Published:Updated:

நாரதர் உலா: நெறிமுறைகள் அவசியம்...

நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா

அதேபோல் பக்தர்களுடன் அர்ச்சகர்கள், ஆலயப் பணியாளர்கள் மிக அருகில் நெருங்கிக் கலந்துரையாடுவது, நெற்றியில் விபூதி குங்குமம்

நாரதர் உலா: நெறிமுறைகள் அவசியம்...

அதேபோல் பக்தர்களுடன் அர்ச்சகர்கள், ஆலயப் பணியாளர்கள் மிக அருகில் நெருங்கிக் கலந்துரையாடுவது, நெற்றியில் விபூதி குங்குமம்

Published:Updated:
நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா
``ஆலய மணிக்கதவே தாழ் திறவாய்...” என்று பாடியபடியே விஜயம் செய்த நாரதரை வணங்கி வரவேற்றோம்.

“பக்தர்களின் விருப்பப்படி திருக்கோயில் கதவுகள்தான் திறந்து விட்டனவே சுவாமி... பிறகு எதற்கு இந்தப் பாடல்...” என்று கேட்ட படியே இஞ்சி கலந்த தேநீரைக் கொடுத்தோம் நாரதரிடம்.

புன்னகையோடு தேநீர்க் கோப்பையைப் பெற்றுக்கொண்டவர் தேநீரை ரசித்துப் பருகிவிட்டு, நம் கேள்விக்குப் பதில் சொல்லத் தொடங்கினார்.

நாரதர் உலா:  நெறிமுறைகள் அவசியம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“மாநிலமெங்கும் பெரும்பான்மையான ஆலயங்கள் திறக்கப்பட்டு விட்டன என்றாலும் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் காரணத்தால் சில ஆலயங்கள் பக்தர்கள் வழிபாட்டுக்குத் திறக்கப்படவில்லை. அந்த ஆலயங்களிலும் பணிகளைச் சீக்கிரம் முடிக்கவேண்டும்; பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கவேண்டும் என்பதுதான் ஆன்மிக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. இறையருளால் அந்த ஆலயங்களும் சீக்கீரம் தரிசனத்துக்குத் தயாராகட்டும்.’’

``கோயில்களில் கூட்டம் அதிகமாக கூடுகிறதா... நோய்த் தடுப்பு நெறிமுறைகள் முறைப்படி கடைப்பிடிக்கப்படுகின்றனவா... இதுபற்றி ஏதேனும் தகவல் உண்டா ஸ்வாமி?’’

``அரசுத் தரப்பில் ஆராய்ந்து சொல்லியுள்ள பாதுகாப்பு நடை முறைகளைக் கோயில்களில் செயல்படுத்துவது, அந்தந்த ஆலய நிர்வாகத்தின் பொறுப்பு. பெரும்பாலான கோயில்களில் அவற்றை நல்ல முறையில் செயல்படுத்தியும் வருகிறார்கள். அதேநேரம். நோய்த் தொற்றிலிருந்து நமக்கான முழுப் பாதுகாப்பு என்பது நம் கையில்தான் உள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பக்தர்கள் மட்டுமல்ல அர்ச்சகர்களும், ஆலய பணியாளர்களும் ஆலயத்திலும் ஆலயத்திலிருந்து வீட்டுக்குச் சென்றபிறகும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். இதுபற்றி மதுரையைச் சேர்ந்த சாமிநாத பட்டரின் கருத்துகளைப் பகிர்வது அவசியம் எனக் கருதுகிறேன்.’’

நாரதர் உலா:  நெறிமுறைகள் அவசியம்...

``சொல்லுங்கள் ஸ்வாமி...’’

`‘எக்காலத்திலும் இறைவனுக்குச் செய்யும் சேவைகளில் எவ்விதக் குறைபாடுகளும் இன்றி, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சிறப்பாகப் பணியாற்றும் அர்ச்சகர்கள், ஆலயப் பணியாளர்களை நிச்சயம் பாராட்டவேண்டும் என்கிறார் அவர். `பக்தர்கள் ஆலயத்துக்குச் செல்லும்போது, அர்ச்சகர்கள் - ஆலயப் பணியாளர்களிடம் பாராட்டுகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். அது, அவர்கள் மேலும் உற்சாகமாகப் பணியாற்ற உந்துதலாக இருக்கும். கடந்த 6 மாதங்களாகச் செய்த அவர்களின் தன்னலமற்ற சேவைக்கு நீங்கள் காட்டும் மரியாதையாக அமையும். ஆளே வராவிட்டாலும் சுவாமிக்கான நித்ய பூஜைகளைக் குறைவின்றிச் செய்த அவர்களைப் பாராட்டுவது நம் கடமை அல்லவா

ஆலய தரிசனம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நம் ஆரோக்கியத்தைப் பேணுவதும். எனவே அரசு அறிவுறுத்தியுள்ளபடி ஆலயத்துக்குள் நுழைவதற்கு முன்னர் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்வதும் சானிட்டைசர், லிக்விட் - சோப் அல்லது வேப்பிலை மஞ்சள் மற்றும் இதர கிருமிநாசினி மூலிகைகள் கொண்ட தண்ணீரில் கை கழுவுதலும் அவசியம்.

அதேபோல் பக்தர்களுடன் அர்ச்சகர்கள், ஆலயப் பணியாளர்கள் மிக அருகில் நெருங்கிக் கலந்துரையாடுவது, நெற்றியில் விபூதி குங்குமம் பூசிவிடுவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஆலயத்துக்குச் சென்று வந்த பிறகு கால் கழுவுதல், குளித்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாதவை என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. அதே தர்மசாஸ்திரத்தில் காலதேசவர்த்தமான சூழ்நிலைகளை அனுசரித்து, இவற்றைச் செய்துகொள்வது தவறில்லை என்று விதிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, மனநெருடல் இல்லாமல் கோயிலுக்குச் சென்று திரும்பி யதும் முறைப்படி கை, கால்களைக் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் செல்லலாம். அணிந்திருந்த துணிமணிகளையும் துவைக்கப் போடுவதும், துவைத்துக் காயவைப்பதும் அவசியம். அதேபோல், சிலர் எச்சரிக்கை உணர்வு மேலிட குளிக்க விரும்பலாம். அவர்களுக்கும்... `கோயிலுக்குச் சென்று வந்திருக்கிறோமே குளிக்கலாமா’ என்ற நெருடல் தேவையில்லை. தாராளமாக நீராடலாம்.

அதேபோல் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முண்டியடித்துக்கொண்டு கோயில் வளாகத்தில் நுழைவதைத் தவிர்க்கவேண்டும். ஆலய தரிசனம் முடித்து திரும்பும்வரை எக்காரணம் கொண்டும் முகக் கவசத்தைக் கழற்ற வேண்டாம். தரிசனம் முடிந்ததும் ஆலய வளாகத்தில் நேரம் கழிப்பதைத் தவிர்த்து விரைந்து வெளியேறுவதால், கூட்டத்தைத் தவிர்க்க இயலும்.

பெரும்பாலும் நிலைமை சீரடையும் வரையிலும் - இன்னும் சில காலத்துக்கு, பக்தர்கள் தனிப்பட்ட முறையில் அர்ச்சனைப் பொருள்களை வாங்கி வர அனுமதி இருக்காது. பக்தர்கள் தங்கள் குடும்பத்தார் பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம், அர்ச்சனையின் நோக்கம் ஆகியவற்றை பேப்பரில் எழுதி அர்ச்சகரிடம் கொடுத்தால் போதும்... இதனால், சங்கல்பத்தின் பொருட்டு பக்தர்கள் - அர்ச்சகர்கள் பரஸ்பரம் நெருங்கி பேசவேண்டிய நிலையும் சந்நிதானத்தில் அதிக நேரம் காத்திருக்கவேண்டிய அவசியமும் தவிர்க்கப்படும்.

இதுபோன்ற காலத்துக்கும் நடப்புச் சூழலுக்கும் ஏற்ப சில நடைமுறைகளை நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்டால், ஆலயத்தில் பணி செய்வோருக்கு வேலைகள் எளிதாகும்; பக்தர்களுக்கு தரிசனம் இனிதாகும். ’ என்கிறார் சாமிநாத பட்டர்.’’

``ஏற்புடைய கருத்துகள். கோயிலுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் அவசியம் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.’’

நம்முடைய பதிலை ஏற்று தலையசைத்து ஆமோதித்தவராக அடுத்தத் தகவலை ஆரம்பித்தார் நாரதர்.

“தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சில கோயில்களில் தரிசனம் செய்வதற்கு, ஆன்லைனில் முன்பதிவு செய்வது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது தெரியுமா’’

``ஆமாம்! எந்தெந்த கோயில்கள், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் விவரம் என்னென்ன... விளக்கமாகச் சொல்லுங்களேன் ஸ்வாமி?’’

நாரதர் உலா:  நெறிமுறைகள் அவசியம்...

`` புகழ்பெற்ற 11 தமிழகக் கோயில்களில் இனி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தே தரிசனம் செய்ய முடியும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மயிலை கபாலீசுவரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், வடபழநி முருகன் கோயில், திருவொற்றியூர் தியாகராஜ ஸ்வாமி கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், கரூர் - தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில், பழநி முருகன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில் ஆகிய ஆலயங்களில் தரிசனம் செய்ய ஆன்லைன் புக்கிங் அவசியம். சென்னைக் கோயில்களில் இந்த நடைமுறை தொடங்கிவிட்டது. பிற மாவட்டக் கோயில்களில் 6-ம் தேதி முதல் இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளதாம்.

இந்த அறநிலைய ஆட்சித் துறையின் (https://tnhrce.gov.in/) இணைய தளத்துக்குச் சென்று, அந்தத் தளத்தில் இருக்கு `இ சேவை’ என்னும் பகுதியை க்ளிக் செய்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.’’

``இந்த ஆன்லைன் முன்பதிவு, பக்தர்களுக்குக் குழப்பம் இல்லாமல் இருக்கிறதா...’’

``இருக்கிறது என்கிறார்கள் முன்பதிவுக்கு முயற்சி செய்த நண்பர்கள் சிலர். முன்பதிவுக்கான அடையாள அட்டை அவசியமாம். ஆதார்கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டுமாம். ஆனால் சில ஆலயங்களுக்கான ஆன்லைன் முன்பதிவு படிவத்தில் ஆதார் கார்டு மட்டுமே அடையாள அட்டையாக ஏற்கப்படுகிறதாம். இது ஆதார் இல்லாத பிற பக்தர்களை மனம் வருத்தமடையச் செய்யும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

அதேபோல் `சில கோயில்களில் இலவச தரிசனம் மட்டுமே தற்போது அனுமதிக்கப்படுகிறது. இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ஆகியவற்றுக்கு எவ்வளவு பேரை அனுமதிக்கலாம், எந்த அடையாள அட்டையை ஏற்கலாம் என்பதெல்லாம் அந்தந்தக்

கோயில் நிர்வாகமே முடிவு செய்வதால் முன்பதிவு செய்யும்போது குழப்பம் நிகழ்கிறது. எல்லா ஆலயங்களுக்கும் பொதுவான நடைமுறை இருந்தால் இதுபோன்ற குழப்பம் இருக்காது என்கிறார்கள்’’ என்று நாரதர் நிறைவு செய்யவும், செல்போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது.

அழைப்பை ஏற்று பேசி முடித்தவர், ``தஞ்சை நண்பர் ஒருவர் பேசினார். அந்தப் பகுதியில் திருக்கோயில் ஒன்றில் குடமுழுக்கு நடைபெறுவதில் பிரச்னைகளாம். விரிவாக விசாரித்து வந்து சொல்கிறேன்’’ என்றபடியே விடைபெற்றுக்கொண்டார்.

- உலா தொடரும்...