Published:Updated:

ஶ்ரீராமன் பரிசளித்த நட்பு!

ஶ்ரீராமன்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீராமன் ( ஓவியர் ம.செ. )

புராணங்கள் விவரிக்கும் நட்பின் மகிமை!

ஶ்ரீராமன் பரிசளித்த நட்பு!

புராணங்கள் விவரிக்கும் நட்பின் மகிமை!

Published:Updated:
ஶ்ரீராமன்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீராமன் ( ஓவியர் ம.செ. )

‘நல்ல நண்பன் தீமையில் இருந்து விலக்குவான். நன்மைகளுடன் இணைப்பான். மறைக்க வேண்டியவற்றை மறைப்பான். நல்லதை வெளியிடுவான். ஆபத்திலிருந்து விடுவிப்பான். தக்க தருணத்தில் உதவுவான் (பாபான்னிவார...)’ என்று விவரிக்கிறார் மகான் பர்த்ரு ஹரி. புராணங்களும் நல்ல நட்புறவுகளைப் பற்றி விவரிக்கின்றன.

ஶ்ரீராமன் பரிசளித்த நட்பு!

விண்ணில் பறந்துகொண்டிருந்தான் ஜடாயு. உயரே செல்லச் செல்ல ஆதவனுக்கும், அவனுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைந்தது. வெப்பம் தாளாமல் தவித்தான். இதைக் கண்ட சம்பாதி, ஜடாயுவுக்கும் மேலே பறந்து, வெப்பத்தைத் தான் ஏற்றுக் கொண்டு அவனைக் காப்பாற்றினான். வெப்பத்தால் தனது இறக்கைகள் அழிந்ததுகூட சம்பாதிக்குத் துயரம் அளிக்கவில்லை. காரணம், சகோதரன் மீதான நட்புறவு அது!

கிருஷ்ணரிடம் அர்ஜுனனுக்கு ஏற்பட்ட உறவு, நட்பால் வளர்ந்த பற்று. அது அவனுக்கு வெற்றியைத் தந்தது. கிருஷ்ணரது பரிந்துரையைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் மனம் அர்ஜுனனிடம் இருந்தது.

லட்சுமணனின் தாய் சுமித்திரை. ராம- லட்சுமணரது சகோதர நட்பு அவளுக்குத் தெரியும். ‘ராமனை, தந்தையாகப் பார். சீதையை, தாயாகப் பார். காட்டை, அயோத்தியாகப் பார். மகிழ்ச்சியோடு ராமனுடன் காட்டுக்குச் செல்!’ என்று கட்டளையிட்டாள் அவள்.

அனுமனைக் கட்டியணைத்து நட்பைப் பரிசளித்த ராமன், கங்கையைக் கடக்க உதவிய படகோட்டி குகனுக்கு கூலியாகவும் நட்பை அளித்தார். அவருடன் சுக்ரீவனை இணைத்ததும் நட்புதான். அக்ரூரரிடம் கொண்டிருந்த நட்பு, கண்ணனை அழையா விருந்தாளியாக அவரது இல்லத்துக்கு அழைத்துச் சென்றது. கண்ணனது நட்பு, குசேலனுக்கு கைவல்யத்தை அளித்தது.

துஷ்யந்தனின் பிரிவால் வாடிய சகுந்தலை அவன் நினைவில் லயித்திருந்தாள். எதிரே வந்த துர்வாச முனிவரை அவள் கவனிக்கவில்லை. கோபமுற்றார் துர்வாசர். ‘எவரது நினைவில் லயித்திருந்து, என்னை நீ அலட்சியப்படுத்தினாயோ, அவரது நினைவிலிருந்து நீ விலகக் கடவது!’ என்று சபித்தார்.

இதைக் கண்ட சகுந்தலையின் தோழிகள் கலங்கினர். துர்வாச முனிவரின் கால்களில் விழுந்து அவரது கோபத்தைத் தணித்து, ‘ஏதாவது அடையாளத்தைக் காட்டினால், அவனுக்கு இவளைப் பற்றிய நினைவு திரும்பும்!’ என்று சாப விமோசனம் பெற்றனர். ஆம், துயரத்தைத் துடைக்க தோழிகளது நட்பு சடுதியில் செயல்பட்டது.

விக்கிரமாதித்தனும் பட்டியும், இணை பிரியா நண்பர்கள். பட்டியின் ஆயுட் காலத்தில் பகுதி விக்கிர மாதித்தனிடம் இருந்தது. வாழ்விலும், சாவிலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும். காடாறு மாதம், நாடாறு மாதமாக தமது வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வைத்தது விக்கிரமாதித்தனது நட்பு. நல்ல நட்பு நன்மைகளையே வழங்கும்!