தொடர்கள்
Published:Updated:

ஒரு கனவு!

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்தனை விருந்து

சிந்தனை விருந்து

நாம் நினைத்தே பார்த்திராதவர்கள், பல நல்ல கருத்துகளை உலகத்துக்குத் தந்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது உண்மையிலேயே வியப்பு ஏற்படுகிறது. தொழிலதிபரும், பரந்துபட்ட கொடையாளருமாக அறியப்படும் நல்லி குப்புசாமி செட்டியார், ஓர் எழுத்தாளரும்கூட.

சிந்தனை விருந்து
சிந்தனை விருந்து

சென்னை, கன்னிமாரா நூலகத்தில் சிறு தேடுதலில் இருந்தபோது, அவர் எழுதியிருந்த நூல்களெல்லாம் கண்ணில்பட்டன. `ஹிதோபதேசத்தில் நிர்வாகம்’, `வியாபாரத்தைப் பெருக்குவது எப்படி?’, `வெற்றி மேல் வெற்றி’, `பாரதியின் விசுவரூப தரிசனம்’... எனத் தொடர்ந்த அந்தப் பட்டியலில் என்னைக் கவர்ந்தது, அவர் எழுதிய `விவேக தீபம்’ எனும் நூல்.

சுவாமி விவேகானந்தரின் `ஞானதீபம்’ எனும் நூலை எடுத்துக்கொண்டு, பக்கத்துக்குப் பக்கம், விவேகானந்தரின் அருளுரைக்கு விரிவுரை என்ற பெயரில் விளாசித் தள்ளியிருக்கிறார் நல்லி குப்புசாமி செட்டியார்.

ஓர் இந்திய எழுத்தாளர். ஜப்பானுக்குப் போகிறார். ஒரு ரயிலில் பயணம் செய்கிறார். அப்போது எதிரே அமர்ந்திருக்கிறார் ஒரு மூதாட்டி. எதையோ கவனித்தவராக, தன் சிறு கைப்பையிலிருந்து ஊசியையும் நூலையும் எடுக்கிறார். கிழிந்துபோயிருந்த ரயில்வே இருக்கையின் உறையைத் தைக்க ஆரம்பிக்கிறார். இதைப் பார்த்த எழுத்தாளர், அந்த மூதாட்டியிடம் கேட்கிறார்... ``மேடம்... நீங்க ரயில்வே ஊழியரா?’’

``இல்லை சாதாரண பேசஞ்சர்தான். ஆனா, இந்த சீட் கிழிஞ்சிருக்கே... தைக்க வேணாமா?’’ என்கிறார். இந்த உணர்வுதான் ஜப்பானியர்கள் முன்னேறியிருப்பதற்குக் காரணம்.

இதற்கு மூலமாக விவேகானந்தரின் அருளுரை விவரிக்கப்படுகிறது. `நம் இளைஞர்கள் ஆண்டுதோறும் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் போக வேண்டும். இந்தியா, சிறப்பும் நன்மையும் நிறைந்த கனவுலகம் என்றே ஜப்பானியர் கருதுகின்றனர். ஆனால் நீங்களோ... நீங்கள் என்ன மக்கள்... வாழ்நாள் முழுவதும் வெட்டிப்பேச்சு, வீண் பிதற்றல்... வாருங்கள், வந்து இந்த மக்களைப் பாருங்கள்... திரும்பிப்போய் வெட்கத்தில் உங்கள் முகத்தை மறைத்துக்கொள்ளுங்கள்.’ நல்லி குப்புசாமி செட்டியாரின் பதிவுக்கு மேல், விவேகானந்தரின் அறிவுரையை யாரும் விளக்கமாகச் சொல்ல முடியாது.

ஞாயிற்றுக்கிழமை. மதிய நேரம். ஒரு குட்டித் தூக்கம் போட்டார் அந்தப் பெண்மணி. கணவர் வீட்டுக்கு வந்ததும், ``ஏங்க நான் ஒரு கனவு கண்டேன். நீங்க எனக்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கித் தர்ற மாதிரி கனவு...’’ என்றார்.

``அந்தக் கனவோட பலன் இன்னிக்கி ராத்திரி தெரியும்’’ என்றார் கணவர்.

அன்று மாலை கணவர் வந்தார். மனைவியிடம் ஒரு பார்சலைத் தந்தார். பிரித்துப் பார்த்தார் அவர் மனைவி. அதில் இருந்தது ஒரு புத்தகம். அதன் பெயர், `கனவுகளும் பலன்களும்.’