Published:Updated:

பெரியோரை வணங்குங்கள்!

மார்க்கண்டேயர் கதை
பிரீமியம் ஸ்டோரி
மார்க்கண்டேயர் கதை

மார்க்கண்டேயர் கதை

பெரியோரை வணங்குங்கள்!

மார்க்கண்டேயர் கதை

Published:Updated:
மார்க்கண்டேயர் கதை
பிரீமியம் ஸ்டோரி
மார்க்கண்டேயர் கதை

சிவனருளால் சிரஞ்ஜீவி வரம் பெற்ற மார்க்கண்டேயரின் சரிதத்தில் பலரும் அறியாத ஒரு ரகசியம் உண்டு என்பார்கள் ஆன்றோர்கள். மிருகண்ட மகரிஷி தன் மகனுக்கு உபநயனம் செய்துவைத்தார். பெரியவர்கள் யாரைக் கண்டாலும் காலில் விழுந்து ஆசி வாங்கவேண்டும் என்பதை மார்க்கண்டேயனுக்குச் சொல்லிக்கொடுத்தார்.

ஒருமுறை அவர்களின் ஆஸ்ரமத்துக்கு சப்த ரிஷிகள் வந்தனர். மார்க்கண்டேயன் அவர்களைப் பணிந்து வணங்கினான். சப்த ரிஷிகளும், `தீர்க்காயுஸ்மான் பவ' என்று வாழ்த்தினார்கள். அதன்பிறகே அவர்களுக்கு மார்க்கண்டேயனின் ஆயுள் குறித்த செய்தி தெரிந்தது. ரிஷிகள் திகைத்தனர். ஒருவேளை, தங்களின் வாக்கு பொய்த்துவிடுமோ என்று எண்ணியவர்கள், இதற்கு விடை தேடி அவனை அழைத்துக்கொண்டு பிரம்மலோகம் சென்றார்கள்.

அங்கு மார்க்கண்டேயன் பிரம்மனை வணங்க, அவரும் மரபுப்படி `தீர்க்காயுஸ்மான் பவ' என்றே வாழ்த்தினார். சப்த ரிஷிகளும் பிரம்மாவும் வாழ்த்திவிட்டபின் மார்க்கண்டேயனின் உயிரைக் காலன் பரிக்க முடியுமா? பெரியவர்களின் வாக்குப் பொய்த்துப்போக அந்த பரமேஸ்வரன் விடுவானா? ஆகவே, காலனைக் காலால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்தருளினார் இறைவன் என்கிறது புராணம்.

ஆகவே, இளையோர்கள் எப்போது வயதில் பெரியவர்களைப் பார்த்தாலும் அவர்களை வணங்குங்கள். அவர்களின் வாழ்த்து உங்களை வாழவைக்கும்.

- எம்.முருகன், சென்னை-44

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism