மகாகவி காளிதாசன் ஒருமுறை யாத்திரை மேற்கொண்டிருந்தார். வழியில் அவருக்குத் தாகம் எடுத்தது. சற்றுத் தொலைவில் பெண் ணொருத்தி கிணற்றில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருப்பதைக் கண்டார்.

கிணற்றடிக்குச் சென்று அவளிடம் தண்ணீர் கேட்டார். அவள் அவரிடம், “தருகிறேன்... ஆனால் நீங்கள் யார். உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றாள்.

`தான் யார் என்பதை அறியும் அருகதை அற்றவள் இந்தப் பெண்’ என்று எண்ணிய காளிதாசர், ``நான் ஒரு பயணி’’ என்றார்.

உடனே அந்தப் பெண் “இந்த உலகில் இரண்டே பயணிகள்தான் உண்டு. அவர்கள் சூரியனும் சந்திரனும். தினமும் உதிப்பதும் பிறகு அஸ்தமிப்பதுமாக சதா பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்’’ என்றாள்.

“சரி, அப்படியானால் நான் ஒரு விருந்தினர்” என்றார் காளிதாசர்.

அவளோ, ``இந்த உலகில் இரண்டே விருந்தினர்தான் உண்டு. இளமையும் செல்வமும்... இரண்டும் தற்காலிகமானவை. எனவே அவற்றையே விருந்தினர் என்று ஏற்க முடியும்” என்றாள்.

ஆச்சரியப்பட்ட காளிதாசர், “அப்படியானால், நான் ஒரு பொறுமைசாலி என்று வைத்துக்கொள்’’ என்றார்.

அதையும் அவள் ஏற்கவில்லை. ``இந்த உலகில் இரண்டே பொறுமை சாலிகள்தான் உண்டு. அவை, பூமியும் மரமும். பூமியை எவ்வளவு முறை மிதித்தாலும், பழத்துக்காக மரத்தின்மீது எவ்வளவு முறை கல்லெறிந்தாலும்... அவை பொறுமையாக இருக்கின்றன’’ என்றாள்.

காளிதாசர் பொறுமை இழந்தார். “மிகவும் சரி. நான் ஒரு பிடிவாதக்காரன்” என்றார்.

அந்தப் பெண் புன்னகையோடு சொன்னாள்: ``இந்த உலகில் பிடிவாத குணம் கொண்டவை இரண்டு - நம் நகமும் தலைமுடியும்; நாம் வெட்ட வெட்ட வளர்ந்துகொண்டே இருக்கும்!”

காளிதாசர்க்குக் கடும்கோபம் ஏற்பட்டது. “எனில், நான் ஒரு முட்டாள் என்று வைத்துக்கொள்” என்றார்.

அப்போதும் அவள் சளைத்தாளில்லை. ``இந்த உலகில் அறிவும் ஆற்றலும் இன்றி ஆளும் அரசனும் அவனைப் புகழ்ந்து துதி பாடும் அமைச்சருமே இரு வகை முட்டாள்கள் ஆவர்” என்றாள்.

இப்போது அவள் சாமானியமானவள் அல்ல என்பதை காளி தாசர் உணர்ந்தார். தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். அவளின் பாதங்களில் விழுந்து எழுந்தார். அப்போது அவர் கண்ட காட்சி அவரைப் பெரும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது.

ஆம், கல்வி-கலைகளுக்கெல்லாம் தலைவியான கலைமகள் சரஸ்வதியே அவர் முன் காட்சியளித்தாள்.

“காளிதாசா! நீ புத்தி உள்ளவன். ஆனால் நீ உன்னை உணர்ந்தால் மட்டுமே பூரண மனிதனாவாய். எவனொருவன் தன்னை அறிவது இல்லையோ, அவன் மனுஷ்ய உச்சத்தை அடைவதில்லை’’ என்று கூறி ஆசீர்வதித்தாள்!

- பா.சரவணன், ஸ்ரீரங்கம்