய்ப்பன் உடலில் புகுந்தார். மூலன் என்னும் அந்த மேய்ப்பனாக வடிவெடுத்த அந்த சிவயோகி பசுக்களை ஒப்படைத்த பின் மீண்டும் தன் உடலைத் தேட, அது மறைந்து போய் இருந்தது. இதுவும் ஈசன் சித்தமென உணர்ந்த திருமூலர் திருவாவடுதுறை அடைந்து அங்கு யோகத்தில் ஆழ்ந்தார். ஆண்டுக்கு ஒரு பாடல் என்ற வகையில் 3000 ஆண்டுகள் பாடினார். இது வெகு காலம் கழித்து திருஞான சம்பந்த பெருமான் திருக்கரங்களுக்குக் கிடைத்தது என்கிறது புராணம்.

ஈசன்
ஈசன்
DIXITH

ஊனோடு தொடர்ந்த பிறவியை வீணாக கெட்டொழிக்காது, உணவு உறக்கம் என்று பொழுதழிக்காது இவ்வுலக ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நன்னெறிகளும் மணக்கும் நால்வகை மலர்களாகக் கொண்டு திருமந்திர மாலையாகிய நூலை இறைவன் திருவடிக்குச் சூட்டினார் திருமூலர். இதுவே பக்தியின் உச்சம். எனவே மனம் கவரும் ஈசனின் அருளுக்கு ஏங்கும் என் அழகிய பாவையே உறக்கம் களைத்து ஈசனைப் பாட எங்களோடு விரைந்து வா!

அங்கணன் எங்கள் அமரர்பெம்மான் அடியார்க் கமுதன் அவனிவந்த எங்கள்பிரான், மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி நம்பெருமான் சிவபெருமான் மலர்ப்பதம் போற்றி! போற்றி!