Published:Updated:

ஒன்பதுவித பலன்களை அருளும் நவதுர்கா ஹோமம்!

நவதுர்கா ஹோமம்
பிரீமியம் ஸ்டோரி
News
நவதுர்கா ஹோமம்

எருமை சோம்பலின் அடையாளம். சோம்பல் நீங்கினால் வெற்றி நிச்சயம். சோம்பலை அழிப்பவள் துர்கை என்பதே அந்த வடிவத்தின் அடையாளம்.

எதன் பொருட்டும் அச்சமும் கவலையும் அற்ற வாழ்வே, பேரின்ப வாழ்வு என்பார்கள் ஆன்றோர்கள். அத்தகைய வாழ்வை வரமாகப் பெற, அம்பிகையைச் சரணடைவது ஒன்றே வழி. அவ்வகையில் அவளின் திருப்பாதங்களை நாம் பற்றிக்கொள்ள ஏற்ற வழிபாடுதான், அற்புதமான நவராத்திரி வைபவம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அம்பிகை, உலக மக்களுக்கு அச்சத்தை உருவாக்கிய அசுர சக்தி களை ஒன்பது விதமான துர்கை வடிவங்கள் எடுத்து அழித்ததையும் அவள் கொண்ட வெற்றியையும் கொண்டாடும் நாள்களே நவராத் திரி. வேண்டும்போது வேண்டிய வடிவமெடுத்து வந்து நம்மைக் காக்கும் துர்கையின் கருணை அளப்பரியது. அந்த அன்னையை - ஒன்பதுவித துர்கா வடிவங்களை, இந்த நவராத்திரி நாள்களில் போற்றிக் கொண்டாடுவது விசேஷம்.

துர்காதேவி - முக்கண்ணி; எட்டு கரங்கள் கொண்டவள். சந்திரன் சூடிய சடாமகுடதாரி அவள். திரிசூலம், வாள், சக்கரம், வில் போன்றவை வலது கரத்திலும், பாசம், கோடரி, கேடயம், அங்குசம் போன்றவை இடது கரத்திலும் திகழ, மகிஷனின் சிரம் திருப் பாதங்களின் கீழே கிடக்க, சிங்கத்தின் மீது ஒரு காலூன்றி, கருணையோடு நிற்பவள்! இந்தத் திருவடிவின் தத்துவம் என்ன?

ஒன்பதுவித பலன்களை அருளும் நவதுர்கா ஹோமம்!

எருமை சோம்பலின் அடையாளம். சோம்பல் நீங்கினால் வெற்றி நிச்சயம். சோம்பலை அழிப்பவள் துர்கை என்பதே அந்த வடிவத்தின் அடையாளம்.

சைல புத்ரி, ப்ரம்மசாரிணீ, சந்த்ர கண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினீ, காலராத்ரி, மஹாகௌரி, ஸித்திதாத்ரி என நவதுர்கைகள் நவராத்திரி நாள்களில் தோன்றி அசுர சக்திகளை வென்றனர் என்று வடமொழிப் புராணங்கள் கூறுகின்றன.

அதுபோல வனதுர்கா, சூலினி துர்கா, ஷாந்தி துர்கா, சபரி துர்கா, ஜ்வால துர்கா, ஜாத வேதோ துர்கா, லவண துர்கா, தீப துர்கா, அஸீரி துர்கா என ஒன்பது துர்கைகள் தோன்றி உலக மக்களைக் காத்தனர் என்றும் சில புராணங்கள் கூறுகின்றன.

வாமை, ஜ்யேஷ்டை, ரௌத்ரீ, காளி, கலவி கரணி, பலவி கரணி, பலப்ரதமனீ, சர்வ பூத தமனி, மனோன்மணி என்ற ஒன்பது வடிவங்களையும் அம்பிகை எடுத்து நவதுர்கா என்றானாள் என்றும் கூறப்படுகிறது. ஈடு இணை சொல்லமுடியாத வல்லமை கொண்ட இந்தத் தேவிகளை வணங்குவதால், பூரணத்துவம் பெற்று அச்சமின்றி வாழலாம் என்று வேதங்கள் கூறுகின்றன.

‘வெல்ல முடியாதவள்’ என்றும் ஜோதி வடிவமானவள் என்றும் போற்றப்படும் துர்கையை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு உன்னத வழிபாடே நவதுர்கா ஹோமம். உங்களின் சகல துக்கங்களும் விலகி, சந்தோஷ வாழ்வைப் பெற நவதுர்கா ஹோமம் செய்வது மிகுந்த பலனை அளிக்கும். இந்த ஹோமத்தில் சங்கல்பம் செய்து கொள்வதன் மூலம் கல்யாண வரம், மாங்கல்ய பலம், குழந்தைப்பேறு, வேலை வாய்ப்பு, உத்தியோக உயர்வு, தொழில் விருத்தி, நோயற்ற வாழ்வு, கடன் பிரச்னைக்குத் தீர்வு, சத்ரு ஜயம் ஆகிய பலன்கள் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள்.

ஒன்பதுவித பலன்களை அருளும் நவதுர்கா ஹோமம்!

போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு மிகவும் சிறப்பான ஹோமம் நவதுர்கா ஹோமம். இந்த ஹோமத்தில் சங்கல்பம் செய்தவர் வீட்டில் வறுமை சேராது, அச்சம், கவலை, அவநம்பிக்கைகள் சூழாது. `இவ்விதமான அனைத்துப் பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வைத் தரும் வழிபாடு நவதுர்கா ஹோமம்' என்பது ஆன்மிகப் பெரியோர்களின் வாக்கு.

வாசகர்களின் நலன் வேண்டி மிக அற்புத மான அபூர்வமான ஸ்ரீநவதுர்கா ஹோமத்தை சக்திவிகடன் சார்பில் நடத்தவுள்ளோம்.

சக்தி விகடனும் பெரிய வெளிக்காடு அருள்மிகு வெக்காளி அம்மன் சித்தர்பீடமும் இணைந்து நடத்தும் இந்த ஹோமம், நிகழும் அக்டோபர் மாதம் நவராத்திரி தொடங்கு வதற்கு முதல் நாள் - 16.10.2020 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், பெரியவெளிக் காடு கிராமத்தில் உள்ள அருள்மிகு வெக்காளி அம்மன் ஆலயத்தில் அக்டோபர் 16 அன்று காலையில் 10 முதல் மதியம் 2 மணி வரை ஹோமவைபவம், சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

ஒவ்வொரு துர்கைக்கும் ஒரு கலசம் வைத்து, ஸ்ரீதுர்காசூக்தம் ஜபம் மற்றும் ஹோமம் செய்யப்பட்டு, பூர்ணாஹுதி நடைபெறும். பின்னர் கலசங்கள் பிரதட்சிணமாக எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

அற்புதமான இந்த ஹோமத்தில் வாசகர்கள் தங்களுக் காகவும், பிள்ளைகளுக்காகவும், உறவினர் மற்றும் நண்பர்களுக்காகவும் சங்கல்பம் செய்து பலன் அடையலாம்.

வாசகர்களின் கவனத்துக்கு...

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக் கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.301/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்.

அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்), பெரியவெளிக்காடு அருள்மிகு வெக்காளி அம்மன் சந்நிதியில் விசேஷமாய்ப் பூஜிக்கப்பட்ட - அம்மன் டாலருடன் கூடிய காப்பு ரட்சை ஆகியவை ஹோமம் முடிந்து, அடுத்த ஒரு வார காலத் துக்குள் (23.10.2020 தேதிக்குள்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் (20.10.20 செவ்வாய் அன்று) வீடியோ வடிவில் சக்தி விகடன் யூடியூப் சேனல் மற்றும் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு:

73974 30999; 97909 90404

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நவராத்திரி நாயகி!

`வாக்தேவி' என வேதங்களால் போற்றப் படும் சரஸ்வதிதேவி, ஞான வடிவாக திகழ்பவள். இவளின் திருமுகம்- பிரம்ம வித்தை; திருக்கரங்கள்- நான்கு வேதங்கள்; கண்கள்- எண்ணும் எழுத்தும்; திருப்பாதங்கள்- இதிகாசங்கள்; தேவியின் தனங்கள்- சங்கீத சாகித்யம்; இவளின் கரத்தில் இருக்கும் யாழ்- ஓம்காரம் எனப்படும் சர்வ ஸித்தி மந்திரத்தைக் குறிக்கும் என்கின்றன புராண நூல்கள்.

ஒன்பதுவித பலன்களை அருளும் நவதுர்கா ஹோமம்!

நாகை மாவட்டம்- கடலங்குடியில் உள்ள சிவாலயத்தில் விசேஷ வடிவில் அருளும் கலைமகளை தரிசிக்கலாம். வளையல், கொலுசு, முத்துச் சரங்கள், கிரீடம் மற்றும் நெற்றிப்பட்டம் திகழ வித்தியாசமான வஸ்திர அமைப்புடன் அருள்பாலிக்கிறாள் இந்த தேவி.

மும்பை- சி.எஸ்.டி. ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந் துள்ளது மும்பாதேவி ஆலயம்.

இங்கே, ரிஷப வாகனத்தில் அமர்ந்து காட்சி தருகிறாள் அம்பாள். நவராத்திரி ஒன்பது நாட்களும்... தேங்காய் உடைத்து அதன் நீரை அம்பிகையின் வாகனத்தில் ஊற்றி விடுகின்றனர். இதேபோல், நவராத்திரி நாட்களில் வளர்க்கப்படும் ஹோம சாம்பலை, புருவத்தில் பூசிக் கொள்வார்களாம்!

-மு.ராமநாதன், சென்னை-44