Published:Updated:

திருவெம்பாவை - 8: தொடர்ந்து வருத்தும் பிறவி நோயை நீக்க உதவும் முறைகள் என்ன? மார்கழி உத்ஸவம்!

திருவெம்பாவை
News
திருவெம்பாவை

ஒளி தோன்றினால் இருள் விலகித்தான் ஆகவேண்டும். யுகம் யுகமாக இருண்டு இருந்தாலும் ஒளிக்கு முன்னால் இருள் இம்மி அளவு கூட நீடித்து இருக்க முடியாது. ஈசனும் அப்படியே.

"கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்

ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?

வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்!"

திருவெம்பாவை
திருவெம்பாவை

"கோழி கூவிவிட்டது. எங்கும் பறவைகள் கூவுகின்றன. இசைக்கு நாதனான ஈசனுக்காக ஏழு ஸ்வரங்களுடன் இசைக் கருவிகள் இசைக்கப்படுகின்றன. வெண் சங்குகள் முழங்குகின்றன. ஊரெங்கும் குதூகலமும் துள்ளலுமாய் ஈசனைக் கொண்டாடி வருகின்றனர் பக்தர்கள். இந்த அற்புதமான வேளையில், உலக இருள் நீங்குவதைப் போல, நம் மாயைகள் யாவும் நீங்க பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் ஈசனைப் பற்றிப் பாடுகின்றோம்; பேசுகின்றோம்; அவன் கருணையை எண்ணி துதிக்கின்றோம். ஆனால், இது எதுவும் அறியாமல் நீ தூங்குகிறாய். மாயை எனும் உறக்கத்துக்கு சொந்தமானவளே! விரத நாள்களில் அதிகம் உண்பதும், அதிகம் உறங்குவதும் தவறு இல்லையா! பாற்கடலில் உறையும் பரந்தாமனின் சிவபக்தியை நீ அறிவாய் அல்லவா! பாம்பணையில் அறிதுயிலில் வீற்றிருக்கும்போதும் அவரது இடது கரம் சிவலிங்கத்தையேப் பற்றி இருக்கும். அத்தனை சிவபக்தி கொண்டவர் திருமால். அத்தனை பெருமை கொண்ட சர்வ லோக நாயகனாம் நம் ஈசனை, ஏழைகளின் பங்காளனைப் பாடி மகிழ உடனே வா தோழி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒளி தோன்றினால் இருள் விலகித்தான் ஆகவேண்டும். யுகம் யுகமாக இருண்டு இருந்தாலும் ஒளிக்கு முன்னால் இருள் இம்மி அளவு கூட நீடித்து இருக்க முடியாது. ஈசனும் அப்படியே. பிறவிதோறும் பல பாவங்களும் மாயைகளும் ஆன்மாவை சூழ்ந்து ஆட்டி வைத்தாலும் ஈசன் அந்த ஆன்மாவை ஆட்கொண்டு விட்டால் போதும், வெம்மை கண்ட பனியாய் மாயை மறைந்து விடும். ஆன்மா சிவத்தோடு கலந்துவிடும். 'சோதியனாய், துன்னிருளாய், தோன்றாப் பெருமையனாய், ஆதியனாய், அந்தம் நடுவாகி அல்லானாய், நம்மை ஈர்த்து ஆட்கொண்ட எந்தை பெருமானை இவ்வேளையில் பாட வேண்டாமா! உறக்கம் எனும் மாயையை விட்டு அகன்று வா தோழி!

ஆனாய நாயனார்
ஆனாய நாயனார்

உறக்கம் என்றால் என்னவென்றே அறியாமல் சிந்தை, சொல், செயல் என்ற முக்கரணங்களாலும் எப்போதும் முக்கண்ணனின் திருவடிகளை மட்டுமே போற்றி வந்த ஆனாய நாயனார் பற்றி தெரியுமா தோழி! "முன்னின்ற மழ விடைமேல் முதல்வனார் எப்பொழுதும், சென்னின்ற மனப்பெரியோர் திருக்குழல் வாசனை கேட்க, இந்நின்ற நிலையேநம் பாலணைவாய் என அவரும், அந்நின்ற நிலைபெயர்ப்பார் ஐயர்திரு மங்கணைந்தார் ஆனாய நாயனார்!" கொன்றை மலரையே சிவமாக எண்ணித் தொழுது, ஐந்தெழுத்தை குழலில் ஓதி எந்நாளும் சிவபூஜையில் திளைத்தவர் இந்த திருவாளர். சைவம் போற்றும் இந்த ஆநிரை மேய்ப்பன், எந்தவித கல்வி-கேள்விகளிலும் தேர்ந்தவர் இல்லை. ஆனால் இவர் மனமுருகி ஈசனை எண்ணி குழல் ஊதுகையில் பாம்பும், புலியும், மானும், மயிலும், சிங்கமும், யானையும் ஒன்று சேர்ந்து லயித்துக் கிடந்தனவாம். வானவர், தானவர், விஞ்சையர், கின்னரர் உள்ளிட்ட சகல லோகத்தவரும் அந்த இசையில் குழைந்து ஆனாயருக்கு ஆதி பணிந்து நின்றனர் என்கிறது புராணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சி லால்குடி அருகே திருமங்கலம் என்ற ஊரில் யாதவர் குலத்தில் பிறந்தவர் ஆனாயர். கேட்கும் ஜீவன் யாவும் என்பு உருகும் வகையில் ஏழிசை கீதங்களை இசைத்தவர் ஆனாயனார். இசைக்குத் தலைவனான ஈசனைப் போற்றி அவர் வாசித்த ஐந்தெழுத்து மந்திரம் 'வங்கியம்' என்னும் வேய்ங்குழல் துறையில் தனித்துவம் பெற்றது. கொவ்வை இதழில் வேய்ங்குழல் பொருத்தி, ஏழிசை வகையில் விதவிதமாக, திருவைந்தெழுத்தை இசையாக, இசை வடிவிலான வேதமாக எங்கும் பரப்பினார். அது விண்ணுலக தேவர்களையும் கூட மயக்கி கட்டிவைத்தது. திகட்டாத கற்பகப் பூந்தேனும் தேவ அமுதமும் கலந்து உருவானது போல சகல உயிர்களுக்குள்ளும் பாய்ந்து உயிரை உருக்கியது என்கிறது திருத்தொண்டர் புராணம். இசையால் இறைவனை ஆராதிப்பது ஒரு சுகம், ஒரு தவம். அதே இசையால் பிற உயிர்களுக்கும் ஐந்தெழுத்தை உபதேசித்து பயன் அளிப்பது இன்னும் கூடுதல் சுகம், கூடுதல் புண்ணியம். அந்த மாபெரும் புண்ணியத்தை செய்து ஈசனோடு கலந்தவர் ஆனாயனார். ஈசனின் திருச்செவியை குளிர வைத்த இசைக்கு ஈடாக, ஈசன் ரிஷப வாகனத்தின் மேல் உமையாளுடன் காட்சி தந்து, 'இந்நின்ற நிலையே பூமழை பொழிய, முனிவர்கள் துதிக்கக் குழல் வாசித்துக்கொண்டே, அந்நின்ற நிலையோடு ஆனாயநாயனார் அரனாரின் அருகு அணைந்தார்!'

ஈசன்
ஈசன்

அநாதி காலம் தொடங்கி நம்மை தொடர்ந்து வருத்தும் பிறவி நோயை நீக்க வல்லது ஐந்தெழுத்தே. பஞ்சாக்ஷரம் எனும் இந்த நாமம் நமசிவாய என்று இக லோகத்துக்கும், சிவாயநம என்று பரலோகத்துக்கும் உதவ வல்ல மிகச் சிறந்த சூட்சும மந்திரம். இந்த ஐந்தெழுத்தை இடைவிடாது மெய்யன்பு கொண்டு மனம் கசிந்து ஓதுவோர் முத்தி பெறுவர்; சிவலோக பிராப்தி பெறுவர் என்கிறது சைவ உலகம். இந்த மாபெரும் செல்வமாம் ஐந்தெழுத்தை ஓதக்கூடிய அற்புதமான வேளை மார்கழி மாத அதிகாலை நேரமே. இந்த தெய்வாம்சம் கூடிய வேளையில் ஈசனைப் போற்றும் ஐந்தெழுத்தை ஓதாமல் இப்படி உறங்கலாமா தோழி, நம்மை ஒவ்வொரு விநாடியும் எதிர்பார்த்து காத்திருக்கும் நம் தலைவனாம் ஈசனை இன்னும் காத்திருக்கச் செய்யலாமா! இது தகுமா!

"பெரியாய் போற்றி பிரானே போற்றி

அரியாய் போற்றி அமலா போற்றி

மறையோர் கோல நெறியே போற்றி

முறையோ தரியேன் முதல்வா போற்றி!"