தொடர்கள்
Published:Updated:

சிவன் சார் எங்களுக்கு அட்சய பாத்திரம்!

சிவன் சார்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவன் சார்

சிவன் சார்

``சிவசாகரம் சிவராமண்ணாவின் இன்டர்வியூவைக் கேட்டதில் இருந்து சிவன் சார் மீது அதீத பக்தி உண் டானது. உடனே போய் சாரை தரிசிக்கணும்னு தோணிச்சு. சிவசாகரத்துக்கு முதல் முறையா போனேன். நாங்க போய் சாரைப் பார்த்தோம் என்பதைவிட, அவர் எங்களைப் பார்த்தார்னுதான் சொல்லணும். அன்றிலிருந்து எங்களுக்கு எல்லாமே சார்தான். அவர் எங்க வாழ்வில் நிகழ்த்தியவை எல்லாமே பெரிய பெரிய அற்புதங்கள்!’’

சிவன் சார் எங்களுக்கு அட்சய பாத்திரம்!


- சிலிர்ப்பும் நெகிழ்ச்சியுமாக சிவன் சார் நிகழ்த்திய அற்புதங்களைத் தொடர்ந்து விவரித்தார், கோவிந்தராஜன்.

``எவ்வளவோ சவால்கள்... அவற்றை எதிர்கொள்ளும் வல்லமையைக் கொடுத்தது, பலமுறை எங்கள் வாழ்வைக் காப்பாற்றிக் கொடுத்தது, முக்கிய முடிவுகளைத் தீர்க்கமாக எடுக்கவைத்தது என எத்தனையோ பண்ணியிருக் கார் சிவன் சார். அவரை மனசில் நினைச்சுக்கிட்டாலே போதும். எல்லாம் நன்மையாகவே நடக்கும். அந்த நினைப்பை உண்டாக்குவதும் அவர்தான்.

எனக்கு வரவேண்டிய பெரிய தொகை ரொம்ப நாளா வராமல் இருந்தது. ‘சார்... இது வந்ததுன்னா உங்களுக்கு மஹா ருத்ரம் பண்ணலாமே’ன்னு நினைச்சுட்டிருந்தேன். அந்தத் தொகை உடனடியா கைக்கு வந்தது. 2020-ல் மஹா ருத்ரத்தில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைச்சது.

2021-ல் ஒரு சம்பவம். `ஒய்.எம்.சி.ஏ-வுக்கு ஒரு ஈவன்டுக்காகப் போயிருந்தேன். காரை பார்க் பண்றதுக்காக ரிவர்ஸில் வர்றப்ப, ‘நிறுத்துங்க... நிறுத்துங்க... வண்டி கவிழ்ந்துடும்’னு கத்திக்கிட்டே ஒருத்தர் சைக்கிளில் வேகமா வந்தார். எனக்கு என்னன்னே புரியலை. ‘என்னப்பா சொல்ற?’ன்னு கேட்டப்ப, `சார் வண்டியை விட்டு முதல்ல இறங்குங்க’ன்னு பதறினார்.

இறங்கிப் பார்த்தால்… ஒரு பெரிய பள்ளத்தில் சரிந்தபடி நிற்கிறது கார். சினிமாவில் எல்லாம் வருமே அந்த மாதிரி... மேலும் ஒரு இஞ்ச் நகர்ந்திருந் தால் வண்டி கவிழ்ந்து, எனக்கு என்ன வேண்டுமானாலும் ஆகியிருக்கும். வண்டியைவிட்டு இறங்கியதே பெரிய விஷயமாக இருந்தது.

அடுத்து, வண்டியை எப்படி வெளியே எடுக்கிறதுன்னு யோசிக்கிறதுக் குள்ள, அங்கேயிருந்த ஒரு டிரைவர் வந்து, ‘சார். நீங்க பின்னாடி தள்ளுங்க... நான் பார்த்துக்கிறேன்’னு சொன்னார். அத்துடன் இன்னும் நாலைஞ்சு பேரையும் உதவிக்கு அழைத்து வந்தார். எல்லாருமா சேர்ந்து வண்டியை வெளியே எடுத்தாங்க.

அந்த நேரத்துல அந்த டிரைவர், சைக்கிள்காரர் இவங்கள்லாம் எப்படி வந்தாங்க... எனக்கு உதவுனாங்க... எதுவுமே புரியலை. நன்றி சொல்ல சைக்கிள் காரரைத் தேடினால், அவரைக் காணவில்லை. டிரைவரிடம் நன்றி சொல்லிவிட்டு அவரிடம் பெயரைக் கேட்டேன். ‘என் பெயர் சிவா!’ என்றார். சிலிர்த்துப் போனேன் நான். எனக்கு உயிர்ப் பிச்சை போட்டது சார்தான்!

எனக்கு மட்டுமல்ல, என் மனைவி செளம்யாவுக்கும் சார் மீது அதீத பக்தி உண்டு. எந்தக் கஷ்டம்னாலும் சரி, என்ன வேணும்னாலும் சரி, சாருக்கு ஒரு நோட்டில் எழுதுவார்... ‘சார் நீங்கதான் பார்த்துக் கணும்’னு. என் பையனின் கல்லூரி அட்மிஷன், என் பெரிய பொண்ணோட கல்யாணம் இப்படி எல்லா விஷயங்களையும் சார்தான் நடத்திக் கொடுத்திருக்கார்.

சார் நிஜமாவே ஓர் அட்சய பாத்திரம்தான். வாராவாரம் சாரோட பூஜைக்குப் போறோம். நித்ய பூஜை பண்ணக் கூடிய பாக்கியம் கிடைச்சிருக்கு. ஓய்வுக்குப் பிறகும் என் கம்பெனியில் எனக்கு வேலை எக்ஸ்டென்ட் ஆகியிருக்கு. காரணம் சாரின் அனுக்கிரகம்தான்.

போன வாரம் புயல் - மழை தருணத்தில் நடந்தது இது. மழை தொடர்ந்து பெய்துட்டிருந்த வெள்ளிக்கிழமை. எங்க மாமனார் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்கு, பால்காரர் வந்திருக் கிறார். “பசு கன்று போடப் போறது. அந்த நேரத்தில் அது வீட்டுக் குள்ளயும் வராது. எங்கேயாவது பாதுகாப்பான இடத் தில் கட்டணும்”னு கேட்டிருக்கார். எங்க மாமனார் வீட்டில் ஷெட் மாதிரி ஒரு இடம் இருந்ததால் அங்கே கொண்டு வந்து கட்டியிருக்காங்க. கன்னுக்குட்டியின் தலை வெளிய வர்றச்சே கற்பூரம் காட்டணும்னு சிவராமண்ணா சொன்னார். அதைப் பார்த்தால் பாக்யமா இருக்குமேன்னு நினைச்சேன். எனக்கோ, கோவை போக வேண்டிய வேலை.

திங்கள்கிழமை நான் வந்தபிறகுதான் பிரசவம் ஆகுற மாதிரி இருக்குன்னு சொன்னாங்க. மழையும் விட்ருச்சு. நானும் மனைவி, மகள்களை அழைச்சுக்கிட்டுப் போனேன். அந்தப் பசு உட்காருவதும் எழுந்து நிக்கிறதுமாக அவஸ்தைப் பட்டுட்டு இருந்தது. கரெக்டா பூஜை ரூம் பக்கத்தில் வரும் அந்த ஷெட். பெரியவா படம் ஒண்ணை எடுத்து பசுவுக்கு எதிர்புறத்திலே வச்சேன். அவர் பல கோசாலைகள் போனவராச்சே... பிரசவத்தை அவர் நல்லவிதமா முடிக்க உதவட்டும்னு. என் பொண்ணு சுரபி, `சிவன் சார் போற்றி' சொல்லிட்டே இருந்தா. கொஞ்ச நேரத்தில் பிரசவம் ஆச்சு. அன்னிக்கு பூசம் நட்சத் திரம். உடனே கற்பூர ஆரத்தி எடுத்தோம். சார் அருளால் அதைப் பார்த்து வணங்கும் பாக்கியம் கிடைச்சுது!

இப்படி, எல்லா நல்லதுகளும் நடக்க துணையாக இருந்து அருள்பாலிப்பவர் சார். சிவன்சார் திருவடிகளே சரணம்!

- சிலிர்ப்போம்...

சுவாதி, விசாகத்தில் வழிபட்டால்....

மதுரையில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது சோழவந்தான். இங்கே, வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது பிரளயநாதர் கோயில்! பாண்டிய மன்னன் ஒருவன், காசியிலிருந்து சிவலிங்கம் எடுத்து வந்து, இங்கே பிரதிஷ்டை செய்து அனுதினமும் வழிபட்டு வந்ததாகச் சொல்கிறது தல புராணம். வெள்ளப் பெருக்கில் இருந்து மக்களைக் காத்தவர் ஆதலால், இங்குள்ள இறைவனுக்குப் பிரளயநாதர் என்று திருப்பெயராம். அம்பாள் பிரளயநாயகி. விசாகம் மற்றும் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான தோஷ பரிகாரத் தலம் இது என்பது விசேஷம். இந்த ஆலயத்தில் போகர் மகரிஷி தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார். குரு மற்றும் சித்தர் முதலானோரின் சாபத்துக்கு ஆளானவர்கள், மகரிஷி போகரை வணங்கி வழிபட்டால் சாப விமோசனம் பெறுவர் என்பது நம்பிக்கை.

- கே.குமார், சென்னை-44