Published:Updated:

`மண்ணே மலையான அற்புதம்’

நரசிங்கப்பட்டி பெருமாள்மலை
பிரீமியம் ஸ்டோரி
நரசிங்கப்பட்டி பெருமாள்மலை

நரசிங்கப்பட்டி பெருமாள்மலை

`மண்ணே மலையான அற்புதம்’

நரசிங்கப்பட்டி பெருமாள்மலை

Published:Updated:
நரசிங்கப்பட்டி பெருமாள்மலை
பிரீமியம் ஸ்டோரி
நரசிங்கப்பட்டி பெருமாள்மலை

துரைக்கு மேற்கேயிருக்கிறது நாகமலை; கிழக்கேயிருக்கிறது யானைமலை. இரண்டும் அவற்றின் தோற்றத்தால் அந்தப் பெயர்களைப் பெற்றன. அதேபோல் மதுரைக்கு அருகே இருக்கும் மற்றுமொரு மலை, பெருமாள் மலை. நரசிம்மப்பெருமாளின் திருமுகமான சிங்கம் போன்ற தோற்றத்தோடு கம்பீரமாக விளங்குகிறது என்பதால், இந்த மலை பெருமாள் மலை எனப்பட்டது.

மதுரையிலிருந்து மேலூர் செல்லும் நான்கு வழிச்சாலையில் வடக்கில் அமைந்துள்ளது நரசிங்கப்பட்டி என்னும் சிற்றூர். இங்குதான் இந்தப் பெருமாள் மலை உள்ளது. இதன் அடிவாரத்தில் உள்ள சேங்கை குளத்தின் அருகில் படிக்கோயிலாக அமைந்துள்ளது மலைச்சாமி கோயில்.

`மண்ணே மலையான அற்புதம்’

சிவனையும் பார்வதியையும் காண வேண்டும் என்று நினைத்த காகபுஜண்டர், சேங்கை குளத்தில் நீராடி இங்கு தவம் செய்தார். அப்போது ஈசன் முனிவருக்குக் காட்சியளித்தார். சிவபெருமான் நின்ற இடம் படிகளாக மாறியது. பிற்காலத்தில் அதுவே கோயிலாக அமைந்தது. இங்கே இறைவனுக்கு உருவ வழிபாடு கிடையாது. சிவனை ஆண்டியாகவும், கோயில் பின்னால் இருக்கும் மரத்தில் உறையும் பார்வதிதேவியை ஆயியாகவும் கருதி வழிபடும் பழக்கம் பழங்காலம் தொட்டு விளங்குகிறது. அதனால் இந்தக் கோயிலுக்கு ஆண்டி கோயில், ஆயி கோயில் என்ற பெயர்களும் உண்டு. இங்கு கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறும். இந்தத் திருவிழா மற்றும் பிரார்த்தனைச் சிறப்பு குறித்து கோயில் பூசாரி வீரண்ணனிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இந்த நரசிங்கப்பட்டி கிராமம் மிகவும் பழைமை யானது. இங்குள்ள சித்திரைச் சாவடியில் இன்றும் இயற்கை ஓவியங்களைக் காண முடியும். இங்குள்ள ‘ரெட்டைக்கல்’ என்ற கல்வெட்டில் குறுநில மன்னர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

`மண்ணே மலையான அற்புதம்’

சுற்றியிருக்கும் கிராமங்களுக்கு இந்தச் சாமியே காவல் தெய்வம். இங்கு சாமியை வணங்க வேண்டும் என்றால், சேங்கை குளத்தில் மூழ்கி எழுந்து, மூன்று முறை மண் எடுத்து வந்து இங்கிருக்கும் மண்மலைக் குவியலில் கொட்டி மூன்று முறை சுற்றிவர வேண்டும். அதன்பின்புதான் படியாய் அமைந்திருக்கும் கோயிலுக்கு வந்து சாமியை வேண்டிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு குளத்தில் மணலை எடுப்பதால் குளம் தூர்வாரப்பட்டு, மழைநீர் எப்போதும் வீணாகாமல் சேகரமாகிறது. பக்தர்களால் குவிக்கப்பட்ட மணல் குவியலே ஒரு மலைபோல் காட்சியளிப்பதால், அதை வணங்குவோர் மலைபோல் வாழ்க்கையில் உயர்வார்கள் என்பது நம்பிக்கை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சேங்கை குளத்தின் தீர்த்தத்தை வீடுகளிலும், வயல்களில், தொழில் செய்யும் இடங்களிலும் தெளித்தால் முன்னேற்றம் கிடைக்கும். திருக் கார்த்திகை அன்று சேங்கை குளத்து மண்ணோடு உப்பும் சேர்த்துக்கொண்டு வந்து கொட்டுவார்கள்.

அன்று கோயிலைச் சுற்றி கரும்பு வியாபாரம் அதிகளவு நடைபெறும். இதை பக்தர்கள் பிரசாதம் போல் தங்களது வீடுகளுக்கு வாங்கிச் செல்வார்கள். மொட்டை போடுவது, கரும்புத் தொட்டில் போன்ற நேர்த்திக் கடன்கள் நடைபெறும்.

`மண்ணே மலையான அற்புதம்’

திருக்கார்த்திகை அன்று மாலை பெருமாள் மலை உச்சியில் தீபம் ஏற்றிய பிறகே வீடுகளில் தீபம் ஏற்றுவார்கள் மக்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குவந்து மனம் உருகி வேண்டிக்கொண்டால் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும்” என்றார். நாமும் வரும் கார்த்திகை தீபத் திருநாளில் படிக்கோயிலுக்குச் சென்று ஆண்டி- ஆயியை வழிபட்டு வரம்பெறுவோம்.

எப்படிச் செல்வது?

மதுரையிலிருந்து மேலூர் மார்க்கத்தில் செல்லும் பேருந்தில் (தடம் எண் 75) பயணித்து வெள்ளரிப்பட்டியை அடைந்து, அங்கிருந்து கோயிலுக்குச் செல்லலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism