ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

தேடல்

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்தனை விருந்து

சிந்தனை விருந்து - தேடல்

`உன்னாலதான் எனக்கு இவ்வளவு கஷ்டம்’, `அவராலதான் எனக்கு பிரச்னை’... என்றெல்லாம் பேசுகிறோம். சரி, `பிரச்னை ஏற்படாமல், பிறரை நம்மால் மாற்ற முடியுமா?’ இந்தக் கேள்விக்கு வசிஷ்ட மகரிஷி என்ன பதில் சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம்.

சிந்தனை விருந்து
சிந்தனை விருந்து


அவதார புருஷர்களாகவே இருந்தாலும் ராமனும் கிருஷ்ணனும் தங்கள் குருவிடம்தான் அனைத்தையும் முறையாகக் கற்றார்கள். ராமனின் குரு வசிஷ்டர். கிருஷ்ணனின் குரு சாந்தீபனி. எந்த உபதேசத்தையும், கல்வியையும் குருவின் மூலமாக அறிந்துகொள்வதே பலன் தரும். ஒருநாள் ராமபிரான் வசிஷ்டரிடம் கேட்டார்... ``குருவே... என்னால் பிறருடைய மனதை மாற்ற முடியுமா?’’

அதற்கு வசிஷ்டர் சொன்ன பதில் ஆழமானது. ``ராமா, நாம் பூமியில் நடக்கிறோம். பாதத்தில் கல்பட்டால் கடினமாக இருக்கிறது; பனியில் குளிர்கிறது; கடும் வெயிலில் சூடு உறைக்கிறது; மணலில் உறுத்துகிறது, குறுகுறுக்கிறது; புல்வெளியில் மென்மையை உணர்கிறோம். இப்படியிருக்க, உன் பாதத்தைப் பாதுகாக்க இந்த பூமி முழுவதையும் ஒரு தோலினால் மூடுவாயா அல்லது உன் பாதங்களுக்கு பாதரட்சை அணிந்துகொள்வாயா?’’ ஆக, மற்றவர்களின் மனதை நம்மால் மாற்ற இயலாது, முடியாது. ஆனால், நம் மனதை மாற்றிக்கொள்ள முடியும். நம் மனம் அழகாக இருந்தால், நம்மை நாமே உணர முடியும்.

ஒரு நிறுவனத்தில் ரொம்ப நாள்களாக திருட்டு நடந்துகொண்டிருந்தது... பணத்திலிருந்து கால்குலேட்டர் வரை. உள்ளே இருக்கும் யாரோதான் திருடுகிறார்கள். ஆனால், யார் எனத் தெரியவில்லை. நிறுவனத்தின் அதிகாரி ஒரு முடிவெடுத்தார். ஊழியர்களுக்கு நிலைமையின் தீவிரத்தை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும்; திருட்டையும் தடுக்க வேண்டும்.

கிரேக்க தத்துவவியலாளர் டயோஜெனிஸ் (Diogenes) வேடத்தில் அலுவலக வளாகம் முழுக்க ஒருவரை உலவவிட்டார். டயோஜெனிஸ் தன் காலத்தில் பகலிலேயே கையில் விளக்குடன் ஊர்முழுக்க எதையோ தேடுவார். யாராவது கேட்டால், `நேர்மையான ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்’ என்பார்.

டயோஜெனிஸ் வேடமணிந்த நடிகர் முதல் நாள் உலா வந்தபோது, அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்ட்டில் ஒருவர் கேட்டார்... ``டயோஜெனிஸ் என்ன தேடுறீங்க?’’

``நேர்மையான ஒருத்தரை.’’

அடுத்தநாள் மார்க்கெட்டிங் டிபார்ட்மென்ட்டில் ஒருவர் கேட்டார்... ``எதைத் தேடுறீங்க டயோஜெனிஸ்?’’

``நேர்மையான ஒருத்தரை.’’

அதற்கு அடுத்த நாள். பர்ச்சேஸ் டிபார்ட்மென்ட். ``என்ன தேடுறீங்க?’’

``என் விளக்கை.’’