Published:Updated:

நவராத்திரி 7-ம் நாள்: சகல கலைகளிலும் தேர்ச்சி பெற அறிந்துகொள்ள வேண்டிய சிறப்புகள் மற்றும் ஸ்லோகம்!

சரஸ்வதி

பூஜையில் இருந்த நீலகண்டர் இந்த செய்திகள் அனைத்தையும் தன் ஞான திருஷ்டியால் அறிகிறார். உடனே முன் வைக்கப்பட்டிருந்த தீபாராதனை தட்டில் இருந்த இரண்டு கற்பூரங்களையும் எடுத்து தன் கண்களில் வைத்துக் கொள்கிறார்

நவராத்திரி 7-ம் நாள்: சகல கலைகளிலும் தேர்ச்சி பெற அறிந்துகொள்ள வேண்டிய சிறப்புகள் மற்றும் ஸ்லோகம்!

பூஜையில் இருந்த நீலகண்டர் இந்த செய்திகள் அனைத்தையும் தன் ஞான திருஷ்டியால் அறிகிறார். உடனே முன் வைக்கப்பட்டிருந்த தீபாராதனை தட்டில் இருந்த இரண்டு கற்பூரங்களையும் எடுத்து தன் கண்களில் வைத்துக் கொள்கிறார்

Published:Updated:
சரஸ்வதி

நவராத்திரி பண்டிகையின் ஏழாவது நாளில் அம்பாள் ஏழு வயது குழந்தையாக நமக்கு அருள்கிறாள். ஏழாவது நாள் அம்மன் ஷாம்பவி, காலராத்ரி என்ற நாமத்துடன் அழைக்கப்படுகிறாள்.

சரஸ்வதி
சரஸ்வதி

அம்பாளிடம் அருள் பெற வேண்டும் என்றால் அவளை நம்மோடு சம்பந்த படுத்திக்கொள்ள வேண்டும். எப்படி சம்பந்தப்படுத்திக் கொள்ளலாம்! அதற்கு ஒரு உதாரணம். நீலகண்ட தீக்ஷிதர் என்பவர் ஆனந்த சாகரஸ்தவம் என்ற நூலில் அம்பாளின் பெருமையைப் போற்றி தன்னை அவளோடு சம்பந்தப்படுத்தி கொண்டார்.

ஆனந்த சாகரஸ்தவம் உருவான லீலை!

மதுரையில் திருமலை நாயக்கர் மஹால் கட்டுவதை மேற்பார்வை பார்ப்பவராக நீலகண்ட தீக்ஷிதர் பணி புரிந்து வந்தார். வரவேற்பு மண்டபத்தில் வைப்பதற்காக திருமலை நாயக்கருடைய சிலையும் அதோடு அவருடைய ஏழு மனைவியரின் சிலையையும் சிற்பி செதுக்குகிறான். ஏழு மனைவியர் சிலையில் பட்டத்து மகாராணியின் சிலையில் மட்டும் தொடைக்கு கீழே ஒரு இடத்தில் தெறித்து போய் விரிசல் விழுகிறது. எத்தனை தடவை செய்தாலும் இவ்வாறே தெறித்து போகிறது. ஏன் தெறிக்கிறது என்று குழம்பி நீலகண்ட தீக்ஷிதரிடம் கூறுகிறான் சிற்பி. ஞான திருஷ்டியால் சாமுத்திரிகா லக்ஷணம் அறிந்த அவர் 'அங்கே மகாராணிக்கு ஒரு மச்சம் இருக்கிறது, அதனால் தான் தெறிக்கிறது அதனால் அதை அப்படியே விட்டுவிடு' என்கிறார்.

இந்த செய்தி ராஜாவின் காதுகளை எட்டுகிறது. கோபம் கொண்ட ராஜா நீலகண்டருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று காவலன் ஒருவனை கூப்பிட்டு அவரை அழைத்து வரச் சொல்கிறார். பூஜையில் இருந்த நீலகண்டர் இந்த செய்திகள் அனைத்தையும் தன் ஞான திருஷ்டியால் அறிகிறார். உடனே முன் வைக்கப்பட்டிருந்த தீபாராதனை தட்டில் இருந்த இரண்டு கற்பூரங்களையும் எடுத்து தன் கண்களில் வைத்துக் கொள்கிறார். கண்கள் எரிந்து போகிறது. அரசர் அனுப்பிய காவலன் வந்ததும், அவனிடம் "அரசர் என்ன தண்டனை தரப்போகிறாரோ அது நிறைவேற்றப்பட்டது" என்று சொல்ல சொல்கிறார். இதை கேட்ட அரசன் நீலகண்ட தீக்ஷிதரின் மகிமையை அறிந்து ஓடி வந்து அவரது கால்களில் விழுந்தான்.

மதுரை மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன்

இப்படி கண்களை இழந்த அவர் மீனாட்சி அம்மனை பூஜித்து ஆனந்த சாகரஸ்தவம் என்ற அதியற்புதமான பாடல்களைச் செய்கிறார். அதில் ஒரு ஸ்லோகம்,

"ஸ்யாத் கோமளம் யதி மனோ விஸ்வமாதஹா"

என்று பாடுகிறார். அதாவது அம்பாள் தன் முன்னால் உட்கார்ந்து தான் பாடுவதை கேட்கிறாள் என்றே நினைத்துப் பாடுகிறார். 'விஸ்வமாதாவாக இருக்கின்ற அம்பாளே எனக்கு உன்னிடம் சம்பந்தம் எப்படியாவது இருக்க வேண்டும் அம்மா. என் மனம் தீய எண்ணங்கள் நிரம்பி கல்லாக மாறி இருக்கிறது. அப்பொழுதும் உன் உருவாகிய கல்லும் என் மனமாகிய கல்லும் ஒன்றாகி சம்பந்தம் கொண்டு இருக்க வேண்டும்' என்று வேண்டுகிறார். 'என்ன தவறு செய்தாலும் நீ தான் அம்மா என்னை காப்பாற்ற வேண்டும்' என்றெல்லாம் வேண்டுகிறார்.

அப்படிப்பட்ட அம்மனை இந்த நவராத்திரி ஏழாம் நாளில் ஏழு வயது குழந்தையாக பாவித்து ஆராதனை செய்ய வேண்டும்.

மதுரை மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன்

ஏழாம் நாள் சிறப்புகள்:

இன்று அம்மன் ஷாம்பவி அல்லது ஷம்புபத்தினி என்ற ரூபத்தில் அருள்புரிகிறாள். அதற்கான ஸ்லோகம்,

"அக்காரனாத் ஸமுத்பத்திஹி

யான்மைஹ ப்ரக்கீர்த்திகா

யஸ்யாஹ தாம் ஸுகதாம்

தேவிம் ஷாம்பவிம் பூஜையாம்யஹம்"

பொருள்: எந்த தேவி பிற காரணத்தை எதிர்பாராமல் தானாகவே அன்பையும் சுகத்தையும் பொழிகிறாளோ அந்த ஷாம்பவி தேவியை நான் பூஜிக்கிறேன். காலராத்ரி என்ற பெயர் கொண்டும் அம்மன் இந்த ஏழாம் நாளில் பூஜிக்கப்படுகிறாள்.

'ஷங்கரி ப்ராஹதி சப்தமம் காலயாத்ரி!'

அதாவது சங்கரி ப்ரஹதி என்ற நாமத்தில் எல்லாம் அம்பாள் ஆராதிக்கப்படுகிறாள் என்று அர்த்தம். மேலும் இந்த ஏழாம் நாளில் அம்மன் சரஸ்வதி ரூபத்திலும் அருள்கிறாள்,

'ஓம் வாக்தேவ்யை வித்மஹே

வ்ரிஞ்சி பத்ன்யை ச தீமஹி

தந்நோ வாணி ப்ரசோதயாத்!'

இப்படி ஸ்லோகம் சொல்லி அம்மனை இந்த ஏழாம் நாளில் வழிபட்டால் கல்வி செல்வம் பெருகும். சகல கலைகளிலும் தேர்ச்சி பெறலாம். எல்லா சபையிலும் முந்தியிருக்கச் செய்யும் இந்த வழிபாடு.

சரஸ்வதி அம்மன்
சரஸ்வதி அம்மன்

வழிபாட்டு முறை:

பூ மற்றும் மண் கொண்டு திட்டாணி கோலம் போட்டு, தும்பை பூவால் அர்ச்சனை செய்து, தாழம்பூவால் அலங்கரிக்க வேண்டும். நைவேத்தியமாக எலுமிச்சை சாதம் வைத்து வணங்க வேண்டும். பிலஹரி ராகத்தில் பாடி அம்மனை ஆராதிக்க வேண்டும். இந்த முறையில் அம்மனை வணங்கினால் கலைகளில் தேர்ச்சி உருவாகும். பதவி உயர்வு வரும். தேக அழகு கூடும். அரசு காரியங்களில் வெற்றி கிடைக்கும். நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்கள் எல்லாம் விலகி நல்ல எண்ணங்கள் உருவாகும்.