Published:Updated:

ஆறு மனமே ஆறு

மாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
மாதா அமிர்தானந்தமயி

மாதா அமிர்தானந்தமயி

ஆறு மனமே ஆறு

மாதா அமிர்தானந்தமயி

Published:Updated:
மாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
மாதா அமிர்தானந்தமயி

பூங்காவில் ஒரு பெண் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தாள். சுற்றி வரும் பாதையில், முதியவர் ஒருவர் தனியே அமர்ந்து சிரித்துக்கொண்டிருப்பதைக் கண்டாள். அவரிடம் சென்று பேச்சு கொடுத்தாள் அந்தப் பெண்.

மாதா அமிர்தானந்தமயி
மாதா அமிர்தானந்தமயி


“எவ்வித கவலையுமின்றி சிரிப்பில் ஆழ்ந்திருக்கிறீர்களே... அதன் ரகசியத்தை நான் அறியலாமா?’’

அவர் பதில் சொன்னார்: “அனுபவிக்கத் தெரிந்த நாளிலிருந்து, என் ஒரு நாள் உணவு, பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா? காலை எழுந்தது முதல் நாளொன்றுக்கு இரண்டு பாட்டில் மது, ஒரு முழு பாக்கெட் சிகரெட், மதியமும் இரவும் உணவுக்கு மாமிசம் அவசியம். நடனம் ஆடுவது மிகவும் பிடிக்கும். செய்வதற்கு வேலை எதுவும் இல்லை. உடற்பயிற்சி பழக்கமும் இல்லை...’’ என நீண்டது அவரது பட்டியல்.

அந்தப் பெண்ணுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. `ஒருவேளை இவர் மனநிலை சரியில்லாதவராக இருப்பாரோ’ என்ற எண்ணம் கூட எழுந்தது அவளுக்கு.

``உங்களின் வயதென்ன?’’ என்று கேட்டாள்.

அவர் சொன்னார் ``இருபத்தியாறு!’’

அதிர்ந்துபோனாள் அந்தப் பெண். அவர் முதியவர் இல்லை; இளைஞர்தான்... சிறுவயதிலேயே முதுமைக் கோலம். காரணம் கூடாத பழக்கவழக்கங்கள். இந்த நிலைக்கு நாம் அழுவதா... சிரிப்பதா?!

எல்லோரும் இப்படித்தானா என்றால்... இல்லை. இவரைப் போன்றவர்களும் உண்டு; மிதவாதிகளும் உண்டு; இவற்றிலிருந்து விலகி நிற்கும் விதிவிலக்குகளும் உண்டு. அதேநேரம், பல இளைஞர் களின் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனம்.

பெற்றோர் வளர்ப்பு, சமுதாய வழிகாட்டல், சிறு வயதிலேயே ஆடம்பர வாழ்க்கை, படிப்புக்குப் பின்னர் கைநிறைய பணம், குணத்தையும் வாழ்வையும் கெடுக்கும் பகட்டு உலக வாழ்க்கை... இங்ஙனம் இளையோரின் சீரழிவுக்குப் பல காரணங்கள் உண்டு.

சுவாம் விவேகானந்தர் என்ன சொல்கிறார் தெரியுமா? “இளமை என்பது ஆடம்பரமான வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. மகிழ்ச்சியும், வெற்றியும், நற்பெயரும் இளமைப்பருவத்து வாழ்க்கையை ஆதாரமா கக் கொண்டவை. அது குயவனின் கையில் உள்ள மென்மையான களிமண் போன்றது.

குயவனின் கையும் மனமும் அந்த மென்மையான களிமண்ணுக்கு அட்டகாசமான வடிவத்தைக் கொடுக்கின்றன. இளமையை முறையாக உபயோகித்தால், நம் வாழ்கையை நாம் விரும்பும் வடிவத்தில் அமைத்துக்கொள்ளலாம்” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

ஆம்! அவர் சொல்வதும் சரிதான். மனதுக்குத் தேவையான நல்ல பயிற்சியை அளிக்கக்கூடிய நிகழ்காலத்தில் வாழ்வதுதான் இளமை. இன்றைய தலைமுறை இளமையை முறையாகப் பயன்படுத்துகிறதா? இதற்கான பதிலை நீங்கள்தான் சொல்லவேண்டும்!

இளைஞர்களின் நிலை...

இன்றைய மனித குலம், பெரும்பாலும் கடும் நோயால் பீடிக்கப்பட்ட நோயாளியைப் போன்று காட்சியளிக்கிறது. இந்த நிலை ஒரு தொற்று போன்று இளைஞர்களையும் பாதிக்கிறது என்ற மனவருத்தம் அம்மாவுக்கு அதிகம் உண்டு மக்களே!

இளைஞர்கள் பொது அக்கறை இல்லாதவர்களா என்ன? அவர்களுக்குப் பொது அக்கறை உண்டு. சமூகத்துக்கு இயன்றதைச் செய்யவேண்டும் என்ற எண்ணமும் உண்டு. ஆனால், அது மட்டும் போதுமா?

இதுவரை செய்தது போதாது; இன்னும் சிறப்பாகச் செயல்படவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக வளர வேண்டும். இதற்கு இளைஞர்கள் தயார்தான். ஆனால் சிக்கல் என்னவென்றால், உலக சுகபோகங்கள் அவர்களைச் சுண்டி இழுக்கும்போது, அவற்றில் சிக்கி பாதைமாறிச் செல்கின்றனர்.

என்ன செய்யலாம் ?

இளைஞர்களுக்கு நன்னெறியையும் நல்ல குணங்களையும் எப்படி வளர்ப்பது? அதற்கு ஆத்ம வளர்ச்சி அவசியம். இளைஞர்களை எப்படித் தயாராக்குவது? அவர்களின் சிக்கல்களை, அவர்களின் எண்ணப் போக்கிலேயே அடையாளம் கண்டு, சரியான முறையில் புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஆன்மிக அறிவையும், விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் துவண்டுபோகும்போது தோள் கொடுத்து, அவர்கள் தடம் மாறும் நிலையில் பாதையை நேராக்கி, இணையாகப் பயணிக்கச் செய்யவேண்டும்.

அதற்கு சுவாமி விவேகானந்தர் போன் றோரின் செய்திகளும் வழிகாட்டலும் துணை செய்யும். ரிஷிகளுக்கும் தபஸ்விகளுக்கும் மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் நம் தெய்விக நாடான பாரதமும் அதன் ஆன்மிகமும் எப்படி வழி காட்டுகின்றன என்பதைப் பார்ப்பதும் அவசியம்.

அதற்கு மீண்டும் நாம் சுவாமி விவேகானந்தரை நினைவில்கொள்ள வேண்டும்.

-மலரும்..

மாதா அமிர்தானந்தமயி
மாதா அமிர்தானந்தமயி

அம்மாவின் பதில்கள்...

பெங்களூரு அமிர்தா பொறியியல் கல்லூரி மாணவன் ஒருவன் அம்மாவிடம் கேட்டது:

? `எல்லோரும் மடம், ஆசிரமம், குருகுலம் என அடைக்கலம் புகுவது என்பது, வாழ்க்கையை வாழத் தெரியாமல், ஒதுங்கி பதுங்குவது போன்றது அல்லவா?’

! `சரியான கேள்வி! இந்தப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்க வந்திருப்பது, வாழ்க்கை யிலிருந்து ஓடிப் பதுங்குவதற்காகவா? இல்லை. வாழ்வதற்குத் தேவையான ஏட்டுப் பாடங்களைக் கற்றுக் கொள்வதற்காகத்தான்.

மடமும் ஆசிரமும் அப்படித்தான். மனதைச் சீரழிக்கும் உலகக் கழிவுகளை அகற்றி, மனதைக் கட்டுப்படுத்தும் வித்தையைத் கற்றுக்கொள்ளவே பலரும் அங்கு வந்து சேர்கிறார்கள்.

ஆன்மிக வாழ்வில் குரு அதிமுக்கியமானவர். தேடல் பயணத்தில், குருவானவர் தன்னலமற்ற வழிகாட்டியாகிறார். வாழ்வின் ஒவ்வொரு சூழலை யும் ஒரே சீரான, சமநிலை கொண்ட மனதுடன் எப்படி எதிர்கொள்வது, எப்படி வாழ்வது என்பன வற்றை அங்கு மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்.

வாகனத்தை நன்றாக ஓட்டுவதற்குக் கற்றுக்கொண்ட பிறகே, அதை பிரதான சாலையில் எடுத்துச்செல்லவேண்டும். இல்லையெனில், விபத்து ஏற்படலாம். ஏட்டுக் கல்வி வாழ்வுக்கு முக்கியம் என்றாலும், ஆன்மிக வழிகாட்டலே, ஒரு மனிதனை மனிதனாக வாழ வைக்கிறது.

ஆக, ஆசிரமும் மடமும் வாழ்க்கையை விட்டுப் பதுங்கும் இடங்கள் இல்லை. உண்மையைச் சொல்லப் போனால், அங்கு வாழ்பவர்களே மாயை எனும் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து உன்னதமான, நிர்மலமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்!

எட்டமடை பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி எழுப்பிய கேள்வி:

? `இந்தக் காலத்தில் கல்லூரி, பல்கலைக்கழகப் படிப்பில் சொல்ல முடியாத அளவுக்கு எதிர்பார்ப்புகள் அதிகம். அதனால் ஏற்படும் மன அழுத்தமோ மிக மிக அதிகம். இதை எப்படிச் சமாளிப்பது?’

! ஒரு குளத்தில் நீரின் மேற்பரப்பில் அதிர்வலைகள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. அழகிய நிலவின் பிம்பம் தெளிவாகத் தெரிவதில்லை. அதுபோன்றதுதான் அலைபாயும் மனநிலையும். கலங்கிய புத்தி இருந்தால் படிப்பு ஏறாது.

உங்களுடைய பிரச்னை என்ன தெரியுமா? ஆசிரியர் வகுப்பறையில் சொல்லிக்கொடுப்பதைச் சரியாகக் கவனிப்பதில்லை. கவனம் முழுவ தும் படிப்பில் நிலைக்காமல்... பாடங்கள் இவ்வளவு கடினமாக இருக்கின்றனவே, படிப்பது எப்படி, தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி என்பவற்றைப் பற்றியெல்லாம் யோசிப்பதால் சிதறுகிறது. ஆக, கவனத்தைச் சிதறவிடாமல் பாடத்தை உள்வாங்கிக் கொண்டால், தெர்வு பயம் துளியும் இருக்காது. அப்போது எவ்வித சிக்கலோ மன அழுத்தமோ இருக்காது.

படித்த பாடங்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும். கேளிக்கைகள் வேண்டியதுதான். ஆனால் அவற்றுக்குச் செலவழிக்கும் நேர அளவு கட்டுக்குள் இருக்க வேண்டும். மனதைத் திசை திருப்பும் விஷயங்களைத் தவிர்க்கவேண்டும். ஒவ்வொரு நாளும் தியானத்துக்கென நேரம் ஒதுக்க வேண்டும். தியானம் மனதுக்கு அமைதி தரும். அந்த அமைதி, மேலே நான் சொன்ன அனைத்தையும் கடைப்பிடிக்க உதவும்.