Published:Updated:

நங்கையருக்கு அருளும் நவராத்திரி: ஐந்தாம் நாள் அறிந்துகொள்ள வேண்டிய சிறப்புகள் மற்றும் ஸ்லோகம்!

நவராத்திரி

ஐந்தாம் நாளான இன்று கடலை மாவில் பறவை போல் கோலம் போட்டு விபூதி பச்சிலையால் அர்ச்சனை செய்து பாரிஜாத பூவால் அலங்கரிக்க வேண்டும்.

நங்கையருக்கு அருளும் நவராத்திரி: ஐந்தாம் நாள் அறிந்துகொள்ள வேண்டிய சிறப்புகள் மற்றும் ஸ்லோகம்!

ஐந்தாம் நாளான இன்று கடலை மாவில் பறவை போல் கோலம் போட்டு விபூதி பச்சிலையால் அர்ச்சனை செய்து பாரிஜாத பூவால் அலங்கரிக்க வேண்டும்.

Published:Updated:
நவராத்திரி

நவராத்திரி: ஐந்தாம் நாள் அறிந்துகொள்ள வேண்டிய சிறப்புகள் மற்றும் ஸ்லோகம்! அம்பாள் ஆறு வயது குழந்தையாக காட்சி தருகிறாள். இன்று அம்மன் காளி என்ற பெயர் கொண்டு அருள்புரிகிறாள்.

நவராத்திரி
நவராத்திரி

சௌந்தரிய லஹரியின் பாடல் அம்பாளின் புகழுக்கு அளவே இல்லை என்கிறது. ஆதிசங்கரர் சௌந்தரிய லஹரி என்ற நூலில் அம்பாளை புகழ்ந்து நூறு பாடல்கள் எழுதியுள்ளார். சௌந்தரிய லஹரி பாடல்களை நவராத்திரி நாட்களில் பாடினால் அனைத்து விதமான செல்வங்களும் நம்மை வந்தசேரும். மனதில் நிம்மதி பிறக்கும்.

அந்த நூலின் ஒரு பாட்டில் அம்பாளிடம் தான் எப்படி சரணாகதி அடைய வேண்டுமென்றும் அவர் குறிப்பிடுகிறார்.

"ததானே தீனேப்யஹ ஸ்ரீயமனிஷம் ஆஷானுசதுர்ஷி

மமந்த சௌந்தர்ய ப்ரகர மகரந்தம் விகரதி

தவாஸ்மின் மந்தார ஸ்தபக ஸுபகே யாதுசரனே

நிமஜ்ஜன் மஜீவஹ கரசரணஹ ஷட்சரனதாம்!"

அம்மா எப்பொழுதும் நீ கேட்டதெல்லாம் கொடுக்க கூடியவள். ஏனென்றால் நீ அம்மா. பிள்ளையாகியவன் தவறான பிள்ளையாய் இருக்கலாம் ஆனால் அம்மா கெட்ட அம்மாவாக இருக்கவே முடியாது. அதனால் நான் உன்னுடைய சரணங்களில் சரணாகதி அடைந்துவிடுகிறேன். உன்னுடைய சரணங்கள் தாமரை பூ மாதிரி மென்மையாக இருக்கிறது. அந்த பாதகமலத்தை நான் வண்டு போல சுற்றி சுற்றி வருகிறேன். இதற்கு எனக்கு நீ அனுக்கிரஹம் செய்வாய் அம்மா- என்று வேண்டுகிறார்.

நாமும் இந்த நவராத்திரி நாட்களில் என்ன வேண்டுதலை வேண்டினாலும், அம்பாளின் அருளால் அது நிச்சயம் நிறைவேறும்.

துர்கை
துர்கை

ஐந்தாம் நாள் சிறப்புகள்:

இந்த நாளில் அம்பாள் ஆறு வயது குழந்தையாக காட்சி தருகிறாள். இன்று அம்மன் காளி என்ற பெயர் கொண்டு அருள்புரிகிறாள்.

"கால் கலயத்தே சர்வம்

பிரம்மாண்டம் சசராசரம்

கல்பாந்தசமயே யா தாம்

காளிகாம் பூஜையாம்யஹம்"

பொருள்: எந்த தேவி ஆபத்து காலத்தில் அசையாமல் நின்று நம்மை காக்கிறாளோ அந்த தேவியை நான் பூஜிக்கிறேன்.

பஞ்சமம் ஸ்கந்தமாதா இந்த நாளில் தேவிக்கு ஸ்கந்தமாதா என்ற பெயரும் உண்டு. இதில் ஸ்கந்தன் என்பது கார்திகேயனான முருகனை குறிக்கிறது. துர்கையின் ஒன்பது ரூபங்களில் இந்த ஸ்கந்தமாதா ஒரு குழந்தையை ஆபத்திலிருந்து காப்பாற்றும் தாயின் குணம் கொண்டுள்ள அம்மனாக இருக்கிறாள். தன் குழந்தை ஆபத்தில் இருக்கும் போது ஒரு சிங்கத்தின் மேல் ஏறி வந்து குழந்தையை காப்பாற்றுவது போல் இந்த தேவியின் உருவம் அமைந்துள்ளது.

"ஓம் ஸ்யாமவர்ணாயை வித்மஹே

சக்ர ஹஸ்தாயை தீமஹி

தந்நோ வைஷ்ணவி பிரச்சோதயாத்"

வைஷ்ணவி என்ற பெயராலும் அம்பாள் அழைக்கப்படுகிறாள். அழகான ரூபம் கொண்ட இந்த அம்மனை வழிபட்டால் துன்பம் தரும் பகைவர்கள் அழிவார்கள்.

வழிபாட்டு முறை: ஐந்தாம் நாளான இன்று கடலை மாவில் பறவை போல் கோலம் போட்டு விபூதி பச்சிலையால் அர்ச்சனை செய்து பாரிஜாத பூவால் அலங்கரிக்க வேண்டும். நைவேத்தியமாக தயிர் சாதம் செய்து பந்துவராளி ராகத்தில் கீர்த்தனைகள் பாட வேண்டும். இதனால் நம்மை நெருங்கும் பகைவர்கள் அனைவரும் அழிவார்கள். இல்லத்தில் இன்பம் பெருகும் .