Published:Updated:

இரண்டு கழுகுகள் இரண்டு குரங்குகள்!

நீதிக்கதை
பிரீமியம் ஸ்டோரி
நீதிக்கதை

ஆன்மிக நீதிக்கதை

இரண்டு கழுகுகள் இரண்டு குரங்குகள்!

ஆன்மிக நீதிக்கதை

Published:Updated:
நீதிக்கதை
பிரீமியம் ஸ்டோரி
நீதிக்கதை

நதிக்கரையில் அமைந்த அந்தக் கிராமத்தில் ஒரு மடம் இருந்தது. துறவிகள் பலர் அந்த மடத்தில் தங்கியிருந்தனர். கிராமத்தவன் ஒருவனுக்கு அந்தத் துறவிகள் மீது அதீத வெறுப்பு. `எதுவும் செய்யாமல் சும்மா பொழுது போக்குபவர்கள்’ என்று அவர்களைக் குறித்து விமர்சனம் செய்வான்.

நீதிக் கதை
நீதிக் கதை


ஒருநாள், `மடத்துக்குச் சென்று துறவிகள் என்னதான் செய்கிறார்கள் என்று பார்த்து வருவோமே’ என்று விரும்பினான். உடனே கிளம்பிச் சென்றான். மடத்தின் வாயிலில் துறவி ஒருவர் நின்றிருந்தார்.

கிராமத்து ஆசாமி அவரிடம் கேட்டான்: ``இங்கு நின்று என்ன செய்கிறீர்கள்... சும்மா நின்றுகொண்டிருக்கிறீர்களே?’’

``நான் சும்மா இருக்கவில்லை. இரண்டு கழுகுகள், இரண்டு குரங்குகள், இரண்டு முயல்கள், ஒரு விஷப்பாம்பு ஆகியவற்றைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார் துறவி.

கிராமத்து ஆசாமி சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கே முயல்களோ, குரங்குகளோ, கழுகோ, பாம்போ எதுவும் தென்படவில்லை.

``சும்மா சொல்கிறீர்கள்... இங்கு எதுவும் இல்லையே’’ என்றான்.

உடனே அந்தத் துறவி சிரித்தபடியே அவனுக்கு விளக்கினார்...

``என் இரண்டு கண்களும் இரண்டு கழுகுகள். `துறுதுறுவென’ சுழல்வதாக இருக்கும். கண்டதையும் பார்க்கும்; தேவையில்லாதவற்றை விரும்பி ரசித்து மூளையைக் கெடுக்கும்.

என் இரண்டு கைகளும் இரண்டு குரங்குகள். எதைப் பிடிக்கலாம் என்று தினவெடுத்து அலையும். என் இரண்டு கால்களும் இரண்டு முயல்கள். துள்ளிக் குதித்து நிலையில்லாமல் ஓட யத்தனிக்கும்; அதனால் உள்ளமும் தடுமாறும்.

என் நாவு இருக்கிறதே, அது கடுமையான விஷப் பாம்பு. யாரைத் தீண்டலாம் என்றே குறியாக இருக்கும். இவற்றை அப்படியே அதனதன் விருப்பப்படியே விட்டுவிட்டால் ஆபத்து. அதனால்தான் எச்சரிக்கையுடன் அவற்றைக் கண்காணிப்பதே என் வேலை’’ என்றர் துறவி.

கிராமத்து அன்பருக்கு உண்மை புரிந்தது. புலனடக்கம் எவ்வளவு அவசியம் என்பதையும், நம்மை நாம் கவனித்துக்கொள்வதே பெரிய வேலை என்பதையும் புரிந்து தெளிந்தார்.

- எஸ்.பாலு, திருச்சி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism