Published:Updated:

வருவாள் அருள்வாள் கலைவாணி!

கலைவாணி
பிரீமியம் ஸ்டோரி
கலைவாணி

கலைவாணி

வருவாள் அருள்வாள் கலைவாணி!

கலைவாணி

Published:Updated:
கலைவாணி
பிரீமியம் ஸ்டோரி
கலைவாணி

அகத்தில் அழைத்தால்...

வித்யாதி தேவதை, கலை மடந்தை, அறிவு தெய்வம் என்று சரஸ்வதிக்கு உன்னதமான ஸ்தானம் கொடுத்திருக்கிறோம். கம்பர், ஒட்டக்கூத்தர், குமரகுருபரர், பாரதியார் போன்றவர்கள் தமிழில் அழகாக ஸ்தோத்திரம் செய்திருக்கிறார்கள். அவற்றை ஓதுகிறோம். முத்துசுவாமி தீக்ஷிதர் முதலானவர்கள் அவள்மீது செய்திருக்கும் கீர்த்தனங்களைப் பாடுகிறோம். குழந்தையாக ஸ்கூல் போகும்போதே அவள் மேல் ச்லோகங்கள் சொல்லி பிரியத்துடன் பக்தி பண்ண ஆரம்பித்துவிடுகிறோம்.

சரஸ்வதி
சரஸ்வதி


இவ்வளவு இருந்தும்... தமிழ்நாடு பூராவிலும் கூத்தனூர் என்ற இடத்தில் மட்டும்தான் சரஸ்வதி ஆலயம் இருக்கிறது. காமாக்ஷி அம்மன் ஆலயத்தில் சரஸ்வதிக்கு சந்நிதி உண்டு. ஆனாலும் அதுகூட பிரஹ்ம பத்தினியான சரஸ்வதி இல்லை; ராஜ ராஜேஸ்வரிக்கு மந்த்ரிணியாக இருக்கும் ராஜ ச்யாமளையான மஹா சரஸ்வதி என்று சொல்வதுண்டு. சந்நிதியுள்ள மற்ற கோயில்களிலும் ஏதோவோர் இடத்தில்தான் இருக்கிறது. ஏன் இப்படி?

சரஸ்வதி பிரம்மாவின் நாக்கிலேயே உட்கார்ந்துகொண்டிருக்கும் பதிவ்ரதை. அவள் எப்படி தன் பதிக்குக் கோயில் இல்லாதபோது, தான் மட்டும் கோயில் கொள்வாள். அதனால்தான் அவளுக்குப் பெரியளவில் கோயில்கள் இல்லை. ஆனால், அகத்திலே நாம் கூப்பிட்டால் அவள் வருவாள். நவராத்திரி பூஜை பண்ணும்போது துர்கா - லக்ஷ்மியுடன் அவளும் வந்து சரஸ்வதி பூஜை பெறுவாள்!

- காஞ்சி மஹா பெரியவர்

மூன்று தேவியராய் சரஸ்வதி!

வாக்தேவி மூன்று காலங்களில் காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி என்று மூன்று வடிவங்களைக் கொள்கிறாள். இந்த மூன்று வடிவங் களுடன் அவள் வழிபட்ட தலம் திருவீழிமிழலை. இங்குள்ள மூன்று லிங்கங்கள் காயத்ரீசுவரர், சாவித்திரீசுவரர், சரஸ்வதீசுவரர் என்று அழைக்கப்படுகின்றன. அதேபோல், ராமேஸ்வரத்தில் சரஸ்வதி மூன்று வடிவங்களிலிருந்து வழிபட்டு அமைத்த தீர்த்தங்கள் முறையே காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி தீர்த்தங்கள் என்ற பெயரில் வரிசையாக அமைந்துள்ளன.

பிறைசூடிய கலைமகள்!

ஞான சரஸ்வதி சிவபெருமானிடமிருந்து வெளிப்படும் ஞானப் பெண் என்று ஞானநூல்கள் சில போற்றுகின்றன. ஆகவே அவள், சிவனாரைப் போலவே ஜடாமகுடம் தரித்து அதில் பிறைச் சந்திரனைச் சூடியுள்ளாள். தத்துவநிதி நூலானது `சரஸ்வதி, சந்திரனைச் சூடி அமுதக் கலசத்தை ஏந்தினாள்’ என்று கூறுகிறது. கடலங்குடியில் கிடைத்து, இந்நாளில் தஞ்சாவூர் அருங்காட்சியகத்திலுள்ள சரஸ்வதியின் முடியில் சந்திரனைக் காணலாம்.

நள்ளிரவில் ஒலிக்கும் பூஜை மணி!

உஜ்ஜயினியில் பன்னிரண்டு ஜோதிர்லிங்க மூர்த்திகளில் ஒருவரான மகாகாலேஸ்வரரைத் தரிசிக்கலாம். இதுவொரு சக்தி பீடம். இங்கே அருளும் சரஸ்வதி தேவி காளி வடிவில் இருக்கிறாள். அவளின் திருப்பெயர் நீலகண்ட சரஸ்வதி. இந்த தேவியின் அருளால் கவிபாடும் திறமை பெற்றவரே மகாகவி காளிதாஸர்.

மத்தியப் பிரதேசத்தில் `சட்னா’ எனும் நகரில் மலைக்கு மேல் சாரதாதேவியாக எழுந்தருளியுள்ளாள் அன்னை. இங்கே இவள் நடத்தும் அருளாடல்கள் அற்புதமானவை. இரவில் கோயில் நடை மூடப்பட்ட பிறகும், உள்ளே பூஜைகள் நடை பெறும் ஓசை கேட்குமாம். ஆலா என்றொரு பக்தர் கோயிலுக்குள் இருந்து விடியும்வரை பூஜை நடத்துவாராம். இதையொட்டி இரவில் குன்றின் மேல் எழும்பும் பேரொளி ஒன்று கோயிலைச் சுற்றி வட்டமிடுமாம். பக்தர்கள் அந்தப் பேரொளியை பரவசத்துடன் தரிசித்து மகிழ்வார்களாம்!

- தொகுப்பு: வி.ஜெ.செல்வராசு