சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

சிந்தனை விருந்து

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்தனை விருந்து

சிந்தனை விருந்து

`எங்க காலத்துலல்லாம் வாத்தியாருங்க எப்பிடி இருப்பாங்க தெரியுமா?’ என்று ஐம்பதைக் கடந்த யாராவது சொல்லக் கேட்டிருப்போம்.

சிந்தனை விருந்து
சிந்தனை விருந்து


`இந்தப் பெருசுங்களே இப்பிடித்தாம்ப்பா...’ என்கிற பார்வையில் இன்றைய இளைய தலைமுறை அந்தச் சொல்லாடலைக் கடந்து போய்க்கொண்டிருக்கும்.

`மாதா, பிதா...’வில் ஆரம்பித்து தெய்வத்துக்கும் முன்னால், `குரு’ என வரிசைப்படுத்தி, ஆசிரியரைப் போற்றித் துதித்த பாரம்பர்யம் நம்முடையது.

சில ஆசிரியர்களின் வாழ்க்கை முறையை அறிந்தால் வியப்பாக இருக்கிறது. பேராசிரியர் தி.இராசகோபாலன், `நெருஞ்சி மலர்கள்’ என்கிற அவருடைய நூலில், அப்படி ஓர் ஆசிரியரைப் பற்றிப் பதிவுசெய்திருக்கிறார்.

அவர் தமிழாசிரியர். பெயர், `புலவர் கணபதி.’ நாகை மாவட்டம், மஞ்சக்கொல்லையில் இருக்கும் ஓர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்தார். எறும்புக்குக் கூட தீங்கிழைக்க நினைக்காதவர்.

அவருக்கு ஒரு பழக்கம் இருந்தது. அன்றைக்கு அவர் கற்பிக்கும் தேவாரமோ, திருவாசகமோ... அந்தச் செய்யுளை வகுப்பிலிருக்கும் அத்தனை மாணவர்களும் சொல் பிசகாமல் அவரிடம் ஒப்புவிக்க வேண்டும். ஒரே ஒரு மாணவன் செய்யுளை ஒப்புவிக்கவில்லையென்றால்கூட அவரால் தாங்க முடியாது.

தனது இருக்கையிலேயே அமர்ந்துவிடுவார். மதிய உணவு இடைவேளை விடப்பட்டாலும் அப்படியே அமர்ந்திருப்பார். ஒரு வாய் உணவுகூடச் சாப்பிட மாட்டார்... உண்ணாவிரதம் இருப்பார். அடுத்த பீரியடுக்கான பள்ளி மணி ஒலித்ததும், தன் அடுத்த வகுப்பை எடுக்க வேறொரு வகுப்பறைக்குச் சென்றுவிடுவார்.

தன்னை வருத்தி, மாணவர்களைப் படிக்கவைத்த புலவர் கணபதி, அத்தனை மாணவர்களையும் பண்படுத்தினார். `எங்கே ஆசிரியர் நாளை பட்டினி கிடந்து விடுவாரோ...’ என்கிற பயத்திலேயே அத்தனை மாணவர்களும் செய்யுளை மனப்பாடம் செய்துவிட்டு வருவார்கள். `வாத்தியார்’ என்கிற பெருமைக்கு முழுத் தகுதியுடையவர் புலவர் கணபதி!

பள்ளி நேரம் முடிவதற்கு முன்பாகவே வீட்டுக்கு வந்திருந்தான் மகன். ஆச்சர்யப்பட்டுப்போன அம்மா கேட்டார்: ``ஏண்டா சீக்கிரமே வந்துட்டே?’’

``ஒண்ணும் இல்லைம்மா. கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க. நான் ஒருத்தன்தான் கரெக்டா பதில் சொன்னேன்... விட்டுட்டாங்க.’’

``என்ன கேள்விடா அது?’’

``அது ஒண்ணும் பெரிய கேள்வி இல்லைம்மா... பிரேயர் நேரத்துல ஹெட்மாஸ்டர் மேல தண்ணி பாட்டிலை எடுத்து வீசினது யாருன்னு கேட்டாங்க... `நான்தான்’னு சொன்னேன்!’’