Published:Updated:

விழாக்கள்... விசேஷங்கள்!

விழாக்கள்... விசேஷங்கள்
பிரீமியம் ஸ்டோரி
விழாக்கள்... விசேஷங்கள்

மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

விழாக்கள்... விசேஷங்கள்!

மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

Published:Updated:
விழாக்கள்... விசேஷங்கள்
பிரீமியம் ஸ்டோரி
விழாக்கள்... விசேஷங்கள்

மதுரை அருகே `கள்ளழகர்' எனப் போற்றப்படும் சுந்தராஜப்பெருமாள் அருள்பாலிக்கும் புண்ணியத் தலமான அழகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசிமாத தெப்பத் திருவிழா பிரசித்திபெற்றதாகும். தீவினைகளைத் தீர்க்கும் அற்புத வைபவம் தெப்போத்ஸவம் என்பார்கள்.

தெப்போத்ஸவம்
தெப்போத்ஸவம்


கோயிலுக்குச் சொந்தமான பொய்கைக்கரைப்பட்டியில் உள்ள கோயில் திருக்குளத்தில் தெப்பத்தில் வலம் வரும் பெருமாளின் அற்புத தரிசனம்!

குலதெய்வ வழிபாடு
குலதெய்வ வழிபாடு

மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆயிரகணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் புனித நீராடினர். தொடர்ந்து மாலையில், நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், நீர் நிலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் மகாமகக் குளத்தில் மகா ஆரத்தி வைபவமும் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது!

மாசிமகத் திருவிழா
மாசிமகத் திருவிழா

ஒவ்வோர் ஆண்டும் மாசிமகத் திருவிழாவை ஒட்டி மாமல்லபுரத்தில் இருளர் பழங்குடியினர் திரண்டு வழிபாடுகளை மேற்கொள்வர். இந்த நாளில் மாமல்லபுரம் கடற்கரை விழாக்கோலம் பூண்டிருக்கும். இருளர் சமூகத்தைச் சேர்ந்தோர் இங்கு குடில்கள் அமைத்து குலதெய்வ வழிபாடு, திருமணம், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளை விமர்சியாகக் கொண்டாடுவது வழக்கம். இந்த நாளில் அவர்கள் தங்கள் குலதெய்வமான கன்னியம்மனுக்கும் வழிபாடு நடத்துவர். கடந்த மாசிப் பௌர்ணமி அன்றும் மாலையிலேயே திரண்ட மக்கள் விடிய விடிய வழிபாடுகளையும் கொண்டாட்டங்களையும் நிகழ்த்தினர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism