திருத்தலங்கள்
திருக்கதைகள்
தொடர்கள்
Published:Updated:

குழந்தை வரமருளும் தண்டாயுதபாணி!

தண்டாயுதபாணி
பிரீமியம் ஸ்டோரி
News
தண்டாயுதபாணி

ஆலயங்கள் அற்புதங்கள்

வேண்டும் வரங்கள் யாவற்றையும் அருளும் முருகப்பெருமான் கையில் கரும்புடன் காட்சியளிக்கும் அற்புதத் தலம், செட்டிகுளம். பழநியைப் போலவே செட்டிகுளத்தில் முருகப் பெருமான் காட்சியளித்தாலும் இங்கு மட்டுமே கையில் கரும்புடனும், தலையில் முடியுடனும் காட்சியளிக்கிறார். வேறு எங்கும் காண முடியாத அற்புதம் இது.

செட்டிகுளம்
செட்டிகுளம்

இந்தத் தலத்துக்கு வடபழநி மலை என்ற பெயரும் உண்டு. அதனால், பழநியில் நிறைவேற்ற முடியாத வேண்டுதல்களை இங்கு நிறைவேற்றிச் செல்கிறார்கள் பக்தர்கள். இந்த ஊரில் அகத்திய மாமுனிவருக்கு முருகப்பெருமான் வளையல் விற்கும் செட்டியார் போல காட்சி தந்தாராம். அதனால், செட்டிகுளம் என்ற பெயர் ஏற்பட்டது.

முருகப்பெருமான் அருளால் மனம் குளிர்ந்த கண்ணகி செட்டிகுளத்துக்கு அருகில் உள்ள சிறுவாச்சூர் தலத்தில் ஸ்ரீ மதுரகாளியாக அருள்புரிகிறாள். இங்கு மாவிளக்கு ஏற்றி வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகள் யாவும் தீரும் என்பது ஐதிகம்.

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி

மலையடிவாரத்தில் அருளும் விநாயகரை வணங்கி, மலைமீது ஏறினால் தண்டாயுதபாணியைத் தரிசிக்கலாம். இங்கு வந்து வேண்டுதல் நிறைவேறியதும் அலகு குத்தி, காவடி மற்றும் பால் குடம் எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர், பக்தர்கள். குழந்தை வரம் அருளுகிறார் முருகப் பெருமான். முருகன் அருளால், பிள்ளை பாக்கியம் பெற்றவர்கள், கரும்புத் தொட்டிலில் குழந்தைகளைத் தூக்கியபடி, பிராகார வலம் வந்து வணங்கிச் செல்கிறார்கள்.

ஆலயங்கள் அற்புதங்கள்
ஆலயங்கள் அற்புதங்கள்

எப்படிச் செல்வது: பெரம்பலூரிலிருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில், 16 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது ஆலத்தூர் கேட். இங்கிருந்து 8 கி.மீ தூரம் பயணித்தால் செட்டிகுளத்தை அடையலாம்.