திருக்கதைகள்
Published:Updated:

தெளிவு!

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்தனை விருந்து

சிந்தனை விருந்து

சில செய்திகள் நம்மை ஆச்சர்யப்படுத்துபவை; சில அதிர்ச்சிக்குள்ளாக்குபவை; சில `இப்படியுமா?’ என நம்மை அசர அடிப்பவை. இவற்றில் அசர அடித்த ஒரு செய்தி இங்கே...

சிந்தனை விருந்து
சிந்தனை விருந்து

அவர் பெயர் ஜோசப் பார்பர். சர்வதேச சட்டவியல் நிபுணர். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வருகிறார். அவருக்கு இந்திய ஆன்மிகத்தின் மீது அலாதிப் பற்று. விமான நிலையத்தில் அவரைச் சூழ்ந்து கொள்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

ஒரு நிருபர் கேட்டார்... ``ஐயா... உங்களுக்கு இந்திய ஆன்மிகத்தின் மீது நாட்டம் ஏற்பட என்ன காரணம்?’’

``ஒரு பெண்தான் காரணம்’’ என்ற ஜோசப் பார்பர், அதை விளக்க ஆரம்பித்தார். ``அது உலகப் போர் நிகழ்ந்த காலம். அப்போது ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நான் இருந்தேன். நான் இருந்தது பூமிக்கு அடியி லிருந்த ஒரு பாதுகாப்பு அறை.

ஒரு வெடிகுண்டு நான் இருந்த அறையின் மூலையில் விழுந்தது. அந்தச் சத்தமே எங்கள் ஈரக்குலையை நடுங்க வைத்தது. ஆனால், அங்கிருந்த யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. அபாயம் நீங்கிவிட்டதற்கு அறிகுறியாக சைரன் முழங்கியது. அங்கிருந்த எல்லோரும் பயத்துடனும் பதற்றத்துடனும் அந்த அறையிலிருந்து ஓடினார்கள்.

அப்போதுதான் நான் பார்த்தேன். ஒரு பெண் மட்டும், தான் நின்ற இடத்தில் அசை யாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார். நான் அவரருகில் போனேன். `நீங்கள் குண்டு விழுந்த இடத்துக்கு அருகே நின்று கொண்டிருக் கிறீர்கள். எல்லோரும் ஓடிக் கொண்டிருக் கிறார்கள். உங்களுக்கு பயமாக இல்லையா..?’ என்று கேட்டேன்.

அந்தப் பெண் சொன்னார்... `எனக்கு மரணமும் வாழ்வும் ஒன்றுதான். இதை ஒரு புத்தகத்திலிருந்து படித்துத் தெரிந்துகொண்டேன்.’ நான், `அது என்ன புத்தகம்?’ என்று கேட்டேன். `பகவத்கீதை’ என்று சொன்னார். நானும் அந்தப் புத்தகத்தைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். ஆன்மிகத் தில் எனக்கும் ஒரு தெளிவு பிறந்தது.’’

இந்தச் சம்பவத்தை எழுத்தாளர் `ஞானபாரதி’ செந்தமிழ்தாசன், `வியப்பூட்டும் வரலாற்று உண்மைகள்’ என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார்.