
மதுரா நாயகனான கண்ணனைப் போற்றி மகான் வல்லபாசார்யர் அருளிய மகத்துவமான துதிப்பாடல் இது. எட்டு ஸ்லோகங்கள் கொண்ட இந்த அஷ்டகத்தைப் பாடி, கண்ணனை வழிபடுவது மிகவும் விசேஷம். மதுரம் என்றால் இனிமை எனப் பொருள். கண்ணனின் திருக்கோலம், அவனுடைய வாக்கு, நடனம், லீலைகள் அனைத்தும் இனிமை... இனிமை... எனப் போற்றுகிறது மதுராஷ்டகம்.
அற்புதமான இந்தப் பாடலைப் பாடி வழிபடுவதன் மூலம் கண்ணனின் திருவருள் பரிபூரணமாகக் கைகூடும். அதன் பலனால் பிணி, வறுமை, கடன், மனச் சலனம், தடைகள் ஆகியவை நீங்கும்; நம் வாழ்வும் இனிமையாகும்!


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதரம் மதுரம் வதனம் மதுரம்
நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
கருத்து: அதரம் இனிமை, முகம் இனிமை, கண் இனிமை, சிரிப்பு இனிமை, இதயம் இனிமை, நடப்பது இனிமை, மதுரா நாயகனைச் சேர்ந்த யாவும் இனிமையே!
வசனம் மதுரம் சரிதம் மதுரம்
வஸனம் மதுரம் வலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
கருத்து: வார்த்தை இனிமை, சரித்திரம் இனிமை, வஸ்திரம் இனிமை, உத்தம புருஷர்களுக்கே உரித்தான மடிப்புச் சதை இனிமை, அசைவது இனிமை, சுற்றுவது இனிமை, மதுரா நாயகனைச் சேர்ந்த யாவும் இனிமையே.

வேணூர் மதுரோ ரேணுர்மதுர:
பாணிர்மதுர: பாதெள மதுரெள
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
கருத்து: புல்லாங்குழல் இனிமை, தூளி இனிமை, கை இனிமை, பாதங்கள் இனிமையானவை, நர்த்தனம் இனிமை, சிநேகம் இனிமை, மதுரா நாயகனைச் சேர்ந்த யாவும் இனிமையே.
கீதம் மதுரம் பீதம் மதுரம் புக்தம்
மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
கருத்து: சங்கீதம் இனிமை, அருந்துதல் இனிமை, சாப்பிடுதல் இனிமை, தூக்கம் இனிமை, ஸ்வரூபம் இனிமை, திலகம் இனிமை, மதுரா நாயகனைச் சேர்ந்த யாவும் இனிமையே.
கரணம் மதுரம் தரணம் மதுரம்
ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
கருத்து: செய்கை இனிமை, தாண்டுதல் இனிமை, கிரஹித்தல் இனிமை, நினைப்பு இனிமை, வமணம் இனிமை, அடக்கம் இனிமை, மதுரா நாயகனைச் சேர்ந்த யாவும் இனிமையே.

குஞ்ஜா மதுரா மாலா மதுரா
யமுனா மதுரா வீசீ மதுரா
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
கருத்து: குஞ்ஜா (குந்துமணி மாலை) இனிமை, முத்துமாலை இனிமை, யமுனை இனிமை, அலை இனிமை, ஜலம் இனிமை, தாமரை இனிமை, மதுரா நாயகனைச் சேர்ந்த யாவும் இனிமையே.
கோபீ மதுரா லீலா மதுரா யுக்தம்
மதுரம் புக்தம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் ஸிஷ்டம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
கருத்து: கோபிகை இனிமை, லீலை இனிமை, சேர்க்கை இனிமை, அனுபவம் இனிமை, பார்வை இனிமை, மீதம் இனிமை, மதுரா நாயகனைச் சேர்ந்த யாவும் இனிமையே.
கோபா மதுரா காவோ மதுரா
யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
கருத்து: கோபர்கள் இனிமையானவர்கள், பசுக்கள் இனிமை யானவை, கம்பு இனிமை, உண்டாக்குதல் இனிமை, முறித்தல் இனிமை, பயனளித்தல் இனிமை, மதுரா நாயகனைச் சேர்ந்த யாவும் இனிமையே.