Published:Updated:

எளிமை...நிரந்தரம்!

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனை விருந்து ( Herbert List )

சிந்தனை விருந்து!

எளிமை...நிரந்தரம்!

சிந்தனை விருந்து!

Published:Updated:
சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனை விருந்து ( Herbert List )

`ஆடம்பரத்துக்குப் பழகிப்போவதை நான் மிக சோகமான விஷயமாகக் கருதுகிறேன்’ என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். எத்தனையோ மேதைகளும் ஞானிகளும் எளிமைதான் நிரந்தரம் என்பதை வெவ்வேறு வழிகளில் உணர்த்திவிட்டுச் சென்றிருந்தாலும் அது நமக்கு உறைப்பதில்லை. `ஆள் பாதி, ஆடை பாதி’ என்கிற காலம் போய், `ஆள் பாதி, ஆடம்பரம் பாதி’ என்கிற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.

சிந்தனை விருந்து
சிந்தனை விருந்து


20-ம் நூற்றாண்டில் ஸ்பானிய ஓவியர் பாப்லோ பிக்காஸோ நிகழ்த்திய சாதனை அபாரமானது. அன்றைய ஓவிய உலகில் ஒரு புதிய புரட்சியையே நிகழ்த்தியவர் என்றுகூடச் சொல்லலாம். அவரைப் பற்றிய பல கட்டுக்கதைகளும், சில உண்மைச் சம்பவங்களும் உலகம் முழுக்க உலா வருகின்றன. அவர் தொடர்பாக எழுதப்பட்ட பல சம்பவங்கள் நல்ல கருத்துகளைச் சொல்பவை என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஒருநாள் தன் நண்பர்களை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார் பிக்காஸோ. நண்பர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் அப்போதுதான் முதன்முறையாக பிக்காஸோவின் வீட்டுக்கு வந்திருந்தார். அதனால் வீட்டைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தார். ஒருமுறை வீட்டைச் சுற்றி வந்தவர், மறுபடியும் இன்னொரு முறை வீட்டைச் சுற்றி வந்தார். பிறகு பிக்காஸோவின் அருகில் வந்தார்.

அவர் எதையோ கேட்கத் தயங்குவதைப் புரிந்துகொண்ட பிக்காஸோ, ``எதுவாக இருந்தாலும் கேளுங்கள் நண்பரே’’ என்றார்.

நண்பர் கேட்டார்... ``உங்களுடைய ஓவியங்கள் உலகம் முழுக்கப் புகழ்பெற்றவை. பல மில்லியன் டாலருக்கு விலை போகக்கூடியவை. நீங்கள் வரையும் ஒவ்வொரு ஓவியத்துக்காகவும் உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், உங்கள் வீட்டில் நீங்கள் வரைந்த ஓவியம் ஒன்றுகூட இல்லையே... உங்களுக்கே அவற்றைப் பிடிக்கவில்லையா?’’

சிரித்தபடியே பிக்காஸோ பதில் சொன்னார். ``அப்படியில்லை. அவற்றை வாங்கி சுவரில் மாட்டிவைக்கும் அளவுக்கு நான் பணக்காரனில்லை.’’ பிக்காஸோ சொன்னது சற்று மிகையாகத் தெரியலாம்; அவ்வளவு தூரத்துக்கு அவர் சிக்கனக்காரரோ என்றுகூடத் தோன்றலாம். விஷயம் அதுவல்ல... அவர் ஆடம்பரத்தை விரும்புபவரில்லை என்பதே நிஜம். மனைவி ஆடம்பரப் பிரியை. கணவனோ நடுத்தர வர்க்க சாதாரண குமாஸ்தா. திருமண நாள் வந்தது. ஏதாவது பரிசு கொடுக்க வேண்டுமே... ஒரு வைர மோதிரத்தைப் பரிசளித்து அசத்திவிட்டான் கணவன்.

இதைக் கேள்விப்பட்ட மனைவியின் சகோதரன் கேட்டான்... ``ஏன் மாப்ளை! கிஃப்ட் வாங்கிக் குடுத்தீங்க சரி. ஆனா, அவ ரொம்ப நாளா கார் வேணும்னுல்ல சொல்லிக்கிட்டு இருந்தா?’’

``அது சரி மச்சான்... கவரிங்ல வைரம் கிடைக்கும், கார் கிடைக்குமா என்ன?’’