Published:Updated:

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி; தேரில் அமர்ந்து உலா; களைகட்டிய மாசித் தேர் திருவிழா!

மேல்மலையனூர் தேர் திருவிழா

அங்காள பரமேஸ்வரியை சாந்தப்படுத்துவதற்காக தேவர்களும், முனிவர்களும் தேரின் சக்கரமாகவும், அச்சாணியாகவும் மாறி அம்மனைத் தேரில் அமரவைத்து சாந்தப்படுத்திய நிகழ்வாக இன்றளவும் இந்தத் தேர் திருவிழா மேல்மலையனூரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி; தேரில் அமர்ந்து உலா; களைகட்டிய மாசித் தேர் திருவிழா!

அங்காள பரமேஸ்வரியை சாந்தப்படுத்துவதற்காக தேவர்களும், முனிவர்களும் தேரின் சக்கரமாகவும், அச்சாணியாகவும் மாறி அம்மனைத் தேரில் அமரவைத்து சாந்தப்படுத்திய நிகழ்வாக இன்றளவும் இந்தத் தேர் திருவிழா மேல்மலையனூரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Published:Updated:
மேல்மலையனூர் தேர் திருவிழா

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆன்மிகச் சிறப்புப் பெற்ற ஆலயங்களில் ஒன்று ’மேல்மலையனூர் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம்'. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 13 நாள்கள் மாசிப் பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறும். அந்த வகையில், இந்த வருடமும் அத்திருவிழா சிறப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாசி மாதம் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்திருக்கும் மயானகொள்ளை திருவிழா மாசி 18ம் தேதியும், தீமிதி திருவிழா உற்சவம் மாசி 21ம் தேதியும் சிறப்பாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து, நடைபெறும் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்பிடித்து இழுக்கும் உற்சவம் இன்றைய தினம் (7.3.2022) கோலாகலமாக கொண்டப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அங்காளப்பரமேஸ்வரி அம்மன்
அங்காளப்பரமேஸ்வரி அம்மன்

பிரம்மனின் 5வது சிரத்தை சிவபெருமான் கொய்தபோது, அந்தக் கபாலம் ஈசனின் கையிலேயே ஒட்டிக்கொண்டது. இதனால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷமும் ஏற்பட்டது. அந்த தோஷம் நீங்கும் பொருட்டு, அந்த கபாலத்தை பார்வதிதேவி தன் பாதத்தால் நசுக்கி அழித்த இடம் இந்த மேல்மலையனூர் மயானம்தான் என்கிறது தலபுராணம். இதன் நினைவாகவே ஆண்டு தோறும் மயானக்கொள்ளை திருவிழா இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது என்கிறார்கள் பக்தர்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கபாலத்தை அழித்த பின்பும் அங்காளபரமேஸ்வரிக்குக் கோபம் தணியவில்லையாம். அதனால், அம்மனின் கோபத்தை தணிக்க தேர்திருவிழா நடத்தினர். அப்போது தேவர்களும், முனிவர்களும் அந்தத் தேருக்கு சக்கரமாகவும், அச்சாணியாகவும் மாறினார்களாம். அங்காளபரமேஸ்வரி அம்மன், அந்த தேரில் வலம் வந்து சினம் தணிந்தார். அந்த ஐதிகத்தின் படியே இன்றளவும் இந்தத் திருத்தேர் திருவிழா நடைபெற்று வருகிறது.

அசுர சக்திகளை அடித்துவிரட்டும் அங்காள பரமேஸ்வரியின் மயானக்கொள்ளை!
அசுர சக்திகளை அடித்துவிரட்டும் அங்காள பரமேஸ்வரியின் மயானக்கொள்ளை!

அம்மன் சாந்தம் அடைந்தததும், தேவர்களும் முனிவர்களும் சுய உருவம் பெற்று மறைந்தனராம். அதன்படியே தேரோட்டம் முடிந்ததும் ஒவ்வொரு ஆண்டும் தேரை பிரித்துவைத்து விடுகிறார்கள். இன்று புதியதாக உருவாக்கப்பட்டு, அழகாய் அலங்கரிக்கப்பட்ட தேரினில் அங்காள பரமேஸ்வரி அம்மன் அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். மேல்மலையனூரில் திருத்தேர் நிகழ்ச்சி என்பதினால் இன்றைய தினம் அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.

இந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டு, அம்மனின் பரிபூரண அருளை பெறுவதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டு, தேரை வடம் பிடித்து இழுத்து மகிழ்ந்தனர்.