ஓர் ஊரில் ஒரு மன்னர் இருந்தார். அவர் ஒரு சோதிடப் பைத்தியம். அடுத்த நாட்டின்மீது படையெடுக்கவேண்டும் என்றால்கூட, முதலில் சோதிடர்களுடன் ஆலோசனை நடத்துவார். அதன் பிறகே படைத் தளபதிகளைக் கூப்பிட்டுப் பேசுவார். அதனால் சோதிடர்கள் பலரும் அவரைத் தேடி வர ஆரம்பித்தனர். அவர்கள், ஏதாவது சொல்லிவிட்டுப் பொன்னும் பொருளும் பெற்றுச் செல்வது வழக்கமாயிற்று. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருநாள் சோதிடர் ஒருவர் வந்தார்.

‘‘மன்னா, இரண்டு அண்டங்காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் அதிர்ஷ்டம்’’ என்றார்.

அவ்வளவுதான். உடனே அமைச்சரைக் கூப்பிட்டார் மன்னன். ‘‘அமைச்சரே! இன்று முதல் உம்முடைய வழக்கமான பணிகளையெல்லாம் ஒத்திவையுங்கள். எங்காவது இரண்டு அண்டங்காக்கைகள் ஒன்றாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால், உடனே ஓடி வந்து என்னிடம் சொல்லவேண்டும். அதுதான் உங்கள் வேலை!’’ என்று உத்தரவிட்டார்.

அன்று முதல் அமைச்சர் அண்டங்காக்கைகளைத் தேட ஆரம்பித்தார். மறுநாளே அந்தக் காட்சி கிடைத்தது. அரண்மனை வாசற்புறத்தில் ஒரு மரக்கிளையில் இரண்டு காகங்கள் ஒன்றாக உட்கார்ந்திருந்தன. பார்த்தார் அமைச்சர்.உடனே ஒரே ஓட்டமாக உள்ளே ஓடினார். ‘‘மன்னா! சீக்கிரம் வாருங்கள்... நீங்கள் விரும்பிய அதிர்ஷ்ட தேவதைகள் அங்கே காட்சியளிக்கின்றன!’’ என்று மன்னரை அழைத்தார்.

மன்னர் விரைந்து வந்து பார்த்தார். ஆனால், அதற்குள் இரண்டில் ஒரு காகம் பறந்து சென்றுவிட்டது. ஒன்று மட்டும் தனியே இருந்தது. பார்த்தார் மன்னர். அவருக்குக் கடுமையான கோபம்.

‘‘அமைச்சரே! நீங்கள் இரு காகங்களைப் பார்த்துவிட்டு, எனக்கு மட்டும் ஒரு காகத்தைக் காட்டுகிறீர்கள். இதற்கான தண்டனை உமக்குப் பத்து கசையடிகள்!’’ என்றார்.

அடிவாங்கிய அமைச்சர் சிரித்தார்.

‘‘எதற்காகச் சிரிக்கிறீர்கள்’’ எனக் கேட்டார் மன்னர். அதற்கு, ‘‘இரண்டு அண்டங் காக்கை களைப் பார்த்த அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்று சற்று நினைத்துப்பார்த்தேன்... சிரிப்பு வந்தது மன்னா’’ என்று பதில் சொன்னார் அமைச்சர்!

பக்தியானது பாதை மாறிப்போகிறபோது, பகுத்தறிவு அதைப் பார்த்துச் சிரிப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

‘‘சிரிப்பே உனது ஒரே பிரார்த்தனையாக இருக்கட்டும். மகிழ்ச்சியே உனது ஒரே காணிக்கையாக இருக்கட்டும்’’ என்கிறார் ஓஷோ.

‘‘வாழ்வை நேசி. சிறிய பொருள்களை நேசிக்கத் தொடங்கு. ஒரு கணத்தைக் கூட தவறவிட்டுவிடாதே. மேன்மேலும் மகிழ்ச்சியடையும்போது இறைவன் உன்னிடம் மேன்மேலும் வருவதைக் கண்டுபிடிப்பாய்!’’

நண்பர்களே, பகுத்தறிவின் வெளிச்சம் பரவுகிறபோது, பக்தியின் பாதை இன்னும் தெளிவாகும்!

(14.6.07 இதழிலிருந்து...)