Published:Updated:

நவராத்திரி பிரசாதங்கள்

நவராத்திரி
பிரீமியம் ஸ்டோரி
நவராத்திரி

நவராத்திரி

நவராத்திரி பிரசாதங்கள்

நவராத்திரி

Published:Updated:
நவராத்திரி
பிரீமியம் ஸ்டோரி
நவராத்திரி

நவராத்திரிக்கும் நவகிரகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நவராத்திரி ஒன்பது நாள்களும் தேவியை மலைமகளாக, அலைமகளாக, கலைமகளாகப் போற்றி வழிபடுவது வழக்கம். நம் வாழ்விற்குத் தேவையான வீரம், செல்வம், கல்வி மூன்றையும் வழங்குமாறு அந்த ஆதிசக்தியை வழிபடுவதே நவராத்திரி.

நவராத்திரி பிரசாதங்கள்


வீரம் என்றால் அது துர்கை. துர்கை செவ்வாய் கிரகத்துக்கான தேவதை. ஜாதகத்தில் செவ்வாய் சாதகமாக இல்லாதவர்கள் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் துர்கையை வழிபட வேண்டும். துர்கையை வழிபட்டால் ராகு தோஷங்களும் நீங்கும். நவராத்திரியின் முதல் மூன்று நாள்களும் நாம் துர்கையை வழிபடுவோம். துர்கையை செவ்வரளிப்பூ கொண்டு வழிபடுவது விசேஷம். இந்த மூன்று நாள்களில் ஏதாவது ஒரு நாள் எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்து விநியோகித்தால் செவ்வாய் - ராகு தொடர்பான அசுப பலன்கள் நீங்கும். சுப பலன்கள் கூடும்.

அடுத்த மூன்று நாள்கள் மகாலட்சுமியை வழிபடு வோம். பொதுவாகவே மகாலட்சுமியைத் தாமரை மலர் கொண்டு வழிபடுவது விசேஷம். பாற்கடலில் வாசம் செய்யும் மகாலட்சுமித் தாயார் சந்திரனுக்கும் சுக்கிரனுக் கும் அதிதேவதை. இந்த மூன்று நாள்களில் கற்கண்டு சாதம், பால் பாயாசம், வெல்லத்தில் செய்த இனிப்புப் பொருள்கள் ஆகியவற்றை நிவேதனம் செய்யலாம்.

இவ்வாறு செய்து வழிபட்டால் சந்திரன் மற்றும் சுக்கிரனால் உண்டாகும் பாதிப்புகள் நீங்கி நற்பலன்கள் பெருகும். வெள்ளிக்கிழமைமைகளில் மகாலட்சுமிக்கு புட்டு நிவேதனம் செய்து வேண்டிக்கொண்டால் செல்வ வளம் சேரும்.

அடுத்த மூன்று நாள்களும் சரஸ்வதி தேவிக்குரியன. புதன் கல்வி மேம்பட உதவுபவர். சரஸ்வதி தேவியை வழிபட்டால் புதன் அருள் கிடைக்கும்.

சரஸ்வதி தேவிக்கு வெண் பட்டு சமர்ப்பிப்பது விசேஷம். அதேபோன்று வெண்தாமரை மலர்களால் அர்ச்சிப்பது சிறப்பு. வெண் தாமரை கிடைக்காதவர்கள் மல்லி, முல்லை போன்ற வெண்ணிற மலர்களால் அர்ச்சிக்கலாம்.

புதனுக்குரிய தானியம் பச்சைப் பயறு. இந்த மூன்று நாள்களில் கட்டாயம் பச்சைப் பயறு சுண்டல், பாசிப்பருப்பு சுண்டல் அல்லது பாசிப்பருப்பு பாயசம் செய்வது விசேஷம். அதேபோன்று வெண்பொங்கல் நிவேதனமும் விசேஷம்.

நவராத்திரி ஒன்பது நாளும் நவதானியங்களைக் கொண்டு சுண்டல் செய்து வழிபட்டால் நவகிரகங்களில் அனுக்கிரகம் கிடைக்கும்.

பெரும்பாலானவர்கள் கொள்ளினால் நிவேதனங்கள் செய்வதில்லை. ஆனால் கொள்ளு கேதுவுக்குப் பிரியமான தானியம். எனவே மறக்காமல் நவராத்திரியில் ஒரு நாள் கொள்ளினால் நிவேதனம் ஒன்றைச் செய்து அன்னைக்குப் படைத்து வழிபடுவோம்.

- பாரதி ஸ்ரீதர்