Published:Updated:

வெற்றிக்கு அடிப்படை எது?

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனை விருந்து

சிந்தனை விருந்து

வெற்றிக்கு அடிப்படை எது?

சிந்தனை விருந்து

Published:Updated:
சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனை விருந்து

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள், ஒரு வானொலி பண்பலை அலைவரிசையில் தினமும் சில மணித்துளிகள் அருளுரை வழங்கிவருகிறார். அண்மையில் அவரின் அருளுரை ஒன்றைக் கேட்க நேர்ந்தது. அதில் அடிகளார் சொன்ன ஒரு குட்டிக்கதை...

சிந்தனை விருந்து
சிந்தனை விருந்து


`ஒரு விவசாயி. அவரைத் தேடி வந்தார்கள் மூன்று பேர். ஒருவர் கேட்டார், ``உங்கள் வயலில் என்ன நடவு செஞ்சிருக்கீங்க?’’

``இந்த வருசம் நிச்சயமா மழை பெய்யப்போறதில்லை. ஏன்னா, பருவ நிலை சரியில்லை. அதனால நான் கோதுமை நடவு செய்யலை’’ என்றார் அந்த விவசாயி.

``அப்போ சோளம் நட்டிருக்கீங்களா?’’ இன்னொருவர் கேட்டார்.

``இங்கே பூச்சி தொல்லை அதிகமா இருக்கு. சோளம் நட்டா பூச்சி கடிச்சு பயிர் நாசமாகிடும். அதனால சோளம் நடலை.’’

மூன்றாமவர் கேட்டார்... ``கோதுமையும் நடலை, சோளமும் நடலை. அப்போ என்னதான் நட்டீங்க?’’

``எதையாவது நட்டு இழப்பு ஏற்பட்டுடுச்சுன்னா என்ன பண்றது... அதனால நான் எதையுமே நடலை!’’

இழப்பு ஏற்பட்டுவிடுமோ என்று நினைத்துக்கொண்டே விதைக்க மறந்தவர்கள்தான் வாழ்க்கையில் தோற்றுப்போகிறார்கள். நம்மால் விதைக்க முடியும், விதைத்து, உரமிட்டு, நீர் பாய்ச்சி, களை பறித்து, விளைச்சலைச் சேர்க்கலாம் என்ற நம்பிக்கையில்லாமல், கழனியில் இறங்கு கிறவன் ஒருபோதும் வெற்றி பெற முடியாது.

வாழ்க்கையில் பெரும் தீங்கு என்பது, வரும் ஆபத்தை நினைத்து பயந்துகொண்டு எதையும் செய்யாமல் இருப்பதுதான்’ என்று குறிப்பிடுகிறார் அடிகளார்.

நம்மில் பலரும் அடிகளார் குறிப்பிடும் விவசாயி யைப் போன்றவர்களே. எந்த முயற்சியும் மேற் கொள்ளாமல், இதைச் செய்தால் ஏதாவது ஆகி விடுமோ என்கிற பயத்திலேயே உழல்பவர்கள். `வெற்றி என்பது முயற்சியில்தான் இருக்கிறது’ என்கிறார் பண்டைய கிரேக்க நாடகவியலாளரும், அறிஞருமான சோபோகிள்ஸ். தாமஸ் ஆல்வா எடிசன் தொடங்கி ஒலிம்பிக்கில் சாதனை படைத்த நீரஜ் சோப்ரா வரை விடாமுயற்சியைக் கைவிடாத வர்களே. அதனால்தான் அவர்களின் சாதனை சரித்திரமானது.

பள்ளிக்குப் போக அடம்பிடிக்கும் மகனைத் திருத்த என்ன செய்யலாம் என யோசித்தார் அவன் தந்தை. ஒருநாள் அவனை அழைத்து அறிவுரை சொல்ல ஆரம்பித்தார். `எதையாவது சாதிக்கணும்னா படிப்பும் முயற்சியும் ரொம்ப அவசியம். ஆபிரஹாம் லிங்கன் படிக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கார் தெரியுமா... ஒரு புத்தகத்தை வாங்கிப் படிக்கிறதுக்காக பல மைல் தூரம் நடந்திருக்கார். அப்போ அவருக்கு உன் வயசுதான்.’’

மகன் ஒருகணம் யோசித்தான். ``அது சரிப்பா. உங்க வயசுல ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்காவுக்கே ஜனாதிபதியா ஆகிட்டார்... நீங்க?!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism