கும்பகோணம் - திருவாரூர் சாலையில், கும்பகோணத்துக்குத் தெற்கே சுமார் 10 கி.மீ தொலைவில், அரசலாறு மற்றும் திருமலைராஜன் ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ளது நாச்சியார்கோவில்.

108 வைணவத் தலங்களில் ஒன்றான இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில், சித்தநாத சுவாமி திருக்கோயில் ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளது ஸ்ரீபர்வதவர்த்தனி உடனுறை ஸ்ரீராமநாத ஸ்வாமி திருக்கோயில்.

இது ராமேஸ்வரம், ஸ்ரீராமநாத ஸ்வாமி ஆலயத்துக்கு இணையானது என்கிறார்கள்.ராவணனிடம் போரிட இலங்கை செல்லுமுன் ராமன் வணங்கிச் சென்ற கோயில் இது என்றும், தன் தந்தை தசரதர் வழிபட்ட இங்கு, போரில் வெற்றி வீரராகத் திரும்பி வந்த ராமர் தீர்த்தக்குளம் ஒன்றை வெட்டி, அதில் சீதாதேவி மற்றும் லட்சுமணனுடன் நீராடி, இங்குள்ள இறைவனை வழிபட்டு ராவண வதத்தால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.

அனுமனும் இங்கு வழிபட்டதுடன் கோஷ்டத்தில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, அதற்கு ‘ஹனுமந்த லிங்கம்’ என்று நாமம் சூட்டியுள்ளார். இந்தக் கோயிலில் சனி பகவான் தன் மனைவியர் மந்தாதேவி- ஜேஷ்டாதேவி மற்றும் மகன்கள் மாந்தி-குளிகன் ஆகியோருடன் குடும்ப சமேதராக- மங்கல சனியாக அருள்புரிகிறார்.

‘ரோஹிணி நட்சத்திரத்தில் 12 ஆண்டுக் காலம் சனி வாசம் செய்து வெளியேறினால், ரோஹிணி சகட பேதம் எனும் கடும் பஞ்சம் ஏற்படும். அதை எவராலும் தடுக்க இயலாது’ என்று சிவபெருமான் நாரதரிடம் கூறினார். நாரதர் இதை வசிஷ்ட மகரிஷியிடம் கூறினார். வசிஷ்ட மகரிஷி இதை தசரதரிடம் கூறினார்.

இதைக் கேள்விப்பட்ட தசரதர், ரோஹிணியை விட்டு சனி கடக்குமுன் தடுத்து நிறுத்தி, போரிட விரும்பினார். இதை உணர்ந்த சனி பகவான், ‘‘அரசே, உனது வீரத்தையும், மக்கள்மீது நீ கொண்டுள்ள அன்பையும் கண்டு மகிழ்கிறேன். எனினும், நான் எதுவும் செய்ய இயலாது. விலகி வழிவிடு!’’ என்றார்.

உடனே தசரதர், சனி பகவானை நோக்கி ஒரு ஸ்லோகம் சொன்னார். இதனால் மனங்குளிர்ந்த சனி பகவான், ‘‘திருநறையூர் வந்து என்னை வழிபட்டால், நான் மங்கல சனியாக தரிசனம் தந்து, மகத்தான இரண்டு வரங்கள் தருகிறேன்!’’ என்றார். அதைக் கேட்ட தசரதர் திருநறையூர் வந்து சூரிய குளத்தில் நீராடி சனி பகவானை வணங்கினார்.

இதில் மனம் மகிழ்ந்த சனி பகவான் குடும்ப சமேதராக தசரதருக்குக் காட்சி தந்து, இரு வரங்களை அருளினார். அதில் முதலாவது, ‘ரோஹிணி சகடபேத காலத்தில் தாம் எவருக்கும், எந்தக் கஷ்டமும் கொடுப்பது இல்லை!’ என்பது.

இரண்டாவது, ‘தான் குடும்ப சமேதராக விளங்கும் இந்த ஆலயத்துக்கு வந்து தன்னை தரிசிப்போருக்கு மற்ற எட்டு கிரகங்களால் ஏற்படும் தீய பலன்களை முற்றிலுமாக நீக்குவேன்’ என்பது. அதன்படி, குடும்ப சமேதராக இங்கு காட்சி தரும் சனி பகவானின் அருகே தசரதர் கை தொழுதவாறு காட்சி தருகிறார்.

சனி பகவானுக்கு பாலபிஷேகம் செய்தால், உடம்பிலிருந்து வழியும் பால் (சனி பகவானின் நிறமான) நீல வண்ணத்தை அடைகிறது. சனிப் பெயர்ச்சி அன்று இங்குள்ள சனி பகவானுக்கு (உற்சவமூர்த்திக்கு) திருக்கல்யாணம் நடைபெறும். அன்று அவர் திருவீதி உலா வருவதும் வேறெங்கும் காண முடியாத சிறப்பு. சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு நடக்கும் அபிஷேகத்தைக் காண இங்கு வருபவர்களது எண்ணிக்கை அதிகம்.