Published:Updated:

`சகலமும் இறைவனே!’ - சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர்
பிரீமியம் ஸ்டோரி
சுவாமி விவேகானந்தர்

தொகுப்பு: நமசிவாயம்

`சகலமும் இறைவனே!’ - சுவாமி விவேகானந்தர்

தொகுப்பு: நமசிவாயம்

Published:Updated:
சுவாமி விவேகானந்தர்
பிரீமியம் ஸ்டோரி
சுவாமி விவேகானந்தர்
எதற்கும் ஆசைப்படாதீர்கள். நம்மைத் துன்புறச் செய்வது எது? துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் ஆசையே.

நாம் ஒன்றை விரும்புகிறோம்; அதை அடைய முடியவில்லை. விளைவு? துன்பம்! ஆசை இல்லாவிட்டால், துன்பமும் இல்லை. ஆசையைத் துறப்பது, துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவது என்று நான் எதைக் குறிப்பிடு கிறேன் என்பதை இங்கே விளக்குவது அவசியம்.

சுவர்களுக்கு ஆசை கிடையாது, அவை துன்புறுவதும் இல்லை. உண்மைதான். ஆனால், அவை வளர்ச்சி அடைவதும் இல்லை. நாற்காலிக்கு ஆசைகள் இல்லை; அது துன்பம் அடைவதில்லை. அது ஒரு நாற்காலியாகத்தான் எப்போதும் இருக்கிறது. ஆக, இன்பத்தில் ஒரு மகிமை இருக்கிறது; துன்பத்திலும் ஒரு மகிமை இருக்கிறது. ஏன், தீமையினால் பயன்கூட இருக்கிறது என்று நான் துணிந்து சொல்வேன்.

துன்பத்தால் நாம் பெறும் பாடம், நம் எல்லோருக்கும் தெரிந்ததே. ‘நாம் செய்யாமல் இருந்திருக்கக் கூடாதா?’ என்று பின்னால் நாம் வருத்தப்படும் பல நூறு காரியங்களைச் செய்து விடுகிறோம். ஆனால், அந்தக் காரியங்கள் நமக்கு எத்தனை உயர்ந்த பாடங்களைக் கற்பிக்கின்றன. தவறு ஒவ்வொன்றும் ஓர் உயர்ந்த பாடத்தைக் கற்பித்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆசைகள் தவறானவை என்பது எல்லோருக்கும் புரிகிறது. ஆனால், ஆசைகளைத் துறப்பது என்றால் என்ன? ஆசை இல்லாவிட்டால், வாழ்க்கை எப்படி நடைபெறும்? தீர்வு இதுதான்... உங்களுக்குச் சொத்து கூடாது என்பதல்ல; வேண்டியதை வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு மேலேயும் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், உண்மையை அறிந்துகொள்ளுங்கள்.

சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர்

செல்வம் யாருக்கும் சொந்தமானது அல்ல. சொந்தக்காரர்கள் என்ற கருத்தைக் கைவிட வேண்டும். நீங்களும் ஒன்றுமில்லை; நானும் ஒன்று மில்லை... யாராயிருந்தாலும் வெறும் பூஜ்யமே.

எல்லாம் இறைவனுக்கே சொந்தம். நாம் அனுபவிக்கும் செல்வத்தில் இறைவன் இருக்கிறார். நம் மனத்தில் எழும் ஆசைகளில் அவர் இருக்கிறார். ஆசைகளைத் திருப்தி செய்வதற்காக நாம் வாங்கும் பொருள்களில் இருப்பதும் அவரே. இப்படித்தான் நமது எண்ணம் இருக்க வேண்டும்.

நமது ஒவ்வோர் அசைவிலும், ஒவ்வொரு பேச்சிலும், உருவத்திலும், ஏன்... எல்லாவற்றிலுமே இறைவனை இணைத்துக்கொள்வோமானால், காட்சியே மாறிவிடும். உலகம் சொர்க்கமாகத் தோன்ற ஆரம்பித்து விடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism