Published:Updated:

நவராத்திரி 9-ம் நாள்: சரஸ்வதி, ஆயுத பூஜை நாளில் அறிந்துகொள்ள வேண்டிய சிறப்புகள் மற்றும் ஸ்லோகம்!

சரஸ்வதி பூஜை

இன்று பெண்கள் எல்லோரும் சேர்ந்து கோலாட்டம் அடித்து மகிழ்வது வழக்கம். அதனால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். சுற்றத்தாரோடு சேர்ந்து உறவாடி மகிழுவதற்கும் நல் வாய்ப்பாய் அமையும்.

நவராத்திரி 9-ம் நாள்: சரஸ்வதி, ஆயுத பூஜை நாளில் அறிந்துகொள்ள வேண்டிய சிறப்புகள் மற்றும் ஸ்லோகம்!

இன்று பெண்கள் எல்லோரும் சேர்ந்து கோலாட்டம் அடித்து மகிழ்வது வழக்கம். அதனால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். சுற்றத்தாரோடு சேர்ந்து உறவாடி மகிழுவதற்கும் நல் வாய்ப்பாய் அமையும்.

Published:Updated:
சரஸ்வதி பூஜை

ஒன்பதாம் நாள் சிறப்புகள்: இன்று அம்மன் பத்து வயது குழந்தையாக அருள்புரிகிறாள். சுபத்ரா மற்றும் சித்திதா என்ற நாமத்துடன் அம்மன் இன்று அழைக்கப்படுகிறாள்.

"சுபத்ராணி ச பக்தானாம்

குறுதே பூஜிதா சதா

அபத்ர நாஷிணீம் தேவீம்

சுபத்ராம் பூஜையாம்யஹம்"

பொருள்: எந்த தேவி தன்னை பூஜிக்கும் பக்தர்களுடைய எல்லா அமங்கலங்களையும் நாசம் செய்து அணிகளை கொடுக்கிறாளோ அந்த சுபத்திராவை நான் பூஜிக்கிறேன்.

'நவமம் சித்திதாம்'

நம் அறிவு கெடாமல் நல்ல எண்ணங்கள் மட்டும் அதில் விதைக்க வழிவகுக்கும் இந்த சித்திதா தேவியை பூஜித்து அருள் பெறுவோம்.

சரஸ்வதி பூஜை
சரஸ்வதி பூஜை

இன்று அம்மன் சாமுண்டா என்ற பெயரோடும் அழைக்கப்படுகிறாள். அதற்கான ஸ்லோகம்,

'ஓம் கிருஷ்ணா வர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தந்நோ சாமுண்டா ப்ரசோதயாத்'

வழிபாட்டு முறை: இன்று பச்சை கற்பூரம் போன்ற வாசனை திரவியத்தால் ஆயுதம் (அதாவது வேல் அல்லது சூலம்)போல் கோலம் போட வேண்டும். மருதாணி இலையால் அர்ச்சனை செய்து தாமரை மற்றும் மரிக்கொழுந்து கொண்டு அலங்கரிக்க வேண்டும். நைவேத்தியமாக அக்காரஅடிசல் செய்து வசந்தா ராகம் பாடி அம்மனை வழிபட வேண்டும். இவ்வாறு வழிபட்டால் நம்மை அண்டி வரும் தீமைகள் அனைத்தும் அழிந்து நன்மை உண்டாகும். இன்று பெண்கள் எல்லோரும் சேர்ந்து கோலாட்டம் அடித்து மகிழ்வது வழக்கம். அதனால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். சுற்றத்தாரோடு சேர்ந்து உறவாடி மகிழுவதற்கும் நல் வாய்ப்பாய் அமையும்.

அம்மனை தினமும் ஆராதிப்போம்

ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொரு அம்மனை நினைத்து பிரார்த்தனை செய்கிறோம். அது பலனை எதிர்பார்த்து அல்ல. அந்தந்த நாளில் அம்மனுடைய ரூபத்தை அறிந்து அவளுடைய சக்தியை உணர்ந்து நாமும் அவள் பின்பற்றிய தர்மத்தை அறியவே. எதை நாம் புதிதாக தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அம்மாவிடம் தான் கேட்போம். அப்படிதான் அம்மனின் பல ரூபங்களை குணங்களை அறிந்து அதிலிருந்து தர்மம் நியாயம் பற்றி அறிகிறோம். இந்த அம்மனையே அம்மாவாய் நினைத்து நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் அவளிடம் சரணாகதி செய்ய பிரார்த்தனை செய்வோம். நவராத்ரி மட்டும் என்று இல்லாமல் ஒவ்வொரு நாளும் நாம் அந்த அம்மனை,

சரஸ்வதி பூஜை
சரஸ்வதி பூஜை

சாநித்யம் குரூம் கல்யாணீம்

மம பூஜாத்ரிகே சுபே

பிம்பே தீபே ஹரித்ரா குங்குமே

சாநித்யம் குரூம் கல்யாணீம்

சாநித்யம் குரூம் காமாட்சி

என்று சொல்லி குங்குமம் தீபம் வைத்து உன்னுடைய வடிவத்தை நான் தினமும் பிரார்த்திக்கிறேன் என்று சொன்னால் அவள் என்றும் நம்மை கைவிடமாட்டாள். எல்லா செல்வத்தையும் தந்து அந்த அம்மன் நம்மை தான் பெற்ற பிள்ளை போல் பேணி காப்பாள். அவள் நமக்கு அருள்வது போலே நாமும் நம்மால் இயன்ற உதவிகளை செய்து புண்ணியத்தை சேர்ப்போம்.