பிரீமியம் ஸ்டோரி

வியாச மகரிஷி புராணங்களிலும் இதிகாசங்களிலும் பசுக்களின் சிறப்புகளைப் போற்றியுள்ளார், அதேபோல் வேதங்களிலும் ஸ்ரீமத் பாகவதம் போன்ற ஞான நூல்களிலும் பசுக்கள் குறித்த குறிப்புகளும் வழிபாட்டு நியதிகளும் உள்ளன.

பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம். பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் உறைந்திருப்பார்கள் என்கிறது வேதம். கோமாதாவின் நான்கு கால்கள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. செல்வ வளம் தரும் மகாலட்சுமி அதன் பின்பாகத்தில் வசிக்கிறாள். மாடுகளைப் போற்றி வளர்க்கும் இல்லங்களில் மகாலட்சுமி மகிழ்ந்துறைவாள். அவற்றைக் கொடுமைப்படுத்தினால் பெரும் பாபத்தை அடைந்து, பிறவிகளில் பெருந்துயரை அனுபவிக்க நேரிடும்.

பஞ்சகவ்யம் (பால், தயிர், நெய், சாணம், கோமூத்திரம்) அபிஷேகத்துக்கு உகந்தது; மருந்தாகவும் செயல்பட்டு பிணியை அகற்றும் என்கிறது ஆயுர்வேதம். பசுவின் காலடி பட்ட இடம் பரிசுத்தமாகும். மேய்ந்து வீடு திரும்பும் பசுமாடுகளின் குளம்படி பட்டு தூசி மேலே கிளம்பும் வேளையை, நல்லதொரு வேளை யாக முஹுர்த்த சாஸ்திரம் சொல்கிறது. அதேபோல், நாம் செய்த பாவங்கள் அகல, கோ தானம் செய்யச் சொல்கிறது தர்மசாஸ்திரம்.

நல்லன எல்லாம் அருளும்... நந்த சப்தமி கோபூஜை

கோ பூஜையும் மிக உன்னதமானது. கோயில் களில் கோ பூஜை செய்தால், கோயிலுக்குத் தேவையான பொருள்கள் தானே வரும். கோயில் நன்றாக இருந்தால் அந்த ஊரும் நன்றாக இருக்கும். வீட்டில் கோ பூஜை செய்தால் நமக்குச் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்; அனைத்துவிதமான தோஷங் களும் தரித்திரமும் நீங்கும்; வியாபாரம் விருத்தி அடையும் என்கின்றன ஞானநூல்கள்.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் பசுவின் மேன்மையையும், கோபூஜையின் சிறப்புகளையும். இப்படி உயர்ந்த பலன்களை அளிப்பதான கோபூஜையைச் செய்வதற்கு உகந்தவை என்று குறிப்பிட்ட நாள்களைச் சான்றோர் அடையாளம் காட்டுவர். அவற்றில் ஒன்று நந்த சப்தமி திருநாள்.

கார்த்திகை மாதம் வரும் வளர்பிறை சப்தமி திருநாளை நந்தசப்தமி எனப் போற்றுவர். இந்த நாளில் கோபூஜை செய்வது மிகவும் விசேஷம். அவ்வகையில் இந்த வருடம் 21.11.2020 சனிக்கிழமை அன்று நந்தசப்தமி திருநாள் வருகிறது.

அற்புதமான இந்தத் திருநாளில், உலக மக்களின் நன்மைக்காகவும், குடமுழுக்கு கண்டு ஆலயம் பொலிவுடன் திகழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடனும் திருநெல்வேலி மாவட்டம், செண்பகராமநல்லூரில் உள்ள அருள்மிகு ஜெகந்நாத பெருமாள் ஆலயத்தில் 108 கோபூஜை நடைபெற உள்ளது.

நல்லன எல்லாம் அருளும்... நந்த சப்தமி கோபூஜை

அன்று திருவோணத் திருவிழாவும் நடைபெறுவது கூடுதல் சிறப்பு. இந்த 108 கோபூஜை வைபவத்தை ஸ்ரீஜெகந்நாத பெருமாள் கைங்கரிய சபா, அருள்மிகு எட்டெழுத்து பெருமாள் திருக்கோயில் கோசாலை, நெல்லை உழவாரப் பணி குழாம், மற்றும் பல ஆன்மிக அமைப்புகள் இணைந்து நடத்துகிறார்கள். வைபவ ஏற்பாட்டாளர்களிடம் பேசினோம்.

`` 21.11.2020 அன்று காலை 7 முதல் 9 மணி வரை 108 கோ பூஜையும் 10 மணிக்குத் திருவோண திருமஞ்சன சிறப்பு பூஜையும் மதியம் 1 மணிக்கு அன்னதானமும் நடைபெறும்.

கோபூஜையில் 108 தம்பதியர் முன்பதிவு செய்துகொண்டு (முன்பதிவுக் கட்டணம் ரூ. 200) கலந்துகொள்ளலாம்.

நல்லன எல்லாம் அருளும்... நந்த சப்தமி கோபூஜை

நடப்புச் சூழலில் அரசு விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுகிறது இந்த வைபவம். பசுக்களை அழைத்து வருதல், சமூக இடை வெளியுடன் தடுப்புக் கம்புகள் நடுதல், பசு-கன்றுக்கான வஸ்திரங்கள், கால்நடைத் தீவனங்கள் மற்றும் பூஜைப் பொருள்கள்... ஆகிய தேவைகளைக் கருத்தில் கொண்டு, குறைந்த அளவில் முன்பதிவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். நேரில் கலந்துகொள்ள இயலாதவர்கள் தங்கள் பெயர், நட்சத்திரம் சொல்லி வேண்டுதல் சங்கல்பம் செய்யலாம்.

மிகத் தொன்மையான செண்பகராம நல்லூர் திருக்கோயில் அற்புதமான பிரார்த்தனை தலமாகும். இக்கோயில் குடமுழுக்கை எதிர்நோக்கியுள்ளது. பலருடைய கூட்டு முயற்சியால் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திருப்பணிக்கும் நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்கி, பெருமாளின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்'' என்கிறார்கள் விழாக் குழுவினர் (மேலும் விவரங்களுக்கு: 99941 07071).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு