Published:Updated:

நவராத்திரி 8-ம் நாள்: எட்டு லட்சுமியரும் அருளும் திருநாளின் சிறப்புகள் மற்றும் ஸ்லோகம்!

நவராத்திரி

நவராத்திரி 8-ம் நாள்: இந்த நாளில் அம்மன் 9 வயது குழந்தையாக துர்கை ரூபத்தில் அருள்புரிகிறாள்.

நவராத்திரி 8-ம் நாள்: எட்டு லட்சுமியரும் அருளும் திருநாளின் சிறப்புகள் மற்றும் ஸ்லோகம்!

நவராத்திரி 8-ம் நாள்: இந்த நாளில் அம்மன் 9 வயது குழந்தையாக துர்கை ரூபத்தில் அருள்புரிகிறாள்.

Published:Updated:
நவராத்திரி

நவராத்திரி நாளில் ஒவ்வொரு நாளும் அம்மனை பல வித ஸ்லோகங்கள் சொல்லி பூஜிக்கலாம். இந்த நாளில் அஷ்ட லக்ஷ்மிகளை ஸ்துதி சொல்லி வழிபடலாம்.

1.ஆதிலக்ஷ்மி

ஆதிலக்ஷ்மி நமஸ்தேஸ்து

பரபிரம்ம ஸ்வரூபிணி

யசோ தேஹி தனம் தேஹி

ஸர்வகாமாம்ஸ்ய தேஹிமே

எந்த அம்மனால் நாம் இந்த பூமிக்கு வந்தோமோ அந்த பரபிரம்ம ஸ்வரூபிணியாய் விளங்கும் அம்மனை எனக்கு வேண்டியதெல்லாம் தரவேண்டுமென்று பூஜிக்கிறேன். அவளே எனக்கு அம்மாவாக இருந்து அருள்புரிய ஆராதிக்கிறேன்.

2.தான்யலக்ஷ்மி

தான்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து

ஸர்வாபரண பூஷிதே

ப்ராஞ்யம் தேஹி ஸ்ரீயம் தேஹி

ஸர்வகாமாம்ஸ்ய தேஹிமே

ஒரு அம்மாவாக எனக்கு அணைத்து வித தானியங்களையும் அளித்து உணவு தரும் தான்யலக்ஷ்மியை நான் வணங்குகிறேன்.

துர்கா
துர்கா

3.தைரியலக்ஷ்மி

வீரலக்ஷ்மி நமஸ்தேஸ்து

பராசக்தி ஸ்வரூபிணி

வீர்யம் தேஹி பலம் தேஹி

ஸர்வகாமாம்ஸ்ய தேஹிமே

பராசக்தி ரூபத்தில் எனக்கு அனைத்து சக்தியும் தரும் தைரியலக்ஷ்மியிடம் வீரத்தை வேண்டுகிறேன்.

4.கஜலக்ஷ்மி

கஜலக்ஷ்மி நமஸ்தேஸ்து

சர்வதேவ ஸ்வரூபிணி

ஆஸ்வாம்ஸ கோகுலம் தேஹி

சர்வகாமாம்சய தேஹிமே

எல்லா தேவர்களுக்கும் சிறந்தவளான அம்மனை ஆராதித்து எல்லா விதமான செல்வங்களையும் அளிக்குமாறு வேண்டுகிறேன். மேலும் அமைதியான இல்வாழ்க்கை அமைய கஜலட்சுமியை ப்ரார்த்திக்கலாம்.

5.சந்தானலக்ஷ்மி

சந்தானலக்ஷ்மி நமஸ்தேஸ்து

புத்ரபபௌத்ர ப்ரதாயினீ

புத்ரான்த் தேஹி தனம் தேஹி

ஸர்வகாமாம்ஸ்ய தேஹிமே

எனக்கு எல்லா செல்வங்களையும் தரும் அந்த அம்மனையே பிள்ளையாகப் பெற இந்த சந்தானலக்ஷ்மியை பூஜிக்கிறேன்.

கஜலட்சுமி
கஜலட்சுமி

6. ஜயலக்ஷ்மி

ஜயலக்ஷ்மி நமஸ்தேஸ்து

ஸர்வகார்ய ஜயப்ரதே

ஜயம் தேஹி சுபம் தேஹி

ஸர்வகாமாம்ஸ்ய தேஹிமே

மனதில் நினைக்கின்ற எல்லா காரியங்களிலும் வெற்றியடைய அருள்புரியும் அந்த ஜகன்மாதாவை நான் வணங்குகிறேன். இந்த ஜயலக்ஷ்மியை மனதில் நினைத்து எந்த காரியம் செய்தாலும் அதில் வெற்றி நிச்சயம்.

7.வித்யாலக்ஷ்மி

வித்யாலக்ஷ்மி நமஸ்தேஸ்து

பிரம்மவித்யா ஸ்வரூபிணி

வித்யாம் தேஹி கலாம் தேஹி

ஸர்வகாமாம்ஸ்ய தேஹிமே

கல்வி செல்வதை அள்ளித்தரும் இந்த வித்யாலக்ஷ்மியை வணங்கி கல்வி மற்றும் கலைகளை பெறுவோம்.

8.தனலக்ஷ்மி

தனலக்ஷ்மி நமஸ்தேஸ்து

ஸர்வ தரித்திர நாசினி

தனம் தேஹி ஸ்ரீயம் தேஹி

ஸர்வகாமாம்ஸ்ய தேஹிமே

நம்மிடம் இருக்கும் தரித்திரம் எல்லாம் அழித்து தனத்தை வாரி வழங்கும் இந்த தனலட்க்ஷ்மியை நான் பூஜிக்கிறேன்.

சரஸ்வதி
சரஸ்வதி

எட்டாம் நாள் சிறப்புகள்

இந்த நாளில் அம்மன் 9 வயது குழந்தையாக துர்கை ரூபத்தில் அருள்புரிகிறாள்.

"துர்கா த்ராயதி பக்தம் யா

ஸதா துர்க்காதி நாஷினி

துர்ஞேயா ஸர்வதேவானாம்

தாம் துர்காம் பூஜையாம்யஹம்"

எந்த தேவி பக்தர்களை எப்போதும் ஆபத்துகளில் இருந்து விளக்கி நம்மை எப்போதும் ரக்ஷிப்பவளாய் இருக்கிறாளோ அவளை நான் பூஜிக்கிறேன்.

ஓம் மகிஷா மர்தின்யை வித்மஹே

துர்கை தேவ்யை தீமஹி

தந்நோ தேவி ப்ரசோதயாத்

இவ்வாறு ஸ்லோகம் சொல்லி துர்க்கை அம்மனை இன்று வழிபட வேண்டும்.

வழிபாட்டு முறை:

நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று காசு வைத்து தாமரை போல் கோலம் போட்டு பன்னீர் இலையால் அர்ச்சனை செய்ய வேண்டும். ரோஜா மற்றும் சம்பங்கி பூவால் அம்மனை அலங்கரிக்க வேண்டும். நைவேத்தியமாக பால் சாதம் செய்து புன்னாகவராளி ராகம் பாடி ஆராதித்தால் நன்மை கிடைக்கும். துர்கைக்கு பாயஸன்னப்ரியா என்ற பெயரும் உண்டு. அதனால் இன்று இளநீர் தேங்காய் பாயசம் செய்தும் பூஜிக்கலாம். இவ்வாறு துர்க்கை அம்மனை வழிபட்டால் பகைவர்கள் அழிவார்கள். குளிர்ச்சியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு கிடைக்கும்.