Published:Updated:

நவராத்திரி விரதம் தொடங்குவது எப்போது?

நவராத்திரி விரதம்
பிரீமியம் ஸ்டோரி
நவராத்திரி விரதம்

நவராத்திரி விரதம்

நவராத்திரி விரதம் தொடங்குவது எப்போது?

நவராத்திரி விரதம்

Published:Updated:
நவராத்திரி விரதம்
பிரீமியம் ஸ்டோரி
நவராத்திரி விரதம்

? புரட்டாசியில் வரும் நவராத்திரியின் மகத்துவம் என்ன?

புரட்டாசி மாதத்தில் மஹாளய அமாவாசை முடிந்து அடுத்த நாள் பிரதமை முதல் வரும் ஒன்பது நாள்கள், `நவராத்திரி’ என்று போற்றக்கூடிய - அம்பாளுக்கு உகந்த திருநாள்கள் ஆகும். அன்னை பராசக்தி துர்கையாகவும், மஹாலக்ஷ்மீயாகவும், மஹா ஸரஸ்வதியாகவும் இருந்து நம்மை வழிநடத்துகிறாள்.

நவராத்திரி விரதம்
நவராத்திரி விரதம்


நாம் ஆரோக்கியமாக, தைரியமாக, செல்வம் நிறைந்தவர்களாக, புத்தி உள்ளவர்களாக இருக்கவேண்டும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் சிரமங்களை அனுபவிக்க வேண்டிவரும். இவற்றை அருளும் தேவியர் துர்கா, லக்ஷ்மீ, சரஸ்வதி. இந்த மூவரும் கூடிய சண்டிதேவியாக அம்பிகையை வழிபடும் அற்புதக் காலமே சாரதா நவ ராத்திரி புண்ணிய காலமாகும்.

? நவராத்திரி குறித்து புராணங்கள் சொல்வது என்ன?

ஸ்ரீமத் தேவிபாகவத புராணத்தில், வியாச முனிவரிடம் நவராத்திரி காலத்தின் மகத்துவத்தையும், அந்த விரதத்தை அனுஷ்டிக்கும் விபரங்களையும் கேட்கிறான் ஜனமஜேயன்.

அதற்கு வியாச மகரிஷி, ‘நவராத்திரி இரண்டு வகை. ஒன்று வஸந்த ருதுக் காலத்தில் (சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு 9 நாட்கள்) கொண்டாடப்படும் வஸந்த நவராத்திரி. மற்றொன்று சரத் காலத்தில் (புரட்டாசி அமாவாசைக்குப் பிறகு 9 நாட்கள்) கொண்டாடப்படும் சரத் நவராத்திரி’ என்று விளக்குகிறார் (சரத்காலே விசேணே... வஸந்தே ச ப்ரகர்தவ்யம்..).

இவை இரண்டும் எமதருமனின் இரண்டு கோரைப் பற்கள் போன்றவை. ஆகவே, குறிப்பிட்ட இந்தக் காலகட்டத்தில் அனைத்துப் பிராணிகளுக்கும் தீயவை ஏற்பட வாய்ப்பு உண்டு. நோய்கள், இயற்கைச் சீற்றங்கள், மனக்குழப்பங்கள் போன்றவையும் ஏற்படலாம். ஆகவே இந்த காலங்களில் புத்திமான்களும், நல்லதையே விரும்புபவர்களும் சண்டிதேவியை ஆராதனம் செய்ய வேண்டும் என்று வியாச பகவான் கூறுகிறார்.

ராவணனை வதம் செய்யும் முன் ராமன் நவராத்திரி விரதம் அனுஷ்டித் தார் என்றும், அவருக்கு இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறையை நாரதர் விளக்கினார் என்றும் வியாச மகரிஷி தேவி பாகவத புராணத்தில் பதிவு செய்துள்ளார். அதேபோல், கிருஷ்ண பகவான் துர்கையின் ஓர் அம்சமான ஸ்ரீகாத்யாயனி தேவியைக் குறித்து விரதம் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

ஷண்முக சிவாச்சார்யர்
ஷண்முக சிவாச்சார்யர்


? நவராத்திரி வழிபாடுகளில் அம்பிகைக்கு முக்கியத்துவம் ஏன்?

‘கலௌ சண்டி விநாயகௌ’ என்ற வாக்கின்படி இந்தக் கலி காலத்தில், நம் இன்னல்கள் யாவற்றையும் விலக்கி நன்மைகளைப் பெற்றிட விநாயகர் வழிபாடும், சண்டிகையின் வழிபாடும் உடனடியாக உதவி செய்யும் என்பது முன்னோர் வாக்கு.

மேலும், நம் இந்து மதத்தில் பெண்கள் பூஜிக்கத் தகுந்தவர்களாக போற்றப்படுகிறார்கள். எங்கு பெண்கள் போற்றப்படுகின்றனரோ, அங்கு அனைத்து தேவர்களும் சந்தோஷம் அடைகிறார்கள் என்று நமது சாஸ்திரம் கூறுகிறது. உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து பெண்மணிகள் வடிவங்களாக எல்லாம்வல்ல பராசக்தியானவள் விளங்குகிறாள். ஆகவே, அந்த சக்தியைப் போற்றும் வகையில் அவளுக்கு உரிய திருவிழாவாக நவராத்திரி வைபவம் திகழ் கிறது. ஆகவே, இந்த ஒன்பது நாள்களிலும் பெண்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு விருப்பமானவற்றை அளித்து திருப்தி செய்வதால் பராசக்தியானவள் திருப்தி அடைகிறாள்.

? ஒன்பது நாள் கொண்டாட்டம் ஏன்?

‘நவ’ எனில் ஒன்பது; ‘ராத்ரீ’ எனில் இரவு. ஆக ‘நவ ராத்ரீ’ (நவ ராத்திரி) எனில், 9 இரவுகள் கூடிய நாட்கள்.

‘நவ’ எனில் ‘புதுமையான’ என்றும் பொருள் உண்டு. ஆக, இந்த நாட்களில் நாம் கடைப்பிடிக்கும் பூஜைகளினால் நமக் குப் புதுமையான புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதேபோல் `ராத்ரம்' என்றால் அறிவு என்றும் பொருள்கொள்ளலாம். எனவே, அம்பிகையின் அருளால் புதுமையான அறிவு-ஞானம் கிட்டும் காலம் என்றும் நவ ராத்திரியைச் சொல்லலாம். அம்பிகையே உலகுக்கெல்லாம் மூலக் கரு (‘விச்வஸ்ய பீஜம்’). நவராத்திரியில் அவளை வழிபடுவ தால், இந்தப் பிரபஞ்சம் முழுக்க வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை பயக்கும் என்பது நிச்சயம்.

எப்படி ஒரு மருந்தில் பலவித ரசாயனங்களின் கலவை உள்ளதோ அதுபோன்று கல்வி, செல்வம், வீரம் ஆகிய முப்பொருட்களும் சரியான கலவையில் அமைந்தால்தான் ஒரு மனிதனின் வாழ்க்கை இன்பமயமாக அமையும். இவற்றை அருளும் முப்பெருந்தேவியரை-ஆதிசக்தியின் வெவ்வேறு வடிவங்களான துர்கா, லக்ஷ்மீ, சரஸ்வதியை இந்த ஒன்பது தினங்களிலும் முறையே மும்மூன்று நாள்களில் வழிபட்டுப் பலன் பெற வேண்டும்.

துர்கா
துர்கா


? நவ ராத்திரி விரதம் தொடங்குவது எப்போது?

ஆச்வின மாதம் அதாவது, புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்த நாளை (பிரதமை முதல்) நவராத்திரியின் தொடக்க நாளாகக் கொள்ளவேண்டும் என்கிறது ஸ்கந்த புராணம். எவரொருவர் இந்த விரதத்தை தொடர்ந்து 9 நாள்கள் கடைப்பிடிக்கிறாரோ, அவருக்குத் தேவர்களுக்குக் கிட்டாத இன்பமும் பிணியின்மையும் வரமாகக் கிட்டும்; சத்ருக்கள் தொல்லையும் நீங்கும் என்றும் விவரிக்கிறது அந்தப் புராணம்.

9 நாள்கள் விரதம் இருக்க முடியாத வர்கள், கடைசி மூன்று நாள்களிலோ அல்லது அஷ்டமி, நவமி ஆகிய தினங் களிலோ அம்பிகையை ஆராதித்தால்... துக்கம் இல்லாதவர்களாக (எப்போதும் ஆனந்தம் கொண்டவர்களாக) இருப்பார் கள் என்று நவராத்திரியின் மகிமையை விவரிக்கிறது பவிஷ்ய புராணம்.

அதேபோன்று, மூல நட்சத்திரம் அல்லது நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருள் களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல் அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருள் களை கண்டிப்பாக பயன்படுத்துதல் மிகவும் சிறப்பு.

கொலு
கொலு


? கொலு, பாடல், பிரசாத விநியோகம் என விரிவான வழிபாடுகள் செய்ய இயலாத அன்பர்கள் என்ன செய்வது?

இதற்கு மிக அருமையாக பதில் சொல் கிறது பவிஷ்ய புராணம்.

‘இதுபோன்ற உபசாரங்கள் இல்லை என்றாலும், பூவும் நீரும் அளித்தாலே போதும்; அதுவும் இல்லையென்றாலும் உண்மையான பக்தியுடன், ‘அம்மா என்னைக் காப்பாற்று’ என்று சக்தியைச் சரணடைந்தாலே போதும்; நாம் கேட்டதை மட்டுமன்றி, நமக்கு நன்மையானவை அனைத்தையும் அளிக்க எல்லாம்வல்ல அன்னை காத்துக் கொண்டிருக்கிறாள்’ என்கிறது அந்தப் புராணம்.

- பதில்கள் தொடரும்...