Published:Updated:

நிலையான மகிழ்ச்சி!

புத்தர் பிரான்
பிரீமியம் ஸ்டோரி
புத்தர் பிரான்

கதை கதையாம்!

நிலையான மகிழ்ச்சி!

கதை கதையாம்!

Published:Updated:
புத்தர் பிரான்
பிரீமியம் ஸ்டோரி
புத்தர் பிரான்

சுதந்திரமாக வாழ விரும்பும் ஒருவன், இந்த உலகில் எதையும் பற்றிக் கொள்வதில்லை’ என்பது
தான் புத்தர் பிரான் போதிக்கும் ஞானம். அவரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.

புத்தர் பிரான்
புத்தர் பிரான்


ஒருமுறை வனம் ஒன்றில், இலை
கள் பரவிக்கிடந்த தரையில் அமர்ந்திருந்தார் புத்தர். அவ்
வழியே வந்த அன்பர் ஒருவர் புத்தரைக் கண்டு வணங்கினார். “சுவாமி! இலைகள் தவழும் தரையில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறதா?” என்று கேட்டார்.
“ஆம்! மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்” என்றார் புத்தர்.
“கடும் பனிக் காலம் இது. குளிர் உங்கள் உடலை வருத்த
வில்லையா? மரத்தின் இலை
கள் விழுந்து கிளைகள் மொட்டை
யாகி விட்டனவே. உயிரினங்கள் நடுங்குமளவு குளிர் காற்று வீசுகிறது. உங்கள் ஆடையோ மெல்லியதாக இருக்கிறது. ஒரு கம்பளியின் கதகதப்பை உங்கள் ஆடை தராது. இந்த நிலையில் நீங்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?” என்று கேட்டார் அந்த வழிப் போக்கர்.
“மகனே, நன்கு கூரை வேயப்பட்டு, சன்னல்களும் கதவுகளும் பொருத்தப்பட்ட வீட்டின் உள்ளே ஒருவன் இருக்கிறான். கம்பளியால் நெய்யப்பட்ட அழகான பெரிய விரிப்புடன், பூவேலைப்பாடுகள் கொண்ட மிகச் சிறந்த மெத்தையில் அமர்ந்திருக்கும் அவனைச் சுற்றி அழகே வடிவெடுத்த நான்கு மனைவியர் அமர்ந்து பணிவிடை செய்கின்றனர். அவன் அளவற்ற மகிழ்ச்சியோடுதானே இருக்க வேண்டும்?” என்று கேட்டார் புத்தர். “அதிலென்ன ஐயம்” என்றார் வழிப்போக்கர்.
“மகனே, ஒரு நாள் மகிழ்ச்சி, மறுநாள் துன்பமாகும். இன்றைய ஆசை, நாளைய வெறுப்பாக மாறும். வேரை அறுத்து விட்டால், பனை மரத்தின் அடிக்கட்டை அதற்குமேல் முளைக்காது. தேவைகளின் வேரறுப்பதில்தான் நிலையான மகிழ்ச்சி நிறைந்திருக்கிறது” என்று ஞானம் போதித்தார் புத்தர்பிரான்.

மானும் மனிதனும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மானும் மனிதனும்!
மானும் மனிதனும்!

பிரம்மதத்தன் என்ற மன்னன் வாரணாசியை ஆண்டுவந்தான். அவனிடம் சஞ்சயன் என்ற தோட்டக்காரன் பணி புரிந்தான். தோட்டத்தில் இருந்து கனிகளையும், மலர்களையும் பறித்து, தினமும் அரண்மனையில் கொண்டு சேர்ப்பது அவனது வழக்கம்.
ஒரு நாள் அரசன் அவனிடம், “நமது தோட்டத்தில் ஏதாவது புதுமை உண்டா?’’ என்று கேட்டான் மன்னன். “சில தினங்களாக மான் ஒன்று தோட்டத்தில் சுற்றித் திரிகிறது’’ என்றான் சஞ்சயன்.
“அந்த மானை உன்னால் பிடித்துத் தர முடியுமா?’’ என்று அரசன் கேட்டான். “கொஞ்சம் தேன் கொடுங்கள். மானைக் கொண்டு வருகிறேன்’’ என்ற சஞ்சயன், தேன் நிரம்பிய ஒரு குடுவையை அரசனிடமிருந்து பெற்றுச் சென்றான். தோட்டத்தின் புல்வெளியில் தேனைத் தெளித்தான்.
மானின் விழிகளில் படாமல் மறைந்து நின்றான். யாருமற்ற தைரியத்தில் மான் புல்லை மேய்ந்தது. தேனில் நனைந்த புல்லை மேய்ந்தபோது, மான் அந்தச் சுவையில் மயங்கியது.
அதன் அருகில் மெள்ள வந்து நின்றான் சஞ்சயன். ஆளைப் பார்த்ததும் மான் மருண்டது. ஆனாலும் தேன்சுவைப் புல்லை விட்டு விலக அதற்கு மனம் வரவில்லை. சஞ்சயன், புல்லில் தேனைத்தெளித்து அரண்மனையை நோக்கிச் செல்லும் வழி முழுவதும் பரப்பினான். புல்லை மேய்ந்தபடி மான் அரண்மனைக்குள் சென்று சிக்கியது.
மனிதர்களும் இப்படித்தான்... லௌகிக ஆசைகளில் உழன்று, உலகத் துன்பங்களில் சிக்கி விடுகின்றனர்!

பாடலும் பரஞ்சோதியாரும்!

மாமதுரை
மாமதுரை


பாண்டிய நாட்டை, அழகான பெண்ணாக உருவகம் செய்து, அவளின் திருமுகமே மாமதுரை என்று பாடுகிறார் திருவிளையாடல் புராணம் எனும் ஞானநூலின் ஆசிரியர் பரஞ்சோதியார்.
அந்தப் பாடல் இதுதான்...
கொங்கையே பரங்குன்றமும்
கொடுங்குன்றும் கொப்பூழ்
அங்கமே திருச்சுழியல் அவ்வயிறு குற்றாலம்
செங்கை ஏடக மேனியே பூவணம் திரள் தோள்
பொங்கர் வேய் வனம் திருமுக மதுரையாம் புரமே
அவள் அழகான மங்கை; அவளின் மார்புகள்- திருப்பரங்குன்றமும் பிரான்மலையும் (கொடுங் குன்றம்); கொப்பூழான நாபி- சுழியல்; வயிறு- குற்றாலம்; திருவேடகம்- சிவந்த கைகள்; திருமேனி- திருப்பூவணம்; அழகான திரண்ட தோள்கள்- வேணுவனம்; திருமுகமோ- மதுரை.
கற்பனை அழகு என்பது மட்டுமல்ல... ஆழமான புவியியல் ஞானமும் இந்தப் பாடலில் மிளிர்கிறது. இதே ஆசிரியர், சிவபெருமான்- உமையம்மையை யோக நெறியில் மணந்த தலம் சுழியல் என்றும் சுட்டுகிறார்.


தொகுப்பு: தி.காசி, தூத்துக்குடி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism