`பழுத்த மரம்தான் கல்லடி படும்’ என்பார்கள் பெரியோர்கள். நம் மீது விமர்சனங்கள் வருகின்றன எனில், நாம் வளர்கிறோம் என்று அர்த்தம். விமர்சனங்களே நாம் முகம் பார்க்கும் கண்ணாடி. விமர்சனங்களைக் கவனியுங்கள்... முதலில் வலிக்கும் ஆனாலும் நம் வெற்றிக்கான வழிகளை விமர்சனங்களே எடுத்துச் சொல்லும்.

இன்றைக்குப் பலருக்கும் விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் இல்லை. விமர்சனக் கற்களை ஏற்று வெற்றிக்கான படிகளை அமைத்துக்கொள்ளாமல், வீண் கோபத்துக்கோ அல்லது கழிவிரக்கத்துக்கோ ஆளாகிவிடுகிறார்கள். விமர்சனங்களோ, வீண் பழிச் சொற்களோ, அவமானத்துக்கு ஆளாவதோ... எதை எதிர்கொண்டாலும் மனம் தளராமல் முன்னேற கற்றுக்கொள்ளவேண்டும்.

விவசாயி ஒருவனிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. ஒரு நாள் அது பாழுங்கிணற்றில் தவறி விழுந்தது. உடனே அது பயத்தில் பெரும் குரலில் கத்தத் தொடங்கியது.

விஷயம் அறிந்த விவசாயி, ‘என்ன செய்ய லாம்?’ என்று யோசித்தான். கழுதையோ வயதானது. உபயோகம் இல்லாதது. பாழுங் கிணறோ மூடப்பட வேண்டியது. ஆகவே, கழுதையை வெளியே கொண்டு வருவதைவிட, கிணற்றை மூடிவிடலாம் என்று தீர்மானித்தான்.

நண்பர்களையும் உறவினர்களையும் உதவிக்கு அழைத்தான். மண்வெட்டிகளுடன் வந்த அவர்கள், மண்ணை வெட்டி வெட்டி, கிணற்றுக்குள் வீசினார்கள்.

தன்னை உயிருடன் புதைக்கவே மண்ணை வாரிப் போடுகிறார்கள் என்று புரிந்த தும், பரிதாபமாகக் கதறத் தொடங்கியது கழுதை. அதன் கதறலைக் கேட்டு யாரும் பரிதாபப்படவில்லை.

சற்று நேரத்தில் கழுதையின் கதறல் நின்றுவிட்டது. கழுதைக்கு என்ன நேர்ந்தது என்று கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த விவசாயி வியப்படைந்தான்.

உள்ளே, கழுதை தனது உடலைக் குலுக்கி, தன் மேல் விழுந்த மண்ணைக் கீழே உதறிவிட்டு மேலே அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தது. இப்படி ஒவ்வொரு முறையும் தன் மேல் போடப்படும் மண்ணையும் குப்பை களையும் உதறிக் கீழே தள்ளிவிட்டு, அதன் மேல் ஏறி நின்றுகொண்டது. இப்படி அடி மேல் அடி ஏறி வந்த கழுதை, இறுதியில் மேலே வந்து கிணற்றுச் சுவரைத் தாண்டி வெளியே குதித்து ஓடிப் போனது!

டியர் ஃபிரண்ட்ஸ்... நீங்களும் உங்களை நோக்கி எறியப்படும் கற்களையும், குப்பைகளை யும் ஒதுக்கிவிட்டு, அடியெடுத்து வைத்து மேலே செல்லப் பழகுங்கள். உங்களை அவமானப்படுத்துவதற்காகச் செய்யப்படும் காரியங்களையும், சொல்லப் படும் வார்த்தை களையும் உங்களை ஊக்குவித்து உந்தித் தள்ளும் நிகழ்வுகளாக எடுத்துக் கொள்ளுங்கள்.

எது ஒன்றும் நம் முதுகின் மேல் இருந்தால் சுமை. அதையே இறக்கி வைத்து விட்டால், அது நாம் ஏறி நிற்கக் கூடிய மேடை!

இயற்கைகூட இதே தத்துவத்தை வேறு விதமாக நமக்குத் தினம் தினம் சொல்லிக் கொடுக்கிறது.

ஒரு செடி நன்றாக வளர உரம் தேவை. உரமாகப் போடப்படுவது என்ன? மக்கிய குப்பையும், சாணமும்தானே? நம் மீது குப்பையையும், சாணத்தையும் கொட்டுகிறார்களே என்று செடி, ஒரு நாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவது இல்லை. மாறாகச் செடிகள் அந்த அசிங்கமான உரங்களை ஏற்று நல்ல நல்ல பூக்களாக மாற்றி நமக்கு அளிக்கின்றன.

நாம் இந்தச் செடிகளைப் போல் இருக்க வேண்டாமா? மக்களின் ஏளனங்களையும் அவமதிப்புகளையும் உரமாக ஏற்று பூக்களாகப் பூத்துக் குலுங்க வேண்டாமா!

- 18.3.2007 இதழிலிருந்து...