திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

நம்பிக்கை நிச்சயம் வெல்லும்...!

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்தனை விருந்து

சிந்தனை விருந்து

`மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்துவதற்கு முதல் தேவை தன்னம்பிக்கை’ என்கிறார் ஆங்கில எழுத்தாளர் சாமுவேல் ஜான்சன். தன்னம்பிக்கை என்கிற ஆதாரம் இல்லாததால்தான் பல ஜாம்பவான்களே பெருங்கூட்டத்தில் தனித்துத் தெரியாமல், காணாமல் போகிறார்கள். ஆனால், அதை அடையாளம் கண்டுகொண்டு, தங்களை நிலைநிறுத்திக்கொண்டவர்களும் உண்டு.

நம்பிக்கை நிச்சயம் வெல்லும்...!

ந்திய நவீன ஓவியத்தின் ஆரம்பகால அடையாளங்களில் ஒருவர் ராஜா ரவிவர்மா. இந்திய பாணி ஓவியக் கலையில் மேற்கத்திய பாணி ஓவிய முறையைப் புகுத்தியவர். அவர் வரைந்தவற்றுள் தமயந்தி, அன்னப் பறவையுடன் உரையாடுவது போன்ற ஓவியம் எல்லோரின் கண்முன் நிற்கும் காவியம். ஒரு நாள் ரவிவர்மா, ஓர் ஓவியத்தை வரைந்தார். மனிதனின் கையளவே இருக்கும் ஓவியம் அது. ரோஜா மலர்க்கொத்தை வரைந்திருந்தார் ரவிவர்மா. பார்த்தவர்களெல்லாம் பிரமித்துப்போனார்கள். ஆனால், அப்போதிருந்த மற்ற ஓவியர்களுக்கோ அதைப் பார்த்ததில் மனக்கசப்பு. இவ்வளவு அற்புதமாக ஒரு ரோஜா மலர்க்கொத்தை வரைய முடியுமா என்கிற ஆதங்கம் அவர்களுக்கு.

அழகை ஆராதிக்கும் பலர் அவரிடம் பேரம் பேசினார்கள். அந்த ஓவியத்துக்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் தருகிறோம் என்று சொல்லிப் பார்த்தார்கள். ரவிவர்மா, விலை கேட்டு வந்தவர்களுக்கெல்லாம் `முடியாது’ என்கிற பதிலை புன்னகையோடு சேர்த்துத் தந்தார். ஒரு பெரும் பணக்காரர், பொறுக்க முடியாமல் ரவிவர்மாவிடம் கேட்டேவிட்டார். ``இந்த ஓவியத்தை ஏன்தான் விக்கவே கூடாதுங்கற முடிவுல இருக்குறீங்க?’’

ரவிவர்மா கேட்டவரைக் கூர்ந்து பார்த்தார். பிறகு சொன்னார்... ``எனக்கு எப்பவாவது மனச் சோர்வு ஏற்பட்டா, என்னோட ஓவியத் திறனையே நான் இழந்துட்டேனோன்னு பயம் வந்துருச்சுன்னா, இந்த ஓவியத்தைப் பார்ப்பேன். `ரவிவர்மா... இந்த மலர்க்கொத்தை வரைஞ்சது நீதான்’னு மனசுக்குள்ள சொல்லிக்குவேன். அதுக்கப்புறம் மறுபடியும் ஓவியம் வரைய ஆரம்பிச்சுடுவேன்...’’

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு வழி. ரவிவர்மாவுக்கு இப்படி ஒரு வழி.

இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கை மிக அதிகம். ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்டார்... ``உன்கிட்ட ஏற்கெனவே 60 எருமை மாடுங்க இருக்கு. மேற்கொண்டு நான் 20 எருமை மாடுங்களைத் தர்றேன்னு வெச்சுக்கோ... அப்புறம் என்ன ஆகும்?’’

``அப்புறம் என்ன... நான் படிக்கறதை விட்டுட்டு மாடு மேய்க்கப் போயிடுவேன்!’’