Published:Updated:

கதை கதையாம்...

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனை விருந்து ( DIXITH )

சிந்தனை விருந்து

கதை கதையாம்...

சிந்தனை விருந்து

Published:Updated:
சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனை விருந்து ( DIXITH )

ஈசாப் கதைகள், புத்த ஜாதகக் கதைகள், புராணக் கதைகள், சிறார் கதைகள், ஜென் கதைகள்... என எத்தனையோ கதைகளைக் கேள்விப்பட்டிருப்போம், படித்தும் இருப்போம். சில கதைகள் அரிய தகவல்களையும் நமக்குத் தரும்.

சிறுகதைத் தொகுப்பு
சிறுகதைத் தொகுப்பு


அண்மையில் ஒரு சிறுகதைத் தொகுப்பு, பார்த்ததுமே ஈர்த்து விட்டது. இந்நூலில் `இடைவிடாத துரத்தல்’ என்று ஒரு கதை. இரு துறவிகள். பெரிய துறவிக்கு அறுபது வயது. பார்ப்பதற்கு எண்பது வயதுக்கு மேல் என்று சொல்லும்படியான மேனி. இறப்பை எதிர்பார்க்கும் வயது. சின்ன துறவிக்கு நாற்பத்தைந்து வயது. நல்ல உடற்கட்டு. ஒருநாள் சின்ன துறவி மண் பானையில் கேழ்வரகுக் கூழ் காய்ச்சுவார். குப்பைகளின் மேலிருந்த சிறு மரக்குச்சியை பானையில்விட்டுக் கிளறுவார். காய்ச்சி முடித்ததும், படித்திருக்கும் பெரிய துறவியை எழுப்புவார். பெரிய துறவி, தனக்குப் பசியில்லை என்று சொல்லிவிடுவார்.

சின்ன துறவி கூழ் மொத்தத்தையும் குடித்து விட்டு, பானையை உடைத்துப்போட்டுவிட்டு, குச்சியைக் குப்பையில் தூக்கி எறிந்துவிடுவார். பெரிய துறவி எழுந்து பார்க்கும்போது, சின்ன துறவி மேலும் இருபது வயது குறைந்து இளமை மிளிரக் காணப்படுவார். கூழ் காய்ச்சிய பானையும் இல்லை; கிளறிய குச்சியும் இல்லை.

அதைத் தாங்க முடியாமல் பெரிய துறவி அப்போதே மரணத்தைத் தழுவிவிடுவார். அங்கேயே அவர் புதைக்கப்பட்டாராம். அவர் இருந்த கொய்யாத் தோப்புதான் இப்போதிருக்கும் ஜாம்பஜார் மார்க்கெட் என்கிறார்கள். உருது மொழியில் `ஜாம்’ என்றால் கொய்யா என்று அர்த்தமாம்!

இந்தச் சிறுகதைத் தொகுப்பின் பெயர் `ஜாம்பஜார் கதைகள்.' எழுத்தாளர் பெரு.முருகனின் எட்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்.

150 வருட வரலாற்றுப் பாரம்பர்யம்கொண்டது ஜாம்பஜார் மார்க்கெட். சென்னை, திருவல்லிக்கேணியிலுள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டையும், அதன் சுற்றுப்புறத்தையும் மையமாக வைத்து புனையப்பட்ட கதைகளின் தொகுப்பு இந்நூல்!

ஹாலிவுட்டில் மூன்று எழுத்தாளர்கள் ஒரு சினிமா கதையை டிஸ்கஸ் செய்வதற்காக ஹோட்டலில் ரூம் போட்டார்கள்.

அவர்களின் அறை இருந்தது 75-வது மாடியில். ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் அவர்களிடம் சொன்னார்... ``சாரி சார்... லிஃப்ட் வொர்க் ஆகலை.’’

எழுத்தாளர்களில் ஒருவர் சொன்னார்... ``அதனால என்ன... நாங்க பேசிக்கிட்டே படியேறிப் போயிடுவோம்.’’ மூவரும் படியேற ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு 25 மாடிகளுக்கும் ஒருவர் கதை சொல்வது என்று முடிவு செய்து கொண்டார்கள். முதலாமவர் 25-வது மாடி வரும் வரை ஒரு கதை சொன்னார். மற்ற இருவரும் அதைக் கேட்டு வயிறு வலிக்கச் சிரித்தார்கள். இரண்டாமவர், 50-வது மாடி வரை மர்மக்கதை சொன்னார். மற்ற இருவரும் பயத்தோடு கேட்டார்கள்.

கடைசியாக மூன்றாமவர் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு ஆரம்பித்தார்...

``கதை சொல்றதுக்கு முன்னாடி ஒரு விஷயம்... ரூம் சாவியை கார்லயே வெச்சுட்டு வந்துட்டேன்..!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism